January 31, 2023
ராசிபலன்

இன்று திங்கள் கிழமை ஜூலை 04 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

ஏதோ ஒரு மனக்கவலை உங்கள் இதயத்தை பிழிந்து எடுக்கும். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் பொருள் இழப்பு உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டால் வீண் தொல்லைகள் வீடு வரை வந்து சேரும். மனைவி மக்கள் ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் சேமிப்பால் உங்கள் பணத்தட்டுப்பாடு குறையும்.

அதிர்ஷ்ட எண்: 2,6

ரிஷபம்:

தொழிலுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். தொழில் போட்டிகள் அகலும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் உங்களுக்குச் சாதகமாக திருப்பம் ஏற்படும். மனை, நிலங்கள் வாங்கும் விற்கும் வாய்ப்பு வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்: 1,5,6

மிதுனம்:

உறவினர்கள் வருகையால் உற்சாகமடைவீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் சிறப்பாக நடக்கும். எதிர்பார்த்த பொருள் வரவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான போக்கு விலகி கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்திற்கான வெளியூர்ப்பயணங்கள் வெற்றி தரும்.

அதிர்ஷ்ட எண்: 3,5,9

கடகம்:

எடுத்த காரியங்கள் தடை இல்லாமல் நடந்து சந்தோசத்தைக் கொடுக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களை அளவோடு செய்யுங்கள். சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடாதீர்கள். அதனால் பண விரையம் ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை உருவாகும். புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்: 6,9

சிம்மம்:

வெளியிடங்களில் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். அடுத்தவர் விஷயங்களில் பஞ்சாயத்து பண்ணாதீர்கள். கண்காது பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவர்களை சந்திக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் நல்ல புரிந்துணர்வோடு நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளை கோபமான வார்த்தைகளால் திட்டாதீர்கள். வெளியூர்ப் பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்: 3,9

கன்னி:

உங்களுக்கு வயது குறைந்தவரிடம் எச்சரிக்கையாகப் பேசுங்கள். தராதரம் இல்லாமல் தலை குனிய வேண்டிய நிலை உருவாகும். பணத்தட்டுப்பாடு காரணமாக அடுத்தவரிடம் கையேந்தும் கட்டாயம் உண்டாகும். நண்பர்கள் உங்கள் மனதைப் புரிந்து நடந்து கொள்வார்கள். வழக்குகள் திருப்திகரமாக இருக்காது. வேலை சம்பந்தமான வெளியூர்க் கடிதங்கள் ஏமாற்றத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1,6

துலாம்:

ஆன்லைன் வர்த்தகங்கள் அபாரமான லாபத்தைக் கொடுக்கும். கட்டுமானத் தொழிலில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்கள் லாட்டரிகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். ஆன்லைன் சூதாட்டங்களில் மட்டும் ஈடுபடாதீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவால் அரசு ஊழியர்கள் அனுகூலம் அடைவார்கள். தொழில் முன்னேற்றம் கண்டு பணவரவு தாராளமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 5,6

விருச்சிகம்:

வசீகரமான வார்த்தைகளால் வாடிக்கையாளர்களை ஈர்த்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாகத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். எதிர்காலம் கருதி வங்கியில் பணத்தைச் சேமிப்பீர்கள். உங்கள் மீது அக்கறை கொண்ட பெரியோர்களின் ஆதரவால் நல்ல காரியங்கள் நடக்கும். மனைவி மக்கள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்: 4,6

தனுசு:

தொழிலுக்குப் போட்டியாக புதிய விரோதிகள் தோன்றுவார்கள். அவர்களைச் சமாளிக்க அதிகம் செலவு செய்வீர்கள். கடுமையாக வேலை செய்தாலும் மேலதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாத பகையை இழுத்துக் கொள்ளாதீர்கள். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம்.

அதிர்ஷ்ட எண்: 2,9

மகரம்:

தொழிலுக்கான புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா… இன்றைக்கு வேண்டாம். அதை ஒத்தி வையுங்கள். அடுத்தவர்களுக்காக உங்கள் பணத்தைச் செலவு செய்து அவதிப்படாதீர்கள். விதண்டாவாதம் பேசி உறவினரிடம் கெட்டபெயர் எடுக்காதீர்கள். வெளிக் கோபங்களை குடும்பத்தில் காட்டாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்: 1,5

கும்பம்:

ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்து பெரியோர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்க்கலாம். பிரயாணங்கள் மூலமாக புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் நல்ல முடிவு ஏற்படும். பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 5,6

மீனம்:

புதிய நண்பர்கள் பழக்கம் உண்டாகும். அவர்களால் வியாபாரத்திற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாக மாறும். பொருளாதாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் விருத்தி அடைந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் சின்னச் சின்னச் சங்கடங்கள் தோன்றினாலும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4,6

Related posts

Leave a Comment