உலகிலுள்ள மிகப்பெரிய டாப் 10 சொகுசு கப்பல்கள் எது தெரியுமா ?

உலக அளவில் பயணிகள் கப்பல்கள் நவீன முறையில் சொகுசு அம்சங்களுடன் தொடர்ந்து கட்டப்பட்டு புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கிறது. அப்படி இதுவரை உலகில் உள்ள மிகப்பெரிய டாப் 10 பயணிகள் சொகுசு கப்பல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

10. குவாண்டம் ஆப் தி சீஸ் (Quantum of the Seas)

இந்த கப்பல் ஜெர்மனியின் பேப்பன்பர்க்கில் உள்ள மேயர் வெர்ப்ட் கப்பல் கட்டுமிடத்தில் கட்டப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் மேல் தளத்திலிருந்து விருந்தினர்களுக்கு 360 ° யில் கடலை நீங்கள் கண்டுகளிக்கலாம். பம்பர் கார்கள், ரோலர் ஸ்கேட்டிங் கொண்ட மிகப்பெரிய உட்புற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வளாகம் உள்ளது.

18 தனித்துவமான உணவகங்களில் பல்வேறு வகையான உணவுகளை நீங்கள் உண்டு ரசிக்கலாம். 16 பயணிகள் தளங்கள் உள்ளன. கடல்இந்த கப்பல் நவம்பர் 2014 ம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியது.

இந்த கப்பலின் மொத்த எடை 167,800 டன். கப்பலின் மொத்த நீளம் 1,139 அடி. மொத்தம் 4,180 பயணிகள் இந்த கப்பலில் பயணம் செய்யலாம். கப்பலை கட்டி முடிக்க 935 மில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது.

9. நார்வேஜியன் ப்ளிஸ் (Norwegian Bliss)

நார்வேஜியன் ப்ளிஸ் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 2018 ம் ஆண்டில் தொடங்கியது. கப்பலில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான உணவுகளையும் சுவைக்க முடியும். இந்த கப்பலில் பயணிகளுக்காக 20 தளங்கள் மற்றும் 2,220 அறைகள் உள்ளன.

இந்த கப்பலின் மொத்த எடை 228,081 டன். கப்பலின் மொத்த நீளம் 1,094 அடி. இந்த கப்பலில் 4,004 பேர் முதல் அதிகபட்சமாக 4903 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த கப்பலை கட்டி முடிக்க 920 மில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது.

8. ஆந்தம் ஆப் தி சீஸ் (Anthem of the Seas & Ovation of the Seas)

ஆந்தம் ஆப் தி சீஸ் கப்பல் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 2015 ம் ஆண்டில் தொடங்கியது. 2090 பயணிகள் அறைகளுடன் 16 தளங்களைக் கொண்டுள்ளது. ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை இந்த கப்பலில் உள்ளன.

இந்த கப்பலின் மொத்த எடை 168,666 டன். கப்பலின் நீளம் 1,141 அடி. இந்த கப்பலில் 4,180 பயணிகள் பயணம் செய்யலாம். அதிகபட்சமாக 4905 பயணிகள் வரை பயணம் செய்யலாம். இந்த கப்பலை கட்டி முடிக்க 940 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது.

7. ஸ்பெக்ட்ரம் ஆப் தி சீஸ் (Spectrum of the Seas)

ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ் சீன சந்தைக்காக கட்டமைக்கப்பட்டு ஜெர்மனியின் பேப்பன்பர்க்கில் உள்ள மேயர் வெர்ப்ட் கப்பல் கட்டுமிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஏப்ரல் 2019 ம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியது.

இந்த கப்பலில் நீச்சல் குளங்கள், பிட்னெஸ் சென்டர், ராக் கிளைம்பிங் வால், விளையாட்டு மைதானங்கள், திரையரங்கம் உட்பட இன்னும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 16 டெக்குகள் உள்ளது இதில் 14 பயணிகள் தளங்களும் விருந்தினர்கள் பயன்படுத்த 17 லிஃப்ட் வசதியும் உள்ளது.

இந்த கப்பலில் 1,551 சர்வதேச பணியாளர்கள் பயணிகளுக்கு பணியாற்றுவார்கள். இந்த கப்பலில் மொத்த எடை 169,300 டன். இதன் மொத்த நீளம் 1,139 அடி. இந்த கப்பலில் 4,188 பேர் பயணம் செய்யலாம். அதிகபட்சமாக 4905 பேர் பயணம் செய்யலாம்.

6. எம்.எஸ்.சி மெராவிக்லியா மற்றும் எம்.எஸ்.சி பெல்லிசிமா (MSC Meraviglia & MSC Bellissima)

இந்த இரண்டு கப்பல்களும் ஒரே மாதிரியானவை. எனவே உலகின் ஆறாவது பெரிய கப்பல்களாக இவை இரண்டும் இருக்கின்றன. இந்த இரு கப்பல்களும் முறையே ஜூன் 2018 ம் ஆண்டு மற்றும் மார்ச் 2019 ம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கின.

கப்பலில் வாட்டர் ஸ்லைடுகளுடன் கூடிய ஒரு அற்புதமான வாட்டர் பூங்கா உள்ளது. 8 வகையான உணவகங்கள், 4 வகையான ஸ்விம்மிங் பூல் இன்னும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதன் மொத்த எடை 171,598 டன். இந்த கப்பலின் நீளம் மொத்தம் 1036 அடி. இந்த கப்பலில் 4,500 பேர் பயணம் செய்யலாம்.

5. ஏ.ஐ.டி.ஏ நோவா (AIDAnova)

ஜெர்மனியை மையமாக கொண்ட ஏ.ஐ.டி.ஏ குரூஸால் இயக்கப்படும் இந்த கப்பல் கார்னிவல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது. ஜெர்மனியின் பேப்பன்பர்க்கில் மேயர் வெர்ப்ட் ஜிஎம்பிஹெச் என்பவரால் கட்டப்பட்ட சொகுசு கப்பல் ஆகும் இந்த கப்பல் முழுமையாக (liquefied natural gas) சுருக்கமாக எல்.என்.ஜி எனப்படும் திரவ இயற்கை எரிவாயுவால்இயக்கப்படுகிறது.

இந்த கப்பலில் 17 இடங்களில் வித்தியாசமான சிறப்பு உணவகங்கள் உள்ளது. இது டிசம்பர் 2018 ம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கியது. இதன் மொத்த எடை 183,900 டன். கப்பலின் நீளம் 1105.6 அடி. இந்த கப்பலில் 6,600 பயணிகள் பயணம் செய்யலாம்.

4. ஒயாஸிஸ் ஆப் தி சீஸ் (Oasis of the Seas)

ஓயாசிஸ் ஆஃப் தி சீஸ் ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் சொகுசு கப்பல் ஆகும். இந்த கப்பலில் தொங்கி செல்லும் ஜிப்-லைன், ஐஸ் ஸ்கேட்டிங் ரிங்க், சர்ப் சிமுலேட்டர், நகரும் பார், கேசினோ, மினியேச்சர் கோல்ஃப் மைதானம், நைட் கிளப்புகள், பார்கள், ஓய்வறைகள், காமெடி கிளப், ஐந்து நீச்சல் குளங்கள், கைப்பந்து மற்றும் கூடைப்பந்து மைதானம், குழந்தைகளுக்கான நர்சரிகள் போன்ற ஏராளமான சொகுசு வசதிகள் உள்ளன.

ஒயாஸிஸ் ஆப் தி சீஸ் பின்லாந்தின் துர்க்குவில் உள்ள எஸ்.டி.எக்ஸ் கப்பல் கட்டுமிடத்தில் கட்டப்பட்டது. இது டிசம்பர் 2009 ம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கியது. இதன் மொத்த நீளம் 1,186.5 அடி. உயரம் 236 அடி. மொத்தம் 18 தளங்களை கொண்டுள்ளது. மொத்தம் 5,400 பயணிகள் இந்த கப்பலில் பயணம் செய்யலாம். அதிகபட்சமாக 6780 பேர் பயணம் செய்யலாம். இந்த கப்பலை கட்டி முடிக்க 1.4 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது.

3. அலூர் ஆப் தி சீஸ் (Allure of the Seas)

அலூர் ஆஃப் தி சீஸ் என்பது ராயல் கரீபியன் இன்டர்நேஷனலுக்குச் சொந்தமான கப்பலாகும். கப்பலின் உள்ளே இரண்டு டெக் டான்ஸ் ஹால், 1,380 இருக்கைகள் கொண்ட ஒரு தியேட்டர், 25 சாப்பாட்டு கூடங்கள், ஒரு ஸ்டார்பக்ஸ் காபி ஷாப், ஐஸ் ஸ்கேட்டிங் ரிங் (ice skating rink) பல்வேறு கிளப்புகள் மற்றும் ஓய்வறைகளுடன் அமைந்துள்ளது.

60 மரங்கள் 12,000 செடிகளை உள்ளடக்கிய ஒரு சென்ட்ரல் பார்க் உள்ளது. அலூர் ஆப் தி சீஸ் கப்பல் அக்டோபர் 2010 ம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியது. இதன் மொத்த எடை 225,282 டன். இந்த கப்பலின் நீளம் மொத்தம் 1,187 அடி. கப்பலின் உயரம் 236 அடி. 18 தளங்களை கொண்டது

இந்த கப்பலில் மொத்தம் 5,400 பயணிகள் பயணம் செய்யலாம் அதிகபட்சமாக 6780 பேர் பயணம் செய்யலாம். இந்த கப்பலை கட்டி முடிக்க 1.2 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது.

2. ஹார்மோனி ஆப் தி சீஸ் (Harmony of the Seas)

இந்த ஹார்மனி ஆஃப் தி சீஸ் ராயல் கரீபியன் இன்டர்நேஷனலுக்காக பிரான்சின் செயிண்ட்-நாசாயரில் உள்ள சாண்டியர்ஸ் டிஎல் அட்லாண்டிக் கப்பல் கட்டுமிடத்தில் எஸ்.டி.எக்ஸ் பிரான்ஸால் கட்டப்பட்ட கப்பல் ஆகும். பல்வேறு அளவுகளில் 5,479 விருந்தினர்களுக்கு இடமளிக்கும் வகையில் இந்த கப்பல் 2747 பயணிகள் அறைகளை கொண்டது.

கப்பலின் உள்ளே இரண்டு சர்ப் சிமுலேட்டர்கள் மற்றும் 23 நீச்சல் குளங்கள் உள்ளன. சாப்பிடுவதற்கு 20 வெல்வேறு கலைநுணுக்கம் கொண்ட இடங்கள் உள்ளன. 1400 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் திரையரங்கம் ஒன்று உள்ளது. 11,252 கலைப் படைப்புகளும் உள்ளது.

ஹார்மோனி ஆப் தி சீஸ் கப்பல் மே 2016 ம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கியது. இதன் மொத்த எடை 227,500 டன். 155.6 அடி நீளம் கொண்டது. கப்பலில் ஒரே நேரத்தில் 5480 பயணிகள் பயணம் செய்யலாம். அதிகபட்சமாக 6780 பேர் பயணம் செய்யலாம். இந்த கப்பலை கட்டி முடிக்க 1.35 பில்லியன் டாலர்கள் 2015 ம் ஆண்டில் செலவாகியுள்ளது.

1. சிம்பொனி ஆப் தி சீஸ் (Symphony of the Seas)

சிம்பொனி ஆஃப் தி சீஸ் ராயல் கரீபியன் இன்டர்நேஷனலுக்குச் சொந்தமான கப்பல். இது எஸ்.டி.எக்ஸ் பிரான்ஸ் கப்பல் கட்டுமிடத்தில் கட்டப்பட்டது. மார்ச் 23, 2018 ம் ஆண்டு கப்பல் தனது பயணத்தை ஆரம்பித்தது. முதல் அதிகாரப்பூர்வ பயணம் ஏப்ரல் 7 2018 அன்று தொடங்கியது.

5518 பயணிகள் இந்த கப்பலில் பயணம் செய்யலாம். அதிகபட்சமாக 6,680 பயணிகள் மற்றும் 2,200 பேர் கொண்ட குழுவினர் வரை இந்த கப்பலில் தங்க வைக்க முடியும். விருந்தினர்கள் பயன்படுத்துவதற்காக 16 தளங்கள், 22 உணவகங்கள், 4 குளங்கள் மற்றும் 2,759 அறைகள் உள்ளன. கப்பலில் குழந்தைகள் நீர் பூங்கா (children’s water park), முழு அளவிலான கூடைப்பந்து மைதானம் (full-size basketball court), பனி சறுக்கு வளையம் (ice-skating rink) மற்றும் 43 அடி கொண்ட இரண்டடுக்கு பாறை ஏறும் சுவர்கள் (rock-climbing walls) ஆகியவை இதில் அடங்கும்.

20,000 க்கும் மேற்பட்ட வெப்பமண்டல தாவரங்களைக் கொண்ட ஒரு பூங்கா (central park) உள்ளது. இதன் மொத்த எடை 228,081 டன்கள். கப்பலில் நீளம் மொத்தம் 1,118 அடி, கப்பலின் உயரம் 246 அடி. மொத்தம் 18 அடுக்குகளை கொண்டது இந்த கப்பல். இந்த கப்பலை கட்டி முடிக்க 1.35 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது. இந்த கப்பல் 22 நாட்ஸ் அதாவது 41 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.
https://youtu.be/ic245zXOkB4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *