November 27, 2022
ராசிபலன்

இன்று புதன்கிழமை செப்டம்பர் 28 – 09 – 2022 – இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

இன்று வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும்.

அதிர்ஷ்ட எண் – 9

ரிஷபம்:

இன்று கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.

அதிர்ஷ்ட எண் – 8

மிதுனம்:

இன்று நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைப்பதால், செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட எண் – 6

கடகம்:

இன்று எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளிக்கத் தேவையான பணம் கிடைத்துவிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 1

சிம்மம்:

இன்று உங்கள் காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் யோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண் – 8

கன்னி:

இன்று நீங்கள் சோர்வுகள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். அவர்கள் கேட்டதை வாங்கித் தர முயற்சி செய்யவும். உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண் – 7

துலாம்:

இன்று உங்கள் தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும்.

அதிர்ஷ்ட எண் – 9

விருச்சிகம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக் கூடும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் மிக அவசியம்.

அதிர்ஷ்ட எண் – 2

தனுசு:

இன்று உங்களுக்கு உற்சாகமான நாள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் காரியம் அனுகூலமாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் – 8

மகரம்:

இன்று நீங்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் அவசியத் தேவைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சியை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண் – 8

கும்பம்:

பிள்ளைகளால் வீட்டில் உற்சாகமும் கலகலப்புமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை.

அதிர்ஷ்ட எண் – 6

மீனம்:

இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பப் பெரியவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

அதிர்ஷ்ட எண் – 3

Related posts

Leave a Comment