September 28, 2022
ராசிபலன்

இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 19 – 09 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

இன்று நீங்கள் உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு நீண்டநாள்களாகத் தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 6

ரிஷபம்:

இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. சிலருக்கு நண்பர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். பணிச்சுமை அதிகரிப்பதால் சற்று சோர்வு உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும்.

அதிர்ஷ்ட எண் – 5

மிதுனம்:

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். பிள்ளைகளின் உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 3

கடகம்:

செலவுகள் அதிகரிக்கும் நாள். என்றாலும் தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 6

சிம்மம்:

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட எண் – 5

கன்னி:

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். ஆனாலும் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். மற்றவர் களிடம் பேசும்போது நிதானம் அவசியம். தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர் பார்த்தபடியே விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 3

துலாம்:

உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்கள் முயற்சியில் எதிர்ப்புகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். துணிச்சலுடன் முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட எண் – 5

விருச்சிகம்:

இன்றைக்கு பதற்றம் தவிர்த்து எதிலும் நிதானமாகச் செயல்படவும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண் சச்சரவுகள் ஏற்படும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 7

தனுசு:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் மனைவிக்கிடையே பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 4

மகரம்:

தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிற்பகலுக்கு மேல் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

அதிர்ஷ்ட எண் – 4

கும்பம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படும். அடிக்கடி மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற் பட்டு நீங்கும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்றாலும், பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண் – 2

மீனம்:

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 6

Related posts

Leave a Comment