August 18, 2022
ராசிபலன்

இன்று வியாழக்கிழமை ஆகஸ்ட் 04 – 08 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

இந்த நாள் எதையும் செய்து காட்டக்கூடிய துணிச்சல் பிறக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் செய்ததை சொல்லிக்காட்ட வேண்டாம். வேலையில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் மறையும். குடும்ப பொறுப்புகள் கூடும்.

அதிர்ஷ்ட எண் – 3

ரிஷபம்:

நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து விட்டு முடிவெடுங்கள். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். வேலையில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட எண் – 2

மிதுனம்:

இந்த நாள் உங்களுடைய கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் அடங்கும். தேவையற்ற வீண் விவாதங்கள் தவிர்க்க வேண்டும். வேலையில் உள்ளவர்களுக்கு கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

அதிர்ஷ்ட எண் – 9

கடகம்:

கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 4

சிம்மம்:

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களை சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். வேலையில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 2

கன்னி:

உங்களுடைய கவனத்தை வேறு ஒரு திசையில் செலுத்த முயற்சிக்க வேண்டாம். கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. குடும்ப பொறுப்புகளை புறக்கணிக்காதீர்கள். தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். வேலையில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு.

அதிர்ஷ்ட எண் – 9

துலாம்:

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள் சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். வேலையில் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் – 3

விருச்சிகம்:

உங்களுடைய மனதை அலைபாய விடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி பேசி பெரிதாகாமல் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தனலாபம் அதிகரிக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 5

தனுசு:

உங்களுடைய கருத்துக்களை பின் வாங்காமல் தைரியமாக முன் வைப்பது நல்லது. மற்றவர்களை மட்டம் தட்டி பேச வேண்டாம். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் மீது அதிருப்தி உண்டாக வாய்ப்புகள் உண்டு. பொறுமை தேவை.

அதிர்ஷ்ட எண் – 2

மகரம்:

நீங்கள் மனம் மகிழும்படியான நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய விஷயத்தை கற்றுக் கொள்வதில் ஆர்வத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள். வேலையில் எதிரிகளின் தொல்லை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண் – 2

கும்பம்:

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்

அதிர்ஷ்ட எண் – 8

மீனம்:

உங்களுடைய துயரங்கள் தீரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுப காரியம் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் உள்ளவர்கள் தெய்வ வழிபாடுகளில் கூடுதல் அக்கறையுடன் இருப்பீர்கள். வேலையில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண் – 6

Related posts

Leave a Comment