November 27, 2022
ராசிபலன்

இன்று வியாழக்கிழமை செப்டம்பர் 15 – 09 – 2022 – இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்:

இன்று உங்கள் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச் சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வேலையில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 3

ரிஷபம்:

இன்று நீங்கள் எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களை கூடப்போராடி முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள் செலவினங்களால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். இன்று நீங்கள் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் – 2

மிதுனம்:

இன்று உங்களுக்கு எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். வேலையில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இன்று உங்கள் சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 9

கடகம்:

இன்று நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வேலையில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். உங்கள் மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 3

சிம்மம்:

இன்று உங்களுக்கு இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதிய சிந்தனைகள் தோன்றும். விருந்தினர் வருகை உண்டு. உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். வேலையில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு புதியபாதை தெரியும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 2

கன்னி:

இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உறவினர்கள் உதவிகேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். வேலையில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்று உங்கள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் – 9

துலாம்:

இன்று உங்கள் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்கள் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 3

விருச்சிகம்:

இன்றைய தினம் சமயோசிதமாகவும் சாதுரியமாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். வேலையில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். இன்று உங்கள் வெற்றிக்கு வித்திடும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 4

தனுசு:

இன்று உங்கள் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று நீங்கள் புதுமை படைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 1

மகரம்:

இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். வேலையில் சக ஊழியர்களின் வேலைகளை சேர்த்து முடிப்பீர்கள். இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 1

கும்பம்:

இன்று உங்கள் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 8

மீனம்:

இன்று கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்கள அவர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். வேலையில் மேலதிகாரி மதிப்பார். இன்று உங்களுக்கு புத்துணர்ச்சி பெருகும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 6

Related posts

Leave a Comment