January 31, 2023
ராசிபலன்

இன்று செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 09 – 08 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெற போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பன்மடங்கு உயரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். வேலையில் உள்ளவர்கள் எதிர்பாராத திருப்பங்கள் சந்திக்க கூடும். நீங்கள் ஒன்று நினைக்க அது வேறொன்று நடந்தாலும் நேர்மறையாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 1

ரிஷபம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கவனமாக இருக்கவேண்டிய நாள்,

அதிர்ஷ்ட எண் – 9

மிதுனம்:

உங்களுடைய செய்கை மற்றவர்களுடைய கவனம் ஈர்க்கும் வண்ணம் இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுதல் நலம் தரும். சுயதொழிலில் நீங்கள் எதை செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலையில் உள்ளவர்கள் செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் – 7

கடகம்:

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வேலையில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 2

சிம்மம்:

இந்த நாள் உங்களுடைய சிறு சிறு அசைவுகளும் கவனிக்கத்தக்கதாக இருக்க போகிறது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். பொய் வழக்குகளில் இருந்து விடுபட இருக்கிறீர்கள். வேலையில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இணக்கம் தேவை. ஆரோக்கியம் சீராகும்.

அதிர்ஷ்ட எண் – 9

கன்னி:

குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். வேலையில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 7

துலாம்:

இந்த நாள் உங்களுடைய எண்ணத்தில் மிகப்பெரிய மாறுதல்களை சந்திக்க இருக்கிறீர்கள். முடியவே முடியாது என்று நினைத்த காரியமும் முடிவுக்கு வரப்போகிறது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. வேலையில் உள்ளவர்களுக்கு நினைத்ததை அடைந்தே தீரும் வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட எண் – 1

விருச்சிகம்:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. வேலையில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 3

தனுசு:

இந்த நாள் உங்களுடைய பொறுப்புணர்வு அதிகரித்துக் கொள்வது நல்லது. சுட்டித்தனமாகவே இருந்தால் சுய லாபம் காண முடியாது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வலுவிழந்த சக்தியையும் மீட்டெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் உள்ளவர்கள் கலை ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் நல்ல பலன் தரும்.

அதிர்ஷ்ட எண் – 9

மகரம்:

இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு பல்வேறு விமர்சனங்கள் எனக்கூடும் கவனம் தேவை. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை வலுவாகும் என்பதால் கூடுதல் பொறுப்புணர்வு தேவை. வேலையில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் – 9

கும்பம்:

உங்களுடைய குடும்ப பிரச்சினைகளை பற்றி வெளியில் பேசிக் கொள்ள வேண்டாம். தீட்டிய திட்டங்கள் யாவும் நிறைவேற பொறுமை தேவை. கணவன் மனைவி ஒற்றுமைக்கு விரிசல் விழாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் பெரிய லாபம் காண இருக்கிறீர்கள். வேலை பளு அதிகரித்து காணப்படும்.

அதிர்ஷ்ட எண் – 6

மீனம்:

இந்த நாள் உங்களுடைய பலம் அறிந்து செயல்படுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் உங்களுடைய கவனத்தை செலுத்தாமல், வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருந்தால் நல்லது நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு வேலை சார்ந்த கூடுதல் அறிவாற்றல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 4

Related posts

Leave a Comment