நம்முடைய நாக்கு பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பற்றி பார்ப்போம்.
நம்முடைய நாக்கு சராசரியாக 4 அங்குல நீளம் வரைக்கும் இருக்கும்.
சராசரி மனிதனின் நாக்கு உள்ளேயிருந்து நுனி வரைக்கும் 4 அங்குல நீளம் இருக்கும்.
நம்முடைய நாக்கு 8 தசைகளால் ஆனது.
நம்முடைய நாக்கில் மனித கண்ணுக்கு தெரியாத 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளது.
ஒரு சுவை மொட்டின் சராசரி ஆயுட்காலம் 2 வாரங்கள்.
நம்முடைய நாக்கில் இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என ஐந்து வகையான சுவை மொட்டுகள் உள்ளன.
நம்முடைய நாக்கு ஒருபோதும் வேலை செய்வதை நிறுத்தாது நீங்கள் தூங்கும் பொழுது கூட.
நம்முடைய உடலில் உள்ள மிகவும் நெகிழ்வான தசை நாக்கு. அதனால்தான் நாள் முழுவதும் சோர்வடையாமல் நாக்கை பயன்படுத்த முடிகிறது.
நம்முடைய நாக்கு சுவையை தெரிந்து கொள்வதற்கு ஈரப்பதம் தேவை.
நம்முடைய நாக்கு ஒலிகளை வார்த்தைகளாக வடிவமைக்கிறது.
நம்முடைய நாக்கில் இருக்கக்கூடிய அச்சு நம்முடைய கைரேகையைப் போலவே தனித்துவமானது.
நம்முடைய நாக்கு மட்டுமல்ல மூக்கும் சேர்ந்துதான் உணவை சுவைக்க உதவுகிறதாம்.
நம்முடைய நாக்கின் மேற்பரப்பு சீராக இருக்கும்.
தினமும் நாக்கை சுத்தம் செய்யவில்லை என்றால் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு கெட்ட பாக்டீரியாக்களையும் உருவாக்கும்.
நம்முடைய நாக்கில் 300க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் வாழ்கிறது. இவை தொடர்ந்து நொதித்தலில் ஈடுபட்டு மெல்லிய பூச்சு போன்ற படலத்தை நாக்கின் மேற்பரப்பில் ஏற்படுத்துகிறது.