உலகின் மிகப்பெரிய டாப் 10 ராட்சத விமானங்கள் எவை தெரியுமா

உலகில் அதிக அளவில் பயணிகளை சுமந்து செல்லவும், முக்கியமான இடங்களுக்கு கனமான மிகப்பெரிய பொருட்களை எடுத்து செல்லவும், ராணுவ தளவாடங்களுக்கு அதிக அளவிலான பொருட்கள் மற்றும் வீரர்களை சுமந்து செல்ல இப்படி முக்கியமான பெரிய பணிகளுக்கு மிகப்பெரிய விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்படி உலகிலுள்ள மிகப்பெரிய ராட்சத விமானங்கள் பற்றி பார்ப்போம்.

1. ஸ்ட்ராடோலாஞ்ச் (Stratolaunch)

இந்த விமானத்தின் வேற்று எடை 2,26,796 கிலோகிராம். இந்த விமானத்தின் நீளம் 73 மீட்டர்கள். விங்ஸ்பேன் நீளம் 117 மீட்டர்கள். மிக பிரமாண்டமான இரண்டு விமான உடற் பகுதிகளைக் கொண்ட ஸ்ட்ராடோலாஞ்ச் விமானத்தில் 6 போயிங் 747 ரக இஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விமானம் விண்வெளியில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தாழ்வான உயரத்திலும் பறக்கும். விமானத்தின் இரண்டு இருக்கைகளுக்கு இடையிலான தூரம் 117 மீட்டர்கள். இது ஒரு கால்பந்து மைதானத்தை விட அதிகமானதாகும். ஏர்பஸ் ஏ380 ஐ விட 1.5 மடங்கு மிகப்பெரிய விமானம் இது.

2. ஹியூஸ் எச் -4 ஹெர்குலஸ் (“ஸ்ப்ரூஸ் கூஸ்”) (Hughes H-4 Hercules) (“Spruce Goose”)

இந்த விமானத்தில் வெற்று எடை மட்டும் 113,399 கிலோகிராம். விமானத்தின் நீளம் 66.65 மீட்டர்கள். விங்ஸ்பேன் நீளம் 97.5 மீட்டர்கள். முதல் விமானம் 1947 ஆம் ஆண்டு பறக்கவிடப்பட்டது.

சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 26 விநாடிகளில் பறந்த முதல் மற்றும் ஒரே விமானம் ஹியூஸ் எச் -4 ஹெர்குலஸ். ஆனால் இதுவே இதுவரை பறந்த மிகப்பெரிய இறக்கைகள் கொண்ட விமானமாக கருதப்படுவதற்கு போதுமானது.

மரத்தினால் செய்யப்பட்ட இந்த விமானம் 8 இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட மாபெரும் பறக்கும் படகு. இரண்டாம் உலகப் போரின் போது நாட்டின் நீண்ட தூர கனரக போக்குவரத்து தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

அதன் ஒரு முன்மாதிரி தற்போது ஓரிகானின் மெக்மின்வில்லில் உள்ள எவர்க்ரீன் ஏவியேஷன் & ஸ்பேஸ் மியூசியத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

3. அன்டோனோவ் அன் -225 மரியா (Antonov An-225 Mriya)

இந்த விமானத்தின் எடை மட்டும் 285,000 கிலோகிராம். விமானத்தின் நீளம் 84 மீட்டர்கள். விமானத்தின் விங்ஸ்பேன் நீளம் 28.4 மீட்டர்கள். முதல் விமானம் 1988ம் ஆண்டு பறக்கவிடப்பட்டது.

ஆறு எஞ்சின்கள் கொண்டஅன்டோனோவ் அன் -225 இதுவரை கட்டப்பட்ட கனமான விமானங்கள் மற்றும் தற்போது சேவையில் உள்ள விமானங்களில் மிகப் பெரிய இறக்கைகள் ஆகிய இரண்டிலும் இது முதலிடத்தில் உள்ளது.

இது அதிக அளவு சுமைகளை சுமந்து செல்கிறது. 189,980 கிலோகிராம் எடை மற்றும் ஒரு விமானமும் ஏற்றப்பட்ட மொத்த எடையான 253,720 கிலோ எடையை சுமந்து சென்ற உலக சாதனைகளை இந்த விமானம் கொண்டுள்ளது.

4. ஏர்பஸ் ஏ 380-800 (Airbus A380-800)

இந்த விமானத்தில் வெற்று எடை மட்டும் சுமார் 277,000 கிலோகிராம். விமானத்தின் நீளம் 22.72 மீட்டர்கள். விமானத்தின் விங்ஸ்பேன் நீளம் 29.75 மீட்டர்கள். முதல் விமானம் 2005 ஆம் ஆண்டு பறக்கவிடப்பட்டது.

டபுள் டெக்கர் எ380 உலகின் அதிவேக விமான போக்குவரத்து வளர்ச்சிக்காகவும், முக்கிய விமான நிலையங்களில் அதிகரித்து வரும் நெரிசலுக்கு விடையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 850 பயணிகளை சுமந்து செல்ல முடியும். இருந்தாலும் பயணத்தின்போது 450 முதல் 550 பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

5. போயிங் 747-8

இந்த விமானத்தின் வெற்று எடை மட்டும் 220,128 கிலோகிராம். விமானத்தின் நீளம் 76.3 மீட்டர்கள். விங்ஸ்பேன் நீளம் 68.4 மீட்டர்கள். முதல் விமானம் 2010 ஆம் ஆண்டு பறக்கவிடப்பட்டது.

1970 களின் முற்பகுதியிலும் 30 வருடங்களுக்கு மேலாக, சேவையில் நுழைந்ததில் இருந்து போயிங் 747 மறுக்க முடியாத அளவுக்கு செயலாற்றி “வானங்களின் ராணி” (Queen of the Skies ) என்ற செல்லப் பெயரை பெற்றுள்ளது.

அதன் தனித்துவமான முன்னோக்கிய வித்தியாசமான கூம்பு வடிவம் உடனடியாக அடையாளம் காணக் கூடியதும் பிரபலமான ஐகான் ஆகவும் மாறியது. பயணிகளை சுமந்து செல்லும் திறனில் உலகின் மிக நீண்ட காலமாக பதிவு புத்தகங்களில் தனது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

6. அன்டோனோவ் அன் -124 (Antonov An-124)

இந்த விமானத்தின் வெற்று எடை மட்டும் 175,000 கிலோ கிராம். விமானத்தின் மொத்த நீளம் 68.96 மீட்டர்கள். விங்ஸ்பேன் நீளம் 73.3 மீட்டர்கள். முதல் விமானம் 1982 ஆம் ஆண்டு பறக்கவிடப்பட்டது.

இதன் நெருங்கிய வகையான An -225 ஐ விட சிறியதாக இருந்தாலும் அன்டோனோவ் வடிவமைப்பு வகைகளில் இந்த சக தயாரிப்பு உலகின் மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் ஆகும். மேலும் போயிங் 747-8 எப் வருகை வரை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்ட விமானமும் இதுவாகும்.

அன் -124 விமானங்கள் ரஷ்ய விமானப் படை மற்றும் பல கார்கோ நிறுவனங்களுடன் சேவையில் உள்ளது. அவர்கள் குறிப்பாக கனமான மற்றும் மிகப்பெரிய சரக்குகளை எடுத்துச் செல்ல இந்த விமானங்களை பயன்படுத்துகிறார்கள்.

உதாரணமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விண்வெளி திட்டங்களுக்கு ஆதரவாக முக்கிய பெரிய பொருள்களை எடுத்துச் செல்வதில் இது முக்கிய பங்கு ஆற்றுகிறது.

7. லாக்ஹீட் சி -5 கேலக்ஸி (Lockheed C-5 Galaxy)

இந்த விமானத்தின் வெற்று எடை மட்டும் 172,371 கிலோகிராம். விமானத்தின் நீளம் 75.31 மீட்டர்கள். விங்ஸ்பேன் நீளம் 67.89 மீட்டர்கள். முதல் விமானம் 1968 ஆம் ஆண்டு பறக்கவிடப்பட்டது.

சுமார் 11,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 அப்பாச்சி கன்ஷிப் அல்லது இரண்டு m1 போர் பீரங்கிகளை விமானத்தில் ஏற்றி செல்லும் திறன் கொண்ட சி5 கேலக்ஸி பல வருடங்களாக அமெரிக்க ராணுவ செயல்பாடுகளில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது

8. டுபோலேவ் து -160 (Tupolev Tu-160)

இந்த விமானத்தின் வெற்று எடை மட்டும் 110,000 கிலோகிராம். விமானத்தின் நீளம் 54.10 மீட்டர்கள். விங்ஸ்பேன் நீளம் 55.70 மீட்டர்கள். முதல் விமானம் 1981 ஆம் ஆண்டு பறக்கவிடப்பட்டது.

தற்போது ரஷ்ய விமானப் படையுடன் சேவையில் இருக்கும் இந்த விமானம் பல அதிசயமான பெருமைக்கு உரியது. மிகப்பெரிய போர் விமானம், மிகப்பெரிய சூப்பர்சோனிக் விமானம் என்ற பல பெருமைகளை பெற்றது.

இது முதன் முதலில் 1981 இல் பறந்த போதிலும், டு -160 தற்போது நவீன மயமாக்கப்பட்டு டு -160 எம்2 என 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்தது.

9. HAV ஏர்லேண்டர் 10 (HAV Airlander 10)

இந்த விமானத்தின் மொத்த எடை 20 ஆயிரம் கிலோ கிராம். விமானத்தின் நீளம் 92 மீட்டர்கள். விங்ஸ்பேன் நீளம் 43.5 மீட்டர்கள். முதல் விமானம் 2012ம் ஆண்டு பறக்கவிடப்பட்டது.

உலகின் மிகப்பெரிய இந்த ராட்சத விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை ஏர்லேண்டர் என்ற பெயரில் தயாரித்தது. உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலான இது 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

இந்த ஆகாய கப்பல் ஹீலியம் வாயு அடங்கிய ராட்சத பலூன்களை கொண்டிருப்பதால் ஹெலிகாப்டரை போல நின்ற இடத்திலிருந்தே மேலெழும்பி பறந்து விடும். இதனால் இதற்கு தனியாக ஓடுதளம் தேவையில்லை.

தண்ணீர், பனி மற்றும் பாலைவனம் என பலதரப்பட்ட நிலப்பரப்புகளில் இருந்து கூட டேக் ஆஃப் செய்யவும், தரையிறங்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 4,850 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறனும், ஆட்கள் இருந்தால் 2 வரங்களும், ஆட்கள் இல்லாதபட்சத்தில் 5 வாரங்களுக்கு மேலாக இந்த விமானம் வானத்தில் மிதக்கும் சக்தி கொண்டது.

10. மில் மி -26 (Mil Mi-26)

இந்த ஹெலிகாப்டரின் வெற்று எடை மட்டும் 28,200 கிலோ கிராம். ஹெலிகாப்டரின் நீளம் 40 மீட்டர்கள். ரோட்டார் விட்டம் 32 மீட்டர்கள். முதல் ஹெலிகாப்டர் 1977 ஆம் ஆண்டு பறக்கவிடப்பட்டது.

மில் மி -26 இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய ஹெலிகாப்டர் ஆக உள்ளது. இது சோவியத் கட்டிய மில் வி -12 உடன் ஒத்திருக்கிறது. ஆனால் இது தொடர் உற்பத்தியில் களமிறங்கிய வகையில் மிகப்பெரியது.

இன்றுவரை உலகம் முழுவதும் ஏராளமான விமானப் படைகள் மற்றும் கார்கோ நிறுவனங்களுக்காக இயங்குகிறது. இந்த ஹெலிகாப்டர் 90 படைவீரர்கள் அல்லது 20 டன் சரக்குகளை கொண்டு செல்லும் திறன் கொண்டது.

மலைகளில் சிக்கி தவிக்கும் சேதமடைந்த ஹெலிகாப்டர்களை மீட்டெடுப்பது மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்களில் மீட்பு பணிகள் செய்வது போன்ற பல்வேறு மாறுபட்ட பணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேறு எந்த ஹெலிகாப்டரும் செய்யாத வேலைகளையும் செய்யும் திறன் இதற்கு உண்டு.

தற்போது உலகம் தொழில்நுட்பத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் தற்போதுள்ள விமானங்களை விட மிகப் பெரிய அளவில் எடையை சுமந்து செல்லும் வகையிலும் மிகவும் பிரமாண்டமாகவும் வளர்ச்சி பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

வரும் காலங்களில் கண்டுபிடிக்கப்படும் பிரம்மாண்டமான இராட்சத விமானங்கள் இந்த விமானங்களை பின்னுக்குத் செல்லும் நிலை சில வருடங்களில் ஏற்படும் என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *