January 31, 2023
ராசிபலன்

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 17 – 07 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். வேலையில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மதிப்பு கூடும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 7

ரிஷபம்:

உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்களால் ஆதயாம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது யுத்திகளை கையாழுவீர்கள். வேலையில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 9

மிதுனம்:

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 7

கடகம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை சரியாக பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலையில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 2

சிம்மம்:

எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். வேலையில் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 9

கன்னி:

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 7

துலாம்:

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். வேலையில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்ததை நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 1

விருச்சிகம்:

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். வேலையில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 3

தனுசு:

சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். வேலையில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 9

மகரம்:

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அழகும் இளமையும் கூடும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 8

கும்பம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனம்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். வேலையில் வளைந்து கொடுத்து போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் – 6

மீனம்:

குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களுடன் பகைமை வந்து செல்லும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வேலையில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 4

Related posts

Leave a Comment