January 31, 2023
ராசிபலன்

இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 23 – 10 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

இன்று நீங்கள் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 6

ரிஷபம்:

இன்று உங்கள் மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்

அதிர்ஷ்ட எண் – 5

மிதுனம்:

இன்று நீங்கள் சாதிக்கவேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளில் நன்றாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பணிச் சுமை அதிகரிப்பதால் உடல் அசதி உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட எண் – 3

கடகம்:

இன்று உங்கள் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 7

சிம்மம்:

இன்று நீங்கள் சிந்தித்து செயல்படவேண்டிய நாள். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும்

அதிர்ஷ்ட எண் – 5

கன்னி:

இன்று உங்களுக்கு பல வகைகளிலும் அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாகும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 4

துலாம்:

இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். முக்கிய முடிவு எடுப்பதில் அவசரம் வேண்டாம். நண்பர்கள் பணம் கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட எண் – 6

விருச்சிகம்:

இன்று நீங்கள் எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட எண் – 8

தனுசு:

இன்று நீங்கள் சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 5

மகரம்:

இன்று நீங்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள். செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும்.

அதிர்ஷ்ட எண் – 5

கும்பம்:

இன்று நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 3

மீனம்:

இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நீண்டநாள்களாக தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசுவது உற்சாகம் தரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சுமுகமாகப் பழகுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் -9

Related posts

Leave a Comment