நடிகர் சூர்யா நடித்து ஹிட்டான மனதை வருடும் டாப் 10 திரைப்படங்கள்

1997-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா . தற்போது வரை 30-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர். சூர்யா நடிப்பில் வெளியான 10 சிறந்த திரைப்படங்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. பூவெல்லாம் கேட்டுப்பார்(1999)

சூர்யா ஜோதிகா நடிப்பில் உருவான காதல் திரைப்படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இது 1999இல் தமிழில் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வசந்த் இயக்கியிருந்தார்.

சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். துணை நாயகனாக நடித்து வந்த சூர்யாவின் திரைப்பயணத்தில் இவருக்கென ஒரு இடத்தினை பிடித்த திரைப்படம்.

2. நந்தா(2001)

14 நவம்பர் 2001ல் வெளியான திரைப்படம் நந்தா. இதன் இயக்குனர் பாலா. சூர்யா,லைலா,ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம் இது. சிறைச் சாலையிலிருந்து வெளிவரும் நந்தா தனது தாயாரையும் தங்கையையும் காண்பதற்கு வீடிற்கு போகிறான்.

ஆனால் அங்கு அவன் தாய் அவன் மீது உள்ள வெறுப்பு காரணமாக அவனிடம் பேச மறுக்கவே, தனது படிப்பினைத் தொடர்வதற்காக நந்தா முயல்கின்றான்.

அப்பொழுது அவனது செலவுகளை அவ்வூரின் பெரியவர் ஒருவர் ஏற்றுக்கொள்கிறார். இந்நிலையில் இலங்கையில் இருந்து அகதியாக வரும் ஒரு பெண்மணியிடம் இவனுக்கு காதல் ஏற்படுகிறது.

அவனைத் தனது பிள்ளை போல வளர்த்தவர் அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட அவர்களைப் பழி வாங்கத் துடிக்கின்றான் நந்தா. இது தான் இந்த படத்தின் கதை.

3. மௌனம் பேசியதே(2002)

மௌனம் பேசியதே திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. காதலை வெறுக்கும் ஒரு நண்பன், காதலில் இருக்கும் நண்பன் இருவரின் வாழ்க்கையைச் சுற்றி உருவாக்கபட்ட கதை.

காதலை வெறுத்து ஒதுங்கும் ஒருவன் காதலினால் எப்படி மாறுகிறான் அவனது உணர்வுகளைத் முழுமையாக காட்டும் சூர்யா, நந்தா, லைலா, த்ரிஷா என முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் அமீர் இயக்கியுள்ளார். 2002ல் வெளிவந்த திரைப்படம்.

4. காக்க காக்க(2003)

இத்திரைப்படத்தில் போலீஸாக இருக்கும் சூர்யாவின் கதாபாத்திரம் மிகவும் புகழ்மிக்கது. 01 ஆகஸ்ட் 2003 ல் வெளியான பிரபலமான திரைப்படம் இது. இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன். சூர்யா, ஜோதிகா நடித்த மிகவும் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று.

5. பிதாமகன்(2003)

2003ஆம் ஆண்டு விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான திரைப்படம் பிதாமகன். இத்திரைப்படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா ஆகியோர் முதன்மையான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இளையராஜவின் இசையில் வெளிவந்துள்ளது.

இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றனர். இதுவே திரைத்துறையில் சூர்யாவின் முதல் விருது ஆகும். இது வெளியான தேதி 23 அக்டோபர் 2003.

6. கஜினி(2005)

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் அதிரடி திரைப்படம் கஜினி. இத்திரைப்படம் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வித்தியாசமான தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருந்தார் சூர்யா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தி மொழியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு 2017ஆம் ஆண்டில் ஆமிர் கான் நடிப்பில் இந்தியில் வெளியானது.

7. வாரணம் ஆயிரம்(2008)

வாரணம் ஆயிரம் 2008ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் 7 வேடங்களில் நடித்துள்ளார் சூர்யா.

சூர்யா இரட்டை வேடங்களிலும் சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் நவம்பர் 14, 2008 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் ஒரு அப்பா மற்றும் இடையே உள்ள சுவையான அருமையான நிகழ்வுகள் கூறப்படுகின்றன. இத்திரைப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

8. அயன்(2009)

அயன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக அறியப்பட்டார் நடிகர் சூர்யா. இத்திரைப்படம் 2009 ஆம் ஆண்டு கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அதிரடி தமிழ் திரைப்படம்.

இதில் கதையின் நாயகனாக சூர்யா நடிக்க பிரபு, தமன்னா மற்றும் அகஷ்தீப் சைக்ஹல் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தினை ஏவிஎம் சார்பாக எம். சரவணன், எம். எஸ். குகன் தயாரிக்க சன் பிக்சர்ஸ் வெளியீடு செய்தது. முற்றிலும் வித்தியாசமான கதையை கொண்டுள்ள திரைப்படம் இது.

9. சிங்கம்(2010)

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த அதிரடி திரைப்படம் தான் சிங்கம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் தொடர்ச்சியாக 3 பாகங்களை இயக்கியுள்ளார் இயக்குனர்.

10. 24 (2016)

நடிகர் சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ள அறிவியல் மற்றும் புனைவு திரைப்படமாகும். இப்படத்தில் முன்னணி வேடங்களில் சூர்யா, சமந்தா ருத் பிரபு, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

24 இயக்குநர் விக்ரம் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2016 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டேர்ட நிறுவனம் தயாரித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *