டாப் 15

இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த டாப் 15 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்

ஆயுள் காப்பீடு செய்பவர் இறந்தபிறகு அவர்களுடைய குடும்பத்திற்கு குறிப்பிட்ட ஒரு தொகையை காப்பீடாக காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கிறது. இறந்துபோன நபர் எந்த அளவுக்கான காப்பீடு எடுத்திருக்கிறாரோ அதற்கு ஏற்றபடி அவருடைய குடும்பத்திற்கு காப்பீட்டுத்தொகை கிடைக்கும். இந்த காப்பீட்டு தொகை நிச்சயமாக அந்த குடும்பத்தினருடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவும். ஒவ்வொரு தனி மனிதருக்கும் காப்பீடு என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். நம்முடைய இந்தியாவில் ஏராளமான காப்பீட்டு நிறுவனங்கள் காணப்படுகின்றன. அதில் மிக முக்கியமான ஒரு சில காப்பீட்டு நிறுவனங்களை பற்றி பார்ப்போம்.

காப்பீடு என்பது ஒருவருடைய குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க அவர் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். கூடவே ஒவ்வொரு மாதத்திலும் ஏற்படும் சிறிய செலவு. நிதி ஆலோசகர்கள் கூட நீங்கள் உங்களுடைய பணத்தை எந்த அளவிற்கு சேமிக்கிறீர்களோ அதோடு கூட உங்களுடைய காப்பீட்டையும் கவனமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.

இது பல்வேறு காரணங்களுக்காக உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம். மிக முக்கியமாக குடும்பத்தில் ஒருவர் மட்டுமே சம்பாதித்து கொண்டிருப்பார். அவருக்கு எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தால் அந்த குடும்பத்துடைய நிதி நிலைமை மிகவும் மோசமாக்கி விடும். அவர்களுடைய குடும்பத்தில் வேறு யாரும் சம்பாதிக்கவில்லை என்றால் அவர்களுக்கு வாழ்வதற்கான வழிகள், அதாவது பணத்தேவைகள் அவர்களை நெருக்கடிக்குள்ளாக்கக் தொடங்கும்.

இந்த நேரத்தில் குடும்பத்தை காப்பாற்றுபவர் ஆயுள் காப்பீட்டை எடுத்திருந்தால் அது அந்த குடும்பத்தை மிகப்பெரிய அளவில் காப்பாற்றும். அவர்களுடைய எதிர்கால நிதி இலக்குகளை எந்தவித தடையுமின்றி அவர்கள் தொடர்ந்து கொள்ளலாம். அதாவது பணத்தேவைகளை அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாகவே அவர்கள் தேவையை நிவர்த்தி செய்யலாம். ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வகுத்து வைத்துள்ளனர்.

அது நீங்கள் உங்களுக்கு எந்த திட்டத்தில் சேர்ந்து அதற்கான பணத்தை மாதாமாதம் செலுத்த முடியுமோ அதற்கேற்றபடி உங்களுக்கு உங்கள் பணமும் திரும்ப வரும். அதாவது இந்தத் திட்டங்கள் இடர் மேலாண்மை, இறப்பு, ஆபத்து, விபத்துக்கள் நோய்வாய்ப்படுதல் இப்படி பல பிரச்சினைகள் மனிதர்களுக்கு ஏற்படும் பொழுது உங்களை காக்கும் விதமாக அமைகிறது. இதை நீங்கள் கவனமாக பரிசீலித்து உங்களுக்கு தேவையான காப்பீட்டை பெறும் பொழுது கண்டிப்பாக அது உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு பிரயோஜனமாக இருக்கும். அப்படி இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த 15 காப்பீட்டு நிறுவனங்கள் பற்றி பார்ப்போம்

1. எல்ஐசி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India)

எல்ஐசி என பிரபலமாக அறியப்படும் இந்த ஆயுள் காப்பீட்டு கழகத்தைப் பற்றி பொதுவாக யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அனைவருக்கும் தெரிந்த ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இது. இது இந்திய அரசுக்கு சொந்தமானது. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம். இந்தியாவின் முதல் 10 காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது.

இது 1956ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது நாட்டின் எல்லா இடங்களிலும் 2048 கிளை அலுவலகங்கள், 113 டிவிஷனல் ஆபீஸ் எனப்படும் பிரதேச அலுவலகங்கள், எட்டு சோனல் ஆபீஸ் எனப்படும் மண்டல அலுவலகங்கள் மற்றும் 1381 சேட்டிலைட் அலுவலகங்கள் என மிக பிரம்மாண்டமான நிறுவனமாக இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக இருந்து வருகிறது. எல்ஐசியின் மொத்த சொத்து மதிப்பு 3111 கோடிக்கும் அதிகம்.

எல்ஐசி அனைவருக்கும் நம்பிக்கையான ஒரு சிறந்த காப்பீட்டு பிராண்ட். இது சிறந்த வாடிக்கையாளர் சேவைகள் மூலமாகவும், கிளை அலுவலகங்கள் மூலமாகவும், பல்வேறு ஆய்வுகள் மூலமாகவும் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய வசதிகளை வழங்கி வருகிறது. எல்ஐசி ஏராளமான ஆயுள் காப்பீட்டு திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அது தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடியதாக அமைந்துள்ளது.

தொடர்ந்து பல மைல் கற்களை தாண்டி வரும் இந்த எல்ஐசி பல அங்கீகரிக்கப்பட்ட விருதுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் எல்லா கிராமங்கள் வரை பரவி காணப்படக்கூடிய எல்ஐசி பல ஏழைகளுடைய வாழ்க்கையில் ஒளியேற்றும் விதமாக அமைந்துள்ளது. நீங்கள் ஒரு ஆயுள் காப்பீட்டு பெற விரும்பினால் கண்டிப்பாக எல்ஐசியில் நம்பிக்கையோடு உங்கள் காப்பீட்டை தொடங்கலாம்.

2. மேக்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Max Life Insurance Company)

2000 மாவது ஆண்டில் தொடங்கப்பட்ட மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய வங்கி அல்லாத தனியார் துறை காப்பீட்டு நிறுவனம். மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்திய நிறுவனங்களான இந்தியன் மேக்ஸ் இந்தியா லிமிடெட் ஜப்பானிய காப்பீட்டு நிறுவனமான மிட்சுய் சுமிட்டோமோ இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.

இது தற்பொழுது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று. இந்த மேக்ஸ் லைஃப் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து தற்பொழுது 50 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். நாடு முழுவதும் 1090 க்கும் மேற்பட்ட அலுவலகங்களுடன் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் உயர்தரமான வாடிக்கையாளர் சேவைகளை வழங்கி வருகிறது. மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று வருகிறது.

3. எச்டிஎப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (HDFC Life Insurance Company)

இந்தியாவின் மிகச்சிறந்த காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஹவுஸ் நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் உலகளாவிய முதலீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் லைஃப் அபெர்டீன் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சி. 2000 வது ஆண்டில் நிறுவப்பட்ட எச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான காப்பீடு மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது.

எச்டிஎப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 400 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் கூடுதல் வாடிக்கையாளர் மையங்களைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சேவையை தொடர்ந்து வருகிறது. மிக எளிமையான டிஜிட்டல் தளத்துடன் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு எளிதாக அணுகக்கூடிய முறையில் இது இருக்கிறது. இந்திய காப்பீட்டு துறையில் தொடர்ந்து பங்கு அளித்ததற்காக பல பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது. எச்டிஎப்சி லைஃப் இன்சுரன்ஸ் மிகவும் மதிப்புமிக்க தனியார் ஆயுள் காப்பீட்டு இந்திய பிராண்ட் என தரப்படுத்தப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் எச்டிஎஃப்சி லைஃப் கிரியேட்டிவ் எக்ஸலண்ட் விருதைப் பெற்றுள்ளது.

4. ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சுரன்ஸ் (ICICI Prudential Life Insurance)

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஐசிஐசிஐ பேங்க் லிமிடெட் மற்றும் புரூடென்ஷியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நடத்திவருகிறது. 2000 வது ஆண்டில் நிறுவப்பட்ட ஐசிஐசிஐ புரூடென்ஷியல் இந்தியாவின் சிறந்த காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று. ஐசிஐசிஐ புரூடென்ஷியல் இன்சூரன்ஸ் தற்போது நாடு முழுவதும் தொடர்ந்து வலுவாக வாடிக்கையாளர்களை கைப்பற்றி வருகிறது.

இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துக்கள் 1604 பில்லியன் ரூபாய்க்கும் மேல். ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு நீண்ட கால பாதுகாப்பு மற்றும் சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதற்காக பல பாராட்டுகளையும் விருதுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது. 2019 ஆம் ஆண்டில் ஆண்டின் சிறந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்ற விருதைப் பெற்றுள்ளது.

5. டாட்டா ஏ.ஐ.ஏ ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Tata AIA Life Insurance Company)

டாட்டா ஏ.ஐ.ஏ லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வணிக குழுக்களில் ஒன்றான டாட்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய காப்பீட்டு குழுவான ஏ.ஐ.ஏ லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சி. டாட்டா ஏ.ஐ.ஏ இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் 2019ஆம் ஆண்டில் 28,430 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்தியாவில் நம்பகமான காப்பீட்டு பிராண்டுகளில் இது ஒன்றாக இருப்பதால் லைஃப் இன்ஷூரன்ஸ் இல் இருந்து பணத்தை சம்பாதிப்பது வரை ஏராளமான காப்பீட்டுத் திட்டங்களை இது வழங்கி வருகிறது. இதனுடைய பாலிசியில் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் தனிப்பட்ட காப்பீடு தேவைகளுக்கு மிக எளிய தீர்வுகளை வழங்கி வருகிறது.

6. பாரதி அக்சா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி (Bharti AXA Life Insurance Company)

பாரதி அக்சா ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை ஆக்ஸா குழுமமும் பாரதி என்டர்பிரைசஸ் நிறுவனமும் சேர்ந்து நடத்துகிறது. பாரதி அக்ஸா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு புதுமையான காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த வலையமைப்பு நாட்டின் 123 நகரங்களில் பரவி காணப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 10,50,000 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. பாதுகாப்பு திட்டங்கள், சுகாதாரம், குழு திட்டங்கள் தொடங்கி பல்வேறு திட்டங்களை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் பெரும்பாலானவை ஆன்லைன் தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக வழங்கப்படுகிறது. காப்பீட்டு துறையில் சிறந்து விளங்கியதற்காக பாரதி ஆக்சா 2019ஆம் ஆண்டு அசோசாம் விருதை வென்றுள்ளது.

7. பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Bajaj Allianz Life Insurance Company)

2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பஜாஜ் குடும்பத்தில் பஜாஜ் பின்சர்வ் லிமிடெட் நிறுவனத்திற்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சி. பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதுமையான காப்பீட்டு திட்டங்களை வழங்குவதற்காக நாடு முழுவதும் 759 கிளைகளுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது. பஜாஜ் அலையன்ஸ் அதன் அருமையான காப்பீட்டுத் திட்டத்தில் புதுமையான திட்டங்கள் மற்றும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர் சேவைக்கு பெயர் பெற்றது.

காப்பீட்டு துறையில் அதன் பங்களிப்பிற்காக இந்த நிறுவனம் பல்வேறு விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டு பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் சிறந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கான விருதை பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டின் சிறந்த 75 மதிப்புமிக்க இந்திய பிராண்டுகளில் தரவரிசையில் பஜாஜ் அலையன்ஸ் முன்னணி காப்பீட்டு வழங்குனர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளது.

8. எஸ் பி ஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (SBI Life Insurance Company)

எஸ் பி ஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பிரஞ்சு பன்னாட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான பிஎன்பி பரிபாஸ் கார்டிஃப் ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சி. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக 2000 கோடி ரூபாய் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையும், தரமான திட்டங்களையும் கொடுப்பதால் தொடர்ந்து ஆண்டுதோறும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எஸ்பிஐ லைஃப் இந்தத் துறையில் பணியாற்றியதற்காக பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. காப்பீட்டு பிரிவில் இன்சூரன்ஸ் துறையில் பிராண்ட் ஆப் தி இயர் 2016 17 விருதைப் பெற்றுள்ளது.

9. ரிலையன்ஸ் நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Reliance Nippon Life Insurance Company)

ரிலையன்ஸ் நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் உள்ளார்கள். இந்தியா முழுவதும் 727 கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் 20 ஆயிரத்து 281 கோடிகள். ரிலையன்ஸ் லைஃப் தனிநபருக்கான பல்வேறு காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பலரும் இதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

10. ஏகான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (AEGON Life Insurance Company)

2008ம் ஆண்டில் ஏகான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. புதிய நிறுவனமாக இருந்தாலும் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை இது தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

11. அவிவா ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Aviva Life Insurance Company)

அவிவா லைஃப் இன்சுரன்ஸ் நிறுவனம் பிரிட்டிஷ் அஷ்யூரன்ஸ் நிறுவனமான அவிவா பி.எல்.சி மற்றும் இந்திய நிறுவனமான டாபூர் குரூப் இவர்கள் சேர்ந்து தொடங்கி நடத்தி வரும் ஒரு நிறுவனம். 121 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் சுமார் பத்தாயிரம் ஊழியர்களைக் கொண்டு நாடுமுழுவதும் இதன் சேவை பரந்து விரிந்து காணப்படுகிறது. அவிவா லைஃப் பாதுகாப்பு திட்டத்திலிருந்து தொடங்கி சேமிப்பு ஓய்வூதிய திட்டங்கள் வரை பல வகையான காப்பீட்டு திட்டங்களை இது தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. அவிவா லைஃப் இன்சுரன்ஸ் மிகவும் சிறந்த நம்பகமான பிராண்ட் என 2019 ஆம் ஆண்டில் விருதையும் பெற்றுள்ளது.

12. பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் (Birla Sun Life Insurance Company)

ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் 2000 மாவது ஆண்டில் தொடங்கப்பட்டது. இது ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம். ஆதித்யா பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதித்யா பிர்லா குரூப்ஸ் மற்றும் கனடாவின் முன்னணி சர்வதேச நிதி சேவை அமைப்பான சன் லைஃப் பைனான்சல் இவற்றுடன் சேர்ந்து இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு திட்டங்களில் இருந்து ஓய்வூதியத்திட்டம், சேமிப்பு திட்டம் மற்றும் பல புதிய திட்டங்களை வழங்கக்கூடிய இந்தியாவின் மிகச்சிறந்த காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக பிர்லா சன் லைஃப் இருந்து வருகிறது.

இந்த நிறுவனத்துடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கக்கூடிய மொத்த சொத்துக்கள் 4,10,110 மில்லியன். இந்த நிறுவனம் நாடு முழுவதும் 425 கிளைகளைக் கொண்டு 9 பேன்காஷூரன்ஸ் கூட்டாளர்களை கொண்டு ஆறு விநியோக சேனல்கள் மற்றும் 85000 க்கும் அதிகமான நேரடி விற்பனை முகவர்களை கொண்டுள்ளது. பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தத் துறையில் தொடர்ந்து பங்களித்தற்காக பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது.

13. கோட்டக் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Kotak Life Insurance Company)

கோட்டக் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 20 மில்லியனுக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் கொண்ட இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய சிறந்த காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று. கோட்டக் மஹிந்திரா வங்கி கோட்டக் ஆயுள் காப்பீட்டு நிறுவனதின் தாய் நிறுவனம். கோட்டக் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தன்னுடைய தனித்துவமான அம்சங்களுடன் ஏராளமான காப்பீட்டு திட்டங்களை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பு 25,936 கோடி ரூபாய். கோட்டக் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நிதி சேவை துறையில் பல்வேறு மைல்கல்லை எட்டியுள்ளது.

14. பிஎன்பி மெட்லைஃப் காப்பீட்டு நிறுவனம் (PNB MetLife Insurance Company)

பிஎன்பி மெட்லைஃப் இன்சுரன்ஸ் நிறுவனம் 2001ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு இந்தியாவின் மிகச்சிறந்த காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. இந்த நிறுவனம் பல ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலமாக ஏழாயிரத்திற்கும் அதிகமான இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.

15. கனரா எச்எஸ்பிசி ஓபிசி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (Canara HSBC OBC Life Insurance Company)

கனரா எச்எஸ்பிசி ஓபிசி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இந்தியாவின் மிகச் சிறந்த காப்பீட்டு நிறுவனமாக மக்கள் மத்தியில் பிரதிபலித்து வருகிறது. எச்.எஸ்.பி.சி இன்சூரன்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கனரா வங்கி மற்றும் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகிய இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து இந்த நிறுவனம் உருவானது. கனரா எச்எஸ்பிசி ஓபிசி லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் சுமார் 60 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மிகச்சிறந்த காப்பீடுகளை தொடர்ந்து வழங்குவதன் மூலமாக மக்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாக தொடங்கியுள்ளது.

Related posts

Leave a Comment