ராசிபலன்

இன்று செவ்வாய்க்கிழமை ஜூன் 28- 2022- இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:
வேலை பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவார்கள். பெண்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மூலதனத்துக்கு தேவையான பணம் வந்து சேரும். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். அலுவலகப் பணிகள் அதிக சுமையைக் கொடுக்கும். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம்:
பழக்கத்தின் மூலமாக பணப் புழக்கத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் இன்பச் சுற்றுலா செல்வீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பொறுமையும் நிதானமும் இருந்தால் தொழில்துறையில் உயர்ந்த வளர்ச்சியைப் பெற முடியும். பணியாளர்கள் கூடுதல் உழைப்பை போட வேண்டும். பழைய பாக்கிகள் வேகமாக வசூலாகும். கஷ்டங்கள் விலகும்.
அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம்:
இந்த நாள் உங்களுடைய பழைய நினைவுகளை அசை போட்டுப் பார்க்க கூடிய அமைப்பு உண்டு. நண்பர்கள் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் உள்ளவர்கள் எவரையும் நம்பி வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. வேலையிலிருப்பவர்களுக்கு இழப்புகள் ஏற்படலாம் எனவே பொறுமை தேவை. கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 6

கடகம்:
போட்டி பந்தயங்கள் அனுகூலமாக இருக்காது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பார்க்க இயலாது. தொழிலில் போட்டிகள் தலைதூக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்க தாமதமாகும். வேலையிடத்தில் கடின உழைப்பைப் போட வேண்டும். அரசுப்பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிக்குச் செல்லவேண்டும். கைப் பொருள்களை பத்திரமாக வைத்திருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம்:
நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை தொந்தரவு கொடுத்து வந்த நோய்கள் விலகும். இழுபறியாக இருந்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். உபரி வருமானத்தில் பழைய பாக்கிகளை அடைப்பீர்கள். மாணவர்களின் கல்வித் திறமை அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பால் நன்மை அடைவீர்கள். வியாபாரத்தில் வருமானம் கூடும்.
அதிர்ஷ்ட எண்: 8

கன்னி:
பெரியவர்களின் ஆசி உங்களுக்கு பக்க பலமாகத் திகழும். அரசாங்கத்தின் மூலம் நல்ல காரியங்கள் நடக்கும். உங்கள் நடத்தையால் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையிடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். தொழிலுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகி ஓடும். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்கி சந்தோஷப்படுவார்கள். குடும்பத்தில் குதூகலம் கொப்பளிக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7

துலாம்:
விரோதிகள் உங்களை வீழ்த்த நினைப்பார்கள். மன உறுதியால் வெற்றி பெறுவீர்கள். தொழிலுக்கு இருந்த இடையூறுகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பங்குப் பரிவர்த்தனை சிறப்பாக இருக்காது. நிலம் வாங்கி விற்பது மந்தமாக நடக்கும். பண வரவு செலவில் எச்சரிக்கையாக இருங்கள். உறவுகளுக்குச் செலவு செய்ய வேண்டிவரும்.
அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிகம்:
மூளைக்குள் திட்டம் தீட்டி வேலைக்கு வடிவம் கொடுங்கள். வெளியூர்ப் பயணங்கள் அவ்வளவு சிறப்பாக அமையாது. அரசு வேலைகள் சுணக்கமாகவே நடக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமாக இருக்கும். கடனைக் கொடுக்க முடியாமல் சிலர் தடுமாற்றம் அடைவார்கள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.
அதிர்ஷ்ட எண்: 2

தனுசு:
ஏட்டிக்குப் போட்டியாக பேசிய இல்லத்தரசி இணக்கமாக இருப்பார். பந்தயங்கள் லாபத்தை கொடுக்கும். ரியல் எஸ்டேட் அமோகமாக நடக்கும். பங்குப் பரிவர்த்தனைகள் உயர்ந்த நிலைக்கு செல்லும். வேலை இடத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். இடமாற்றம் ஏற்படும். கையில் பணம் தாராளமாக புரளும். உற்சாகமான பேச்சால் உறவுகளை மேம்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 8

மகரம்:
இரும்பாக இருக்கும் மனத்தை கரும்பாக மாற்றுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இடையில் ஏற்படும் சின்னத் தொல்லைகளைக் கிள்ளி எறிவீர்கள். ஆடம்பரமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வீர்கள். விருந்தினர்களுக்கு வீட்டில் சுவை மிகுந்த உணவு கொடுப்பீர்கள். தொந்தரவு கொடுத்த நோய் விலகும்.
அதிர்ஷ்ட எண்: 8

கும்பம்:
பணப்புழக்கம் இருந்தாலும் மனக்கவலை அதிகரிக்கும். தேவையில்லாத சிந்தனை தூக்கத்தைக் கெடுக்கும். மனைவி மக்கள் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் உரிய நேரத்தில் உதவி செய்வார்கள். தொழில்துறை சரளமாக நடக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான லாபம் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் செலவு கூடும்.
அதிர்ஷ்ட எண்: 6

மீனம்:
வீடு வாங்கி பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள்.அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள். தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முன்னேற்றமான பலனும் கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். ஆன்மீகப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். நீண்டநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட எண்: 3

Related posts

Leave a Comment