உலகின் மிகப்பெரிய டாப் 10 ஹோட்டல்கள் எது தெரியுமா

உலகெங்கிலும் மக்கள் தங்குவதற்கு ஏராளமான ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளது. பல ஹோட்டல்கள் கண்ணை கவரும் விதத்தில் ஏராளமான வசதிகளை கொண்டு கட்டப்பட்டிருக்கும். சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையில் பல வசதிகளோடு பல நாடுகளில் பெரிய ஹோட்டல்கள் கட்டப்பட்டிருக்கும். இப்படி உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய டாப் 10 ஹோட்டல்களை பற்றி பார்ப்போம்

10. லக்சர் ஹோட்டல் மற்றும் கேசினோ Luxor Hotel & Casino அறைகள்- 4,407

10வது இடத்தில் இருப்பது லக்சர் ஹோட்டல் மற்றும் கேசினோ. இந்த ஹோட்டலில் மொத்தம் 4,407 அறைகள் உள்ளன. இது அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அமைந்துள்ளது. 3 கட்டிடங்களில் 22, 22, 30 என மாடிகள் உள்ளன.

இந்த ஹோட்டல் லாஸ் வேகாஸில் ஸ்ட்ரீப்பின் தெற்கு முனையில் நெவாடாவின் பரடைஸில் அமைந்துள்ள 30 மாடி ஹோட்டல் மற்றும் கேசினோ ஆகும். இந்த ஹோட்டல் எம்ஜிஎம் ரிசார்ட் இன்டர்நேஷனலுக்கு சொந்தமானது.

ஒரு லட்சத்து இருபதாயிரம் சதுர அடி கொண்ட கேசினோவுடன், 2000 ஸ்லாட் மெஷின்கள் மற்றும் 87 டேபிள் கேம்களை கொண்டுள்ளது. இது ஒரு எகிப்திய பாணி கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

எம்ஜிஎம் இந்த ஹோட்டலுக்கு எகிப்திய நகரமான லக்சர் என்ற பெயரை சூட்டியுள்ளது. லக்சர் மேலும் 22 மாடி கோபுரங்களை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பிரமிடிலும் அறைகள் உள்ளன. அவை மொத்தம் 4,407 விருந்தினர் அறைகளைக் கொண்டுள்ளது.

9. மாண்டலே பே டவர் Mandalay Bay tower அறைகள்- 4,426

ஒன்பதாவது இடத்தில் இருப்பது மாண்டலே பே டவர். இது அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அமைந்துள்ளது. இங்கு உள்ள மொத்த அறைகளின் எண்ணிக்கை 4,426. மாண்டலே பே டவர் 43 மாடிகளையும், டெலானோ டவர் 47 மாடிகளையும் கொண்டுள்ளது.

இந்த ஹோட்டல் எம்ஜிஎம் இன்டர்நேஷனலுக்கு சொந்தமானது. இந்த ஹோட்டலில் 1,117 சூட்டுகள் உள்ளன. மாண்டலே பே 43 தளங்களில் 3,220 சூட்டுகளை கொண்டுள்ளது. மொத்தம் 4,426 அறைகள் உள்ளன. இந்த ஹோட்டல் மார்ச் 1999 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

8. பார்கட்னியே செசோனி யெகாடெரின்ஸ்கி குவார்டல் Barkhatnyye Sezony Yekaterininskiy Kvartal அறைகள்- 4,688

எட்டாவது இடத்தில் இருப்பது பார்கட்னியே செசோனி யெகாடெரின்ஸ்கி குவார்டல். இந்த ஹோட்டலில் மொத்தம் 4,688 அறைகள் உள்ளன. 5 கட்டிடங்களில் இது 34 மாடிகளை கொண்டுள்ளது.

இந்த ஹோட்டல் ரஷ்யாவின் கிராஸ்னோடர் கிராய்யில் அமைந்துள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் வெப்ப மண்டல மரங்களின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், ஒரு உடற்பயிற்சி மையம், எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய வைஃபை வசதி மற்றும் குழந்தைகளின் விளையாட்டு மைதானம் போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ளது.

ஓட்டலில் இருந்து இமெரெடின்ஸ்காயா பே கடற்கரைக்கு பத்து நிமிடங்களில் நடந்து செல்லலாம். சோச்சி ஆட்டோட்ரோம் ஒலிம்பிக் பூங்காவில் இருந்து 2.5 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

2014ம் ஆண்டு சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக முடிக்கப்பட்ட இந்த ஹோட்டலில் 8500 அறைகள் இருந்தன. இங்கு நடந்து செல்லும் தூரத்தில் பல கடைகள் பார்கள் மற்றும் உணவகங்கள் உள்ளன.

7. என்கோர் அட் வின் லாஸ் வேகாஸில் Encore At Wynn Las Vegas அறைகள்- 4,750

ஏழாவது இடத்தில் இருப்பது என்கோர் அட் வின் லாஸ் வேகாஸில். இந்த ஹோட்டலில் 4,750 அறைகள் உள்ளன. இது அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அமைந்துள்ளது. இரண்டு கோபுரங்களில் 45 மற்றும் 48 மாடிகள் உள்ளன.

என்கோர் லாஸ் வேகாஸ் வின் லாஸ் வேகாஸில் என்கோர் என்றும் பெரும்பாலும் என்கோர் என்றும் அழைக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வின் மற்றும் 2008 இல் தொடங்கப்பட்ட என்கோர் ஆகிய இந்த இரண்டு ஹோட்டல்களும் மிகப்பெரியவை. இந்த ஹோட்டலில் ஒரு மிகப் பெரிய கோல்ப் மைதானம் உள்ளது.

6. இஸ்மாயிலோவோ ஹோட்டல் Izmailovo Hotal அறைகள் 5,000

ஆறாவது இடத்தில் இருப்பது இஸ்மாயிலோவோ ஹோட்டல். இந்த ஹோட்டலில் மொத்தம் 5,000 அறைகள் உள்ளன. இது ரஷ்யாவின் மாஸ்கோவில் அமைந்துள்ளது. ஒரு கட்டிடத்திற்கு 30 மாடிகள் வீதம் மொத்தம் 4 கட்டிடங்கள் உள்ளன.

இது மூன்று நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்து கொண்ட உலகின் மிகப் பெரிய ஹோட்டல்களில் ஒன்றாகும். ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என கிரேக்க எழுத்துக்களுக்கு மாதிரியாக வடிவமைக்கப்பட்ட 5 கட்டிடங்களை இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.

1980 ஆம் ஆண்டு கோடை கால ஒலிம்பிக் ஒலிம்பிக் போட்டிக்காக கட்டப்பட்ட இந்த ஹோட்டலின் முதன்மை நோக்கம் ஒலிம்பிக் போட்டிகளில் அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஒரு இடத்தில் தங்க வைப்பதற்காக கட்டப்பட்டது.

5. சாண்ட்ஸ் கோட்டாய் சென்ட்ரல் Sands Cotai Central அறைகள்- 6,246

ஐந்தாவது இடத்தில் இருப்பது சாண்ட்ஸ் கோட்டாய் சென்ட்ரல். இந்த ஹோட்டலில் மொத்தம் 6,246 அறைகள் உள்ளன. ஐந்து கட்டங்களைக் கொண்ட இந்த ஹோட்டலுக்கு ஒரு கட்டிடத்திற்கு 34 மாடிகள் உள்ளது.

சாண்ட்ஸ் கோட்டாய் சென்ட்ரல் என்பது சீனாவின் மக்காவ், கோட்டாய் ஸ்ட்ரிப்பில் அமைந்துள்ள ஒரு கேசினோ ரிசார்ட். கோட்டாய் சென்ட்ரலில் கான்ராட், ஷெராடன், செயின்ட் ரெஜிஸ் மற்றும் ஹாலிடே இன் பிராண்டுகளின் 6,000 அறைகள் மற்றும் சூட்டுக்கள் உள்ளன.

அறைகள் 560 சதுர அடியில் இருந்து மிகப்பெரிய சூட்கள் 4 ஆயிரம் சதுர அடி வரை இருக்கும். இந்த ஹோட்டல் 11 ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

4. சிட்டி சென்டர் CityCenter அறைகள் 6,790

நான்காவது இடத்தில் இருப்பது சிட்டி சென்டர். இந்த ஹோட்டலில் மொத்தம் 6,790 அறைகள் உள்ளன. இந்த ஹோட்டல் எம்ஜிஎம் ரிசார்ட்ஸ் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு சொந்தமானது. இது சிட்டி சென்டர் லாஸ் வேகாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

இது நெவாடாவின் பாரடைஸில் உள்ள லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப்பில் அமைந்துள்ள 76 ஏக்கர் பரப்பளவில் 16,797,000 சதுர அடியில் கட்டப்பட்ட கலப்பு நகர்ப்புற வளாகமாகும். இந்த திட்டத்தை எம்ஜிஎம் ரிசார்ட்ஸ் இன்டர்நேஷனல் தொடங்கியது. இது டிசம்பர் 2009 இல் தொடங்கப்பட்டது.

3. எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் அண்ட் சிக்நேச்சர் MGM Grand Las Vegas and The Signature அறைகள் 6,852

மூன்றாவது இடத்தில் இருப்பது எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் அண்ட் சிக்நேச்சர். இந்த ஹோட்டலில் மொத்தம் 6,852 அறைகள் உள்ளன. இரண்டு மாடிகளில் எம்ஜிஎம் கிராண்ட் 30 மாடிகளையும் சிக்நேச்சர் 38 மாடிகளையும் கொண்டுள்ளது.

எம்ஜிஎம் கிராண்டில் உள்ள சிக்நேச்சர் லாஸ் வேகாஸ் பகுதிக்கு அருகிலுள்ள நெவாடாவின் பாரடைஸில் உள்ள எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் ரிசார்ட்டில் உள்ள ஒரு காண்டோ ஹோட்டல் ஆகும். இது மூன்று ஒரே அளவிலான 38 அடுக்கு கோபுரங்களை கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் 2006 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

2. தி வெனிசியன் ரிசார்ட் லாஸ் வேகாஸ் The Venetian Resort Las Vegas அறைகள் 7,092

இரண்டாவது இடத்தில் இருப்பது தி வெனிசியன் ரிசார்ட் லாஸ் வேகாஸ். இந்த ஹோட்டலில் மொத்தம் 7,092 அறைகள் உள்ளது. மொத்தம் 53 மாடிகளை கொண்டது. இது அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் அமைந்துள்ளது.

4,027 விருந்தினர் அறைகளை கொண்டுள்ளது. ஒரு ஆடம்பர ஹோட்டல் மற்றும் கேசினோ கொண்டதாகும். இது பழைய சாண்ட்ஸ் ஹோட்டல் தளத்தில் அமெரிக்காவின் நெவாடாவின் பாரடைஸில் உள்ள லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப்பில் அமைந்துள்ளது.

கிளிங்ஸ்டபின்ஸால் வடிவமைக்கப்பட்ட இந்த ஹோட்டல் கோபுரத்தில் 36 மாடிகள் 475 அடி உயரத்தில் உள்ளது. இந்த வெனிஸ் லாஸ் வேகாஸ் சாண்ட்ஸுக்கு சொந்தமானது. இந்த ஹோட்டல் ரிசார்ட் 3 மே 1999 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

1. பஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல் First World Hotel அறைகள் 7,351

முதலிடத்தில் இருப்பது பஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல். இந்த ஹோட்டலில் 7,351 அறைகள் உள்ளன. இது இரண்டு டவர் கொண்ட முதல் டவர் 24 மாடிகளையும் 2 வது டவர் 28 மாடிகளையும் கொண்டுள்ளது.

இது மலேசியாவின் பஹாங்கில உள்ள மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் ஆகும். இது உலகின் மிகப்பெரிய ஹோட்டலுக்கான அறைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மொத்தம் 36 மாடிகள் உள்ளது. இதில் எட்டு மாடிகள் வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *