January 31, 2023
செல்வம்

செல்வ வளங்களை அள்ளித்தரும் மரங்கள்! இதில் ஏதாவது ஒன்று உங்கள் வீட்டில் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்

வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். மரங்கள் பொதுவாக எந்த மரமாக இருந்தாலும், அந்த மரம் நமக்கு சுத்தமான காற்றையும், நிழலையும், குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தையும் தருகிறது. அதிலும் குறிப்பாக சில மரங்கள், நமக்கு வாஸ்து பிரச்சினைகளை தீர்க்க கூடிய மரமாகவும், செல்வ வளத்தை தரக்கூடியதாகவும், அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மரமாகவும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. அந்த மரங்கள் என்னென்ன? என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

வேப்பமரம்

வேப்பமரத்தை அந்த காலத்தில் உள்ளவர்கள் வீட்டிற்கு முன் புறத்திலோ அல்லது பின்புறத்திலோ கட்டாயம் ஒன்றாவது நட்டு விடுவார்கள். அதற்கு காரணம் இந்த வேப்பமரம் அதிகப்படியான குளிர்ச்சியை தரக்கூடியது. வேப்பமர இலைகள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை. அதை சாப்பிட்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது அர்த்தமில்லை.

இந்த வேப்ப மரத்தோட காற்றை சுவாசித்தால் கூட நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் உணர்ந்த நம் முன்னோர்கள் வேப்பமரத்தடியில் பொழுது போக்குவதும் மட்டுமல்லாது கட்டில் போட்டு படுத்து உறங்கிய காலமும் உண்டு.

பொன்னரளி மரம்

பொன்னரளி மரத்திற்கு குபேரன் மரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. பெரும்பாலும் இதை எல்லோர் வீட்டிலும் வைத்து வளர்க்கின்றனர். உங்களுக்கு ராசியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் வீட்டில் இந்த பொன்னரளி மரத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

இதில் கொத்து கொத்தாக பூக்கும் மஞ்சள் நிற பூவை பார்க்கும் போதே நமக்கு மனநிறைவு ஏற்பட்டுவிடும். இந்த மரம் நம்முடைய வீட்டிற்கு கண் திருஷ்டி படாமல், செல்வ வளத்தை அதிகரிக்கவும் உறுதுணையாக இருக்கும். நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சினையையும் சரிசெய்யும்.

மாதுளை மரம்

மாதுளை மரம் இயற்கையாகவே சூரியனிடமிருந்து வரக்கூடிய புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தை தன்வசம் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. வீடுகளில் இந்த மரத்தினை தென்கிழக்கு மூலையில் வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம் வீட்டின் செல்வவளம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் செயற்கை உரம் சேர்க்காத மாதுளங்கனி நமக்கு கிடைக்கும்.

நெல்லிமரம்

அறுசுவைகளும் சேர்ந்திருக்கும் இந்த நெல்லிக்காய் மரத்தினை, நம் வீட்டில் வளர்த்து வருவதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். குறிப்பாக பெரிய நெல்லிக்காய்களை பைரவருக்கு வைத்து, பூஜை செய்து மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது மிகவும் சிறப்பு.

புதன்கிழமை அன்று உங்கள் வீட்டில் இருக்கும் நெல்லிக்கனியை, எடுத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்து விட்டு, தங்கம் வாங்க செல்வது மிகவும் சிறப்பானது. இதுமட்டுமல்லாமல் இந்த நெல்லிக்கனி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இது உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக மேம்படுத்தும்.

அரசமரம்

வீட்டில் இருக்க வேண்டிய மரங்களில் அரசமரமும் ஓன்று. ஆனால் எல்லோருடைய வீட்டிலும் அரச மரம் வளர்க்க முடியாத ஓன்றுதான். இருந்தாலும் அரசமரத்தை வீட்டில் வளர்ப்பதன் மூலம் குருவின் அனுக்ரகம் நமக்கு கிடைக்கும். அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் ஆதிக்கம் இல்லை என்றால் கூட, இந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்ப்பதன் மூலம் குருவினால் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

குருவின் அனுக்கிரகத்தை பெற்று தரும் இந்த மரத்தை வளர்ப்பது மிகவும் நல்லது. அறிவியல் ரீதியாக பார்த்தோமென்றால் காலை நேரத்தில் நாம் அரசமர காற்றை சுவாசிப்பதன் மூலம் அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடலுக்கு கிடைத்து ஆரோக்கியமாக இருப்போம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரச மரத்தை வீட்டில் வைத்து வளர்க்க முடியாதவர்கள் அதாவது இட வசதி இல்லாதவர்கள் அரசமரத்தின் ஒரு குச்சியையாவது எடுத்து வீட்டில் வைப்பது செல்வ வளத்தை அதிகரிக்கும்.

இதில் ஏதாவது ஒரு மரத்தை வீட்டின் முன்பக்கமோ, பின்பக்கமோ வளர்த்து பாருங்க. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது நல்லது தான். அதிலும் இந்த மரங்களை ஆன்மீக ரீதியாக வளர்த்தாலும் சரி அறிவியல் ரீதியாக வளர்த்தாலும் சரி ஏதாவது ஒரு மரத்தை வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment