1. எம்பர் டெம்பரேச்சர் கண்ட்ரோல் ஸ்மார்ட் மக்க் (Ember Temperature Control Smart Mug)
எப்பொழுதும் சூடாகவே டீ காபி அருந்த நினைப்பவர்களுக்கு இந்த எம்பர் வெப்பநிலை கட்டுப்பாட்டு ஸ்மார்ட் கப் பிடித்த ஒன்றாக இருக்கும். இந்த ஸ்மார்ட் கப்பை நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட் போனில் இருந்து கட்டுப்படுத்த முடியும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த வெப்பநிலையில் குடிக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த வெப்பநிலையில் சூடாக டீ, காபியை அருந்த முடியும். டீ, காபி சூடு ஆறிவிட்டது என நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. இந்த கப்பில் இருக்கக்கூடிய பேட்டரி ஒன்றரை மணி நேரம் வரை அதில் இருக்கக்கூடிய பானத்தை சூடாக வைத்திருக்கும். 120 டிகிரி செல்சியஸ் பாரன்ஹீட் இருந்து 145 டிகிரி செல்சியஸ் பாரன்ஹீட் இடையில் நீங்கள் விரும்பிய வெப்பத்தில் டீ, காபி குடிக்கலாம்.
2. ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 6 (New Apple Watch Series 6)
ஆப்பிள் வாட்ச்களில் மிகவும் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலான இது பல மேம்பட்ட அம்சங்களோடு சந்தைக்கு வந்திருக்கிறது. இதில் நீங்கள் உங்களுடைய ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அளவிட முடியும். உங்களுடைய ஹார்ட் பீட்டை கணக்கிட முடியும். ஸ்மார்ட்போன் உங்கள் அருகில் இல்லாமல் இருந்தாலும் அழைப்புகளை இதன் மூலம் பெற முடியும் மெசேஜ் அனுப்ப முடியும்.
இதில் இருக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் ஆப்பிள் ஐபோனுடன் மட்டுமே பொருந்தக்கூடியது. எனவே வேறு ஸ்மார்ட்போன் இருந்தால் அதற்கு சப்போர்ட் செய்யுமா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். இதில் இருக்கக்கூடிய ரெட்டினா டிஸ்பிளே வெளியில் நல்ல வெளிச்சத்தில் இருக்கும் போது 2.5 மடங்கு பிரகாசமாக இருக்கும். ஓட்டம், நடை பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, நீச்சல், நடனம் போன்ற உடற்பயிற்சிகளை நீங்கள் செய்யும் நேரத்தை அளவிட முடியும். தினசரி உங்களுடைய உடற்பயிற்சி செயல்பாடுகளை இதில் பார்க்க முடியும். கூடவே உங்களுக்கு பிடித்த இசை, ஆடியோ புக் இவைகளையும் கேட்க முடியும்.
3. அமேசான் எக்கோ டாட் (Amazon Echo Dot)
அமேசானில் உள்ள நான்காம் தலைமுறை ஸ்மார்ட் ஸ்பீக்கர் இதில் உள்ளது. முந்தைய எல்லா மாடல்களையும் விட இதனுடைய வடிவமைப்பு அற்புதமாக பலரையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. மிக இனிமையான சத்தத்தை வெளிப்படுத்தக்கூடியது. மேலும் பல ஸ்மார்ட் பியூச்சர்களையும் கொண்டுள்ளது. அலெக்சாவுடன் பிடித்த இசைகளை சொல்லி கேட்கமுடியும். செய்திகளை படிப்பதற்கு, வானிலை மாற்றங்களை தெரிந்து கொள்வதற்கு, அலாரம் அமைக்க இப்படி உங்களுடைய வீட்டிற்கு தேவையான பல அற்புதமான அம்சங்கள் இதில் காணப்படுகிறது.
4. ஃபுஜீபிலிம் இன்ஸ்டாக்ஸ் மினி போட்டோ பிரின்டர் (FujiFilm Instax Mini Photo Printer)
மிகவும் சிறிய உங்கள் கைகளுக்குள் அடங்கி விடக்கூடிய பிரிண்டர் இது. உங்களுடைய ஸ்மார்ட் போனில் இருந்து புகைப்படங்களை நேரடியாக இந்த பிரிண்டர் மூலமாக பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். எல்லா வகையான ஸ்மார்ட்போன்கள் உடனும் எளிதில் இது இணைந்து கொள்ளும். உங்கள் தேவைக்கு ஏற்ற வர்ணங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய புகைப்படங்களை பில்டர் செய்யக் கூடிய பல மென்பொருள்களும் இதில் உள்ளது. உங்களுக்கு பிடித்த ஸ்னாப்ஷாட் களை உடனடியாக நீங்கள் பிரிண்ட வெளியே எடுத்து பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் பிடித்தமானவர்களுக்கு உடனடியாக எடுத்துக் கொடுக்கலாம்.
5. ஃபோன்சோப் ஃபோன் சானிடைசர் (PhoneSoap Phone Sanitizer)
நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய நுண்ணிய தொற்றுக் கிருமிகளை கொல்லக்கூடிய கேட்ஜெட் இது. இதில் இருந்து வெளியேறக்கூடிய புற ஊதா கதிர்கள் ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய நுண்ணிய கிருமிகளை கொல்கிறது. எல்லா வகையான ஸ்மார்ட் போன்களுக்கும் இதை பயன்படுத்தலாம். உங்களுடைய ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய நுண்ணிய கிருமிகளை எல்லாம் கொல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா உடனடியாக இதை வாங்கி பயன்படுத்துங்கள்.
6. லார்க் ஸெல்ப் கிளீனிங் வாட்டர் பாட்டில் ( LARQ Self-Cleaning Water Bottle)
அல்ட்ரா வயலட் கதிர்களை பயன்படுத்தி தன்னைத்தானே சுத்தம் செய்யக்கூடிய இந்த வாட்டர் பாட்டில் தொடர்ந்து வாட்டர் பாட்டிலை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நீங்கள் தொடர்ந்து வாட்டர் பாட்டிலை உபயோகப்படுத்தினாலும் இதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய தேவையில்லை. அதுவாகவே சுத்தம் செய்து விடும். அதாவது உள்ளே இருக்கக்கூடிய துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களை சுத்தம் செய்யக்கூடியது. இதனால் தண்ணீர் துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
7. பிளிங்க் XT2 இன்டோர் அவுட்டோர் செக்யூரிட்டி கேமரா (Blink XT2 Indoor & Outdoor Security Camera)
எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு சென்று பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த செக்யூரிட்டி கேமராவை வடிவமைத்திருக்கிறார்கள். இதில் பகல் மற்றும் இரவில் வீடியோ எடுத்து கண்காணிக்க கூடிய வசதி உள்ளது. இதை நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் மூலமும் இயக்க முடியும். இன்னும் ஏராளமான வசதிகளை இது உள்ளடக்கியுள்ளது.
8. ஓக்குலஸ் குவெஸ்ட் 2 விர்ச்சுவல் ரியாலிட்டி செட் (Oculus Quest 2 Virtual Reality Set)
விர்ச்சுவல் காட்சிகளை மிக அழகாக பார்ப்பதற்காக இந்த டிவைஸை தயாரித்திருக்கிறார்கள். கூடவே ஹெட்செட் சேர்த்து வருகிறது. நேரடி இசை நிகழ்ச்சிகள், படங்கள், பிரத்தியேக நிகழ்வுகள் இதை உங்களுடைய வீட்டிலிருந்து கண்டு ரசிக்கலாம். பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இதை வடிவமைத்துள்ளார்கள். வீடியோ குவாலிட்டி அற்புதமாக இருக்குமாம்.
9. ஆங்கர் மினி போர்ட்டபிள் ஸ்மார்ட்போன் சார்ஜர் (Anker Mini Portable Phone Charger)
பொதுவாக ஸ்மார்ட்போன் சார்ஜர் மிகப்பெரியதாக இருக்கும். இதை நாம் எளிதில் எல்லா இடத்திற்கும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் அந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் மிக சிறிய அளவில் காணப்படக்கூடிய இந்த சார்ஜரை நீங்கள் எளிதாக எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்லலாம். மைக்ரோ யுஎஸ்பி மூலமாக உங்களுடைய போனை மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்திற்குள் முழுவதுமாக ரீசார்ஜ் செய்து விடுமாம்.
10. ஐபிக்ஸீட் ப்ரோ டெக் டூல்கிட் (iFixit Pro Tech Toolkit)
உங்களுடைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு இந்த டூல்கிட் மிகவும் உபயோகமாக இருக்கும். பழுது பார்ப்பதற்கு தேவையான எல்லா டூல்களும் இதில் உள்ளது.