January 31, 2023
ராசிபலன்

இன்று சனிக்கிழமை அக்டோபர் 08 – 10 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

இன்று நீங்கள் தடைகளை தாண்டி முன்னேறும் நாள். இன்று உங்கள் குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். வேலையில் சக ஊழியர்களால சங்கடங்கள்வரும்.

அதிர்ஷ்ட எண் – 5

ரிஷபம்:

இன்று நீங்கள் பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். இன்று குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினை களைத் தீர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.

அதிர்ஷ்ட எண் – 4

மிதுனம்:

இன்று உங்கள் முயற்சிகள் பலிதமாகும் நாள். இன்று கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். வேலையில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள்.

அதிர்ஷ்ட எண் – 2

கடகம்:

இன்று உங்களுக்கு புதிய பாதை தெரியும் நாள். இன்று நீங்கள் உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் – 6

சிம்மம்:

இன்று உங்களுக்கு பொறுமைத் தேவைப்படும் நாள். இன்று சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். வேலையில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 4

கன்னி:

இன்று உங்கள் தன்னம்பிக்கை துளிர் விடும் நாள். இன்று உங்கள் குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். வேலையில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட எண் – 3

துலாம்:

இன்று உங்களுக்கு அமோகமான நாள். இன்று உங்கள் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். வேலையில் உயரதிகாரி சில சூட்சுமங்களை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 5

விருச்சிகம்:

இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள். இன்று உங்களுக்கு புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையில் புதிய சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 7

தனுசு:

இன்று உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள். இன்று உங்கள் எதிர்ப்புகள் அடங்கும். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழையகடனை குறித்து அவ்வப்போது யோசிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். வேலையில் சூட்சுமங்களை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 4

மகரம்:

இன்று உங்கள் தைரியம் கூடும் நாள். இன்று நீங்கள் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.

அதிர்ஷ்ட எண் – 4

கும்பம்:

இன்று உங்களுக்கு அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். இன்று உங்கள் குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.

அதிர்ஷ்ட எண் – 2

மீனம்:

இன்று உங்களுக்கு சகிப்பு தன்மை தேவைப்படும் நாள். இன்று ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுபார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். வேலையில் யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 8

Related posts

Leave a Comment