September 28, 2022
செய்திகள் தகவல்

இன்று ஆசிரியர் தினம் – இதன் வரலாற்று முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

கல்வி பணிகளில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூறும், நாளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதே நாளில் உலகளவில் பொதுவாக அக்டோபர் ஐந்தாம் தேதியும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள், நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக திகழ்கின்றனர்.

சுயநலம் பாராமல் மற்றவர்களின் குழந்தைகள் முன்னேற உழைப்பவர்களாக இருக்கிறார்கள் ஆசிரியர்கள். ஊதியம் வாங்கி வேலை பார்க்கிறோம் என்ற உணவை தாண்டி, பல தியாகங்களை செய்து அர்ப்பணிப்புடன் தங்கள் மாணவர்களின் உயர்வுக்கு காரணமாகவும் அமைகிறார்கள் ஆசிரியர்கள்.

கல்வி தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில், கடந்த 1994ம் ஆண்டு உலக ஆசிரியர் தினம் அக்டோபர் ஐந்தாம் தேதி அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) அறிவித்தது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் ஐந்தாம் தேதி இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், சீனாவில் செப்டம்பர் பத்தாம் தேதியும், மலேசியாவில் மே பதினாறாம் தேதியும், ஸ்பெயினில் நவம்பர் இருபத்திஏழாம் தேதியும் மற்றும் ஈராக்கில் மார்ச் ஒன்றாம் தேதியும் என வெவ்வேறு தேதிகளில் ஆசியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

அக்டோபர் ஐந்தாம் தேதி சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன வென்றால், 1966ம் ஆண்டில், ஒரு சிறப்பு அரசாங்கங்களுக்கிடையேயான மாநாட்டின் போது ஆசிரியர்களின் நிலை குறித்த யுனெஸ்கோ பரிந்துரையை அம்மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்டதே ஆகும்.

ஆசிரியர் தினத்தன்று, குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப் படுகின்றன. ஆசிரியர்களாக அலங்கரித்து, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் வகுப்புகளில் சொற்பொழிவுகளை மேற்கொள்கின்றனர்.

அதுமட்டுமின்று, சிறந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் டாக்டர். ராதா கிருஷ்ணன் விருதுகள் வழங்கி வருகின்றன.

Related posts

Leave a Comment