November 27, 2022
ராசிபலன்

இன்று சனிக்கிழமை செப்டம்பர் 24 – 09 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

அதிர்ஷ்ட எண் – 8

ரிஷபம்:

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணையால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் விடுப்பில் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண் – 8

மிதுனம்:

இன்று உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சி யான செலவாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பதுடன், புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 6

கடகம்:

இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண் – 9

சிம்மம்:

இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி இருவரும் ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர் களால் செலவுகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.

அதிர்ஷ்ட எண் – 8

கன்னி:

இன்று உங்களுக்கு அதிகரிக்கும் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் தலையீடை அனுமதிக்கவேண்டாம். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும்.

அதிர்ஷ்ட எண் – 6

துலாம்:

இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கத்தை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 8

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 1

தனுசு:

இன்று நீங்கள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

அதிர்ஷ்ட எண் – 7

மகரம்:

இன்று நீங்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். வீண்செலவுகளுக்கும் வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட எண் – 7

கும்பம்:

நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.

அதிர்ஷ்ட எண் – 5

மீனம்:

அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக் கூடும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.

அதிர்ஷ்ட எண் – 3

Related posts

Leave a Comment