November 27, 2022
டாப் 10

உலகின் மிக விலையுயர்ந்த 20 கைக்கடிகாரங்கள்

கையில் நேரம் பார்க்க நாம் கட்டக்கூடிய கடிகாரம் நேரத்தை காட்டுவதோடு மட்டுமல்லாமல் நமக்கும் நல்ல ஒரு அழகை கொடுக்கிறது. கடிகாரங்கள் மிகக்குறைந்த விலையாக சில நூறு ரூபாயிலிருந்து பல கோடி ரூபாய் அளவிற்கு விற்பனையாகிறது. அப்படி உலகில் உள்ள மிகவும் விலையுயர்ந்த 20 கடிகாரங்களை பற்றி பார்ப்போம்.

20. வச்செரோன் கான்ஸ்டான்டின் டூர் டி (Vacheron Constantin Tour de I’Ile) $1.5 Million

இந்த கைக்கடிகாரத்தின் விலை 1.5 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 12 கோடிகள். அதிக பணம் இருக்கும் செல்வந்தர்கள் மட்டுமே வாங்கி அணியும் விலையில் இந்த கை கடிகாரத்தின் விலை உள்ளது. இந்த வாட்ச் ஸ்விச் தயாரிப்பான வச்செரோன் கான்ஸ்டான்டின் மூலம் தயாரிக்கப்பட்டது. 2005-ஆம் ஆண்டில் இந்த கைக்கடிகாரத்தை வெளியிட்டார்கள். இந்த நிறுவனத்தின் 250 ஆவது ஆண்டு நிறைவை வெளிப்படுத்தும் விதமாக இந்த கை கடிகாரத்தை தயாரித்தார்கள். இந்த மாடலில் மொத்தம் 7 கைக்கடிகாரத்தை மட்டுமே தயாரித்தனர்.

19. லாங்க் ஸோன் கிராண்ட் காம்பிளிகேஷன் (Lange & Söhne Grand Complication) 2.5 மில்லியன் டாலர்கள்

இந்த கைக்கடிகாரத்தின் விலை 2.5 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி ரூபாய். 2013ஆம் ஆண்டில் அறிமுகம் ஆனது இந்த கைக்கடிகாரம். இந்த கடிகாரத்தில் மொத்தம் 876 சிக்கலான நகரும் பாகங்கள் உள்ளது. இந்த கடிகாரம் தங்கப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இது 50 மில்லி மீட்டர் விட்டமும் 20 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டது.

18. ஃபிராங்க் முல்லர் ஏடெர்னிடாஸ் மெகா 4 ( Franck Muller Aeternitas Mega 4) 2.7 மில்லியன் டாலர்கள்

இந்த கைக்கடிகாரத்தின் விலை 2.7 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் இருபத்தி ஒன்றரை கோடி ரூபாய். இது மிகவும் சிக்கலான வடிவமைப்பை கொண்ட கடிகாரம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதில் சிக்கலான 1483 பாகங்கள் உள்ளது. இது உலக சாதனை பட்டியலில் உள்ளது. இந்த கடிகாரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மாற்றி அமைக்கக்கூடிய கேலண்டர் உள்ளது.

17. படேக் பிலிப் 1928 சிங்கிள் பட்டன் கிரோனோகிராப்(Patek Philippe 1928 Single Button Chronograph) 3.6 மில்லியன் டாலர்கள்

இந்த கடிகாரத்தின் விலை 3.6 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 28.7 கோடி ரூபாய். இந்த கைக்கடிகாரம் 1924ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற கிதார் கலைஞரான எரிக் கிளாப்டனின் சொத்தாக இந்த கைக்கடிகாரம் இருந்தது. 18 கேரட் வெள்ளை தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கைக்கடிகாரம் 28 விதமான வித்தியாசமான நகைகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. 99 ஆண்டுகளை கடந்தும் அந்த காலத்தில் உள்ள சிறந்த கைவினைத்திறன் இன்னும் அழியாமல் புதிது போல காட்சியளிக்கிறது.

16. படேக் பிலிப் 5004T (Patek Philippe 5004T) 3.9 மில்லியன் டாலர்கள்

இந்த கடிகாரத்தின் விலை 3.9 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் இதன் விலை 31.16 கோடி ரூபாய். ஏலத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது இந்த பிலிப் மாடல் கைக்கடிகாரம். இந்த கைக்கடிகாரம் டைட்டானியம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

15. ரோலக்ஸ் டேடோனா ரெஃப். 6263 ஒயிஸ்டர் அல்பினோ (Rolex Daytona Ref. 6263 Oyster Albino) 4 மில்லியன் டாலர்கள்

இந்த கைக்கடிகாரத்தின் விலை 4 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 32 கோடி ரூபாய். ரோலக்ஸின் விலையுயர்ந்த கடிகாரங்களில் இதுவும் ஒன்று. இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் கொண்டுள்ளது.

14. ப்ரெகுட் ஆன்ட்டிக் நம்பர் 2667 (Breguet Antique Number 2667) 4.5 மில்லியன் டாலர்கள்

இந்த கடிகாரத்தின் விலை 4.5 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 36 கோடி ரூபாய். இது ஒரு பாக்கெட் கைக்கடிகாரம். 18 கேரட் மஞ்சள் தங்கத்தில் இந்த கடிகாரம் செய்யப்பட்டுள்ளது.

13. லூயிஸ் மொய்னெட் மெட்ரோரிஸ் (Louis Moinet Meteoris) 4.6 மில்லியன்

இந்த கைக்கடிகாரத்தின் விலை 4.6 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 36.8 கோடி ரூபாய். இந்த கைக்கடிகாரம் மொத்தம் நான்கு மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

12. ஹப்லோட் பிக் பேங் டயமண்ட் (Hublot Big Bang Diamond ) 5 மில்லியன்

இந்தக் கடிகாரத்தின் விலை 5 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய். இந்த கை கடிகாரத்தில் மூன்று கேரட்டில் 1280 வைரங்கள் உள்ளது.

11. படேக் பிலிப் காலிபர் (Patek Philippe Calibre) 5.5 மில்லியன் டாலர்கள்

இந்த கடிகாரத்தின் விலை 5.5 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 44 கோடி ரூபாய். இதுவும் ஒரு பாக்கெட் வாட்ச். இந்த பாக்கெட் கடிகாரம் பிலிப் நிறுவனத்தின் 150வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக 1989 இல் உருவாக்கப்பட்ட ஒரு நினைவு பாக்கெட் வாட்ச். இந்த பாக்கெட் கடிகாரத்தின் எடை 1.1 கிலோ. இந்தக் கடிகாரத்தில் மொத்தம் 1728 பாகங்கள் உள்ளது.

10. படேக் பிலிப் ரெஃப். 1527 (Patek Philippe Ref. 1527) 5.7 மில்லியன் டாலர்கள்

இந்த கைக்கடிகாரத்தின் விலை 5.7 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 45.5 கோடிகள். 1943இல் வடிவமைக்கப்பட்ட இந்த கைக்கடிகாரம் வெளிப்புறத்தில் பார்க்க சாதாரணமாக இருந்தாலும் இந்த கடிகாரத்தில் 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு விலை உயர்ந்த கற்கள் உள்ளது. மேலும் இதில் 20 கேரட் ரோஸ் தங்கம் உள்ளது.

9. படேக் பிலிப் ரெஃப். 1518 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Patek Philippe Ref. 1518 in Stainless Steel) 11 மில்லியன் டாலர்கள்

இந்த கைக்கடிகாரத்தின் விலை 11 மில்லியன் டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 88 கோடிகள். உயர்தர துருப்பிடிக்காத எஃகில் கேஸ் செய்யப்பட்ட இந்த வாட்ச் 11 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

8. பால் நியூமன் ரோலக்ஸ் டேடோனா (Paul Newman Rolex Daytona) 17.6 மில்லியன் டாலர்கள்

இந்த கடிகாரத்தின் விலை 17.6 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 140.67 கோடிகள். பால் நியூமன் உலகப் புகழ்பெற்ற நடிகராகவும் கடிகார சேமிப்பு மற்றும் மோட்டார்ஸ்போர்ட்டில் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார். அவருடைய மனைவி அவருக்கு இந்த கடிகாரத்தை பரிசாக வழங்கினார்.

7. ஜேக்கப் & கோ. பில்லியனர் வாட்ச் (Jacob & Co. Billionaire Watch) 18 மில்லியன் டாலர்கள்

இந்த கைக்கடிகாரத்தின் விலை 18 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 144 கோடிகள். 260 காரட் எமரால்டு கட் வைரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது இந்த கைக்கடிகாரம்.

6. படேக் பிலிப் ஹென்றி கிரேவ்ஸ் சூப்பர் காம்ப்ளிகேஷன் (Patek Philippe Henry Graves Supercomplication) 24 மில்லியன் டாலர்கள்

இந்த கடிகாரம் 24 மில்லியன் டாலர்கள் விலை கொண்டது. இந்திய மதிப்பில் சுமார் 192 கோடிகள். இந்த கடிகாரத்தில் காலண்டர், மினிட் ரிப்பீட்டர், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரங்கள், நியூயார்க்கில் உள்ள இரவு வானத்தின் அடிப்படையில் ஒரு வான விளக்கப்படம் ஆகியவை உள்ளது.

5. சோபார்ட் 201-காரட் வாட்ச் (Chopard 201-Carat Watch) 25 மில்லியன் டாலர்கள்

இந்த கடிகாரத்தின் விலை 25 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய். இந்த கடிகாரத்தில் 15 காரட் இளஞ்சிவப்பு வைரம், 12 காரட் நீல வைரம் மற்றும் 11 காரட் வெள்ளை வைரம் உள்ளிட்ட வண்ணமயமான வைரங்களால் கடிகாரம் பொதியப்பட்டுள்ளது.

4. ஜெகர் லேகூல்ட்ரே ஜோய்லரி 101 மான்செட் (Jaeger-LeCoultre Joaillerie 101 Manchette) 26 மில்லியன் டாலர்கள்

இந்த கடிகாரத்தின் விலை 26 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 208 கோடி ரூபாய். இந்த கடிகாரத்தில் 576 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் அவருடைய 60வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் பரிசாக வழங்கப்பட்டது.

3. ப்ரெகுட் கிராண்டே காம்பிளிகேஷன் மேரி-ஆன்டோனெட் (Breguet Grande Complication Marie-Antoinette) 30 மில்லியன் டாலர்கள்

இந்தக் கடிகாரத்தின் விலை 30 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 240 கோடி ரூபாய். இந்த பாக்கெட் கடிகாரம் தங்கத்தால் பொதியப்பட்டுள்ளது. அழகான பாக்கெட் கடிகாரம் பிரெஞ்சு ராணியான மேரி அன்டோனெட்டின் முன்னாள் காதலரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதன்முதலில் 1782 ஆம் ஆண்டில் இந்த கடிகாரத்தின் வேலை தொடங்கியது. சுமார் 40 ஆண்டுகள் கடந்து 1827 ஆம் ஆண்டில் இந்த கடிகாரம் செய்து முடிக்கப்பட்டது. ஒரு கடிகாரம் செய்ய 40 ஆண்டுகள் எடுத்து இருக்கிறது. இருந்தாலும் துரதிஸ்டவசமாக மேரி அன்டோனெட் தயாரிக்கப்பட்ட இந்த கடிகாரத்தை பார்ப்பதற்கு முன்பு தூக்கிலிடப்பட்டார். 40 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட கடிகாரத்தை பார்ப்பதற்கு அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை.

2. கிராஃப் டயமண்ட்ஸ் தி ஃபேசினேஷன் (Graff Diamonds The Fascination) 40 மில்லியன் டாலர்கள்

இந்த கடிகாரத்தின் விலை 40 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி. கிராஃப் டயமண்ட்ஸின் மிகவும் விலையுயர்ந்த வாட்ச் என்று அழைக்கப்படும் தி ஃபேசினேஷன் 152.96 காரட் வெள்ளை வைரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தின் நடுவில் பிரித்து எடுக்க கூடிய 38.13 கேரட் பேரிக்காய் வடிவ வைர மோதிரமும் அமைந்துள்ளது.

1. கிராஃப் டயமண்ட்ஸ் ஹாலுசினேஷன் (Graff Diamonds Hallucination) 55 மில்லியன் டாலர்கள்

இந்த கடிகாரத்தின் விலை 55 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 440 கோடி ரூபாய். இப்போது வரைக்கும் உலகின் மிக விலையுயர்ந்த வாட்ச் என்ற பட்டத்தை இந்த கடிகாரம் பெற்றுள்ளது. இந்த கடிகாரம் ஒரு பிளாட்டினம் வளையலாக அமைக்கப்பட்டுள்ளது. 110 கேரட் கொண்ட அரிய வர்ணங்களைக் கொண்ட வைரங்களால் இது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இது தான் உலகின் விலை உயர்ந்த கைக்கடிகாரம்.

Related posts

Leave a Comment