November 27, 2022
ராசிபலன்

இன்று திங்கட் கிழமை செப்டம்பர் 26 – 09 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

இன்று நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 4

ரிஷபம்:

இன்று நீங்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடை பிடிக்கவேண்டிய நாள். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 4

மிதுனம்:

இன்று உங்கள் மனதில் அவ்வப்போது இனம் தெரியாத சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வருகை செலவுகளை ஏற்படுத்தும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைக் தவிர்த்து விடவும். வெளியில் செல்லும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில சிரமங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் – 2

கடகம்:

இன்று நீங்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய் வீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவை.

அதிர்ஷ்ட எண் – 5

சிம்மம்:

இன்று எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மன கசப்புகள் நீங்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட எண் – 3

கன்னி:

இன்று நீங்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும்.

அதிர்ஷ்ட எண் – 2

துலாம்:

இன்று தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகு முறை அவசியம்.

அதிர்ஷ்ட எண் – 4

விருச்சிகம்:

இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து ஈடுபடவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். புதிய முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் வீண் செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் – 6

தனுசு:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரும் நாள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 3

மகரம்:

இன்று உங்கள் உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.

அதிர்ஷ்ட எண் – 3

கும்பம்:

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதில் நேரமும் பணமும் விரயமாகும். வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார். என்றாலும் அனைத்திலும் நிதானம் தேவை. பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண் – 1

மீனம்:

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் பொருள்சேர்க்கையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட எண் – 7

Related posts

Leave a Comment