November 27, 2022
ராசிபலன்

இன்று சனிக்கிழமை ஆகஸ்ட் 06 – 08 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

அதிர்ஷ்ட எண் – 4

ரிஷபம்:

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். வேலையில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 3

மிதுனம்:

சாதுர்யமாக பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண் – 1

கடகம்:

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரிவடையும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வேலையில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் விலகும்.

அதிர்ஷ்ட எண் – 5

சிம்மம்:

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புது வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 3

கன்னி:

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். வேலையில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

அதிர்ஷ்ட எண் – 2

துலாம்:

உங்களுடைய தளர்ந்து போன தன்னம்பிக்கை மீண்டும் துளிர் விடக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று உங்களுடைய உழைப்பை மட்டும் கொடுப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் காண்பீர்கள். வேலையில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதிப்பதில் உத்வேகம் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.

அதிர்ஷ்ட எண் – 4

விருச்சிகம்:

இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. புதிய முயற்சிகளை துவங்கும் பொழுது கவனம் தேவை. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உயர்வான நிலை உண்டாக மற்றவர்களை காட்டிலும் கூடுதல் பொறுப்புணர்வு தேவை. வேலையில் உள்ளவர்கள் உபயோகமுள்ள வழியில் உங்களை ஆற்றலை செலுத்துவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் – 6

தனுசு:

இந்த நாள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவது நல்லது. பொருளாதார ரீதியான பற்றாக்குறை சீராகும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுக்க முடிவுகளில் தடுமாற்றம் ஏற்படலாம் கவனம் தேவை. வேலையில் உள்ளவர்களுக்கு பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுக்காமல் பேசுவது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் – 3

மகரம்:

இந்த நாள் நீங்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. வியாபார ரீதியான போட்டிகள் மேலும் வலுவாகும் என்பதால் உங்களுடைய திறமையை கூடுதலாக வளர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கலாம் சிக்கனம் தேவை. வேலையில் உள்ளவர்களுக்கு வேலை சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகம் ஏற்படும். ஆரோக்கிய அக்கறை தேவை.

அதிர்ஷ்ட எண் – 3

கும்பம்:

இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் வேண்டும். மற்றவர்களுடைய விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகளில் விழிப்புணர்வு தேவை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. வேலையில் உள்ளவர்களுக்கு கடுமையான முயற்சி வெற்றியை தரும். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட எண் – 9

மீனம்:

இந்த நாள் சுதந்திரமான உணர்வை தரும் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு பெருக இருக்கிறது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. வேலையில் இருப்பவர்கள் முயற்சியின் பலனாக நினைத்ததை சாதிப்பீர்கள். தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண் – 7

Related posts

Leave a Comment