சனி பகவானின் வாகனமான காகத்திற்கு நாம் தினம்தோறும்
உணவு வைத்தால் நம்முடைய கஷ்டங்கள் விலகும். நமது
உடல் ஆரோக்கியமானது மேம்படும். ஏழரை சனி ,
அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள் தினமும்
காகத்திற்கு உணவு வைப்பதால் ஏராளமான நற்பலன்களை
அள்ளி தருவார் சனிபகவான். மேலும் காகத்திற்கு அன்னம்
வைப்பதால் நம்முடைய பித்ருக்களின் ஆசியும் அருளும்
கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி நாம்
காகத்திற்கு எந்த உணவை வைக்க வேண்டும் எந்த உணவை
வைக்க கூடாது என்பதை நாம் இங்கு பார்ப்போம். காகம்
நாம் வைக்கும் உணவை சாப்பிட்டால் நம்முடைய
முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். அமாவாசை,
திதி போன்ற நாட்களில் மட்டும் காகத்திற்கு உணவை
வைக்காமல் தினமும் நாம் சமைக்கும் உணவை காகத்திற்கு
வைத்தால் நம்முடைய கஷ்டங்கள், பிரச்சனைகள்,
கடனை தொல்லைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக
குறைந்து நல்ல ஒரு வாழ்க்கையை அமைய பெறுவோம்.
காகத்திற்கு புதியதாக சமைத்த உணவுகளை மட்டுமே
வைக்க வேண்டும். பழைய உணவுகளை வைக்க கூடாது
அப்படி வைத்தால் நமக்கு தோஷம் உண்டாகும். அதனால்
முந்தைய நாள் சமைத்த உணவையோ, மிஞ்சிய உணவையோ,
நாம் சாப்பிட்ட எச்சில் உணவையோ காகத்திற்கு வைப்பது நல்லதல்ல.
தினமும் நாம் சமைத்த உணவை முதலில் காகத்திற்கு வைத்துவிட்டு
அதன்பின்னராக நாம் சாப்பிடுவது மிக சிறப்பான பலனை தரும்.
உணவை வைக்கும் பொழுது அதன் கூடவே தண்ணீரும்
சேர்த்து அருகில் வைக்க வேண்டும்.
ஒருசிலர் எள் கலந்த சோற்றை காகத்திற்கு வைப்பார்கள்
ஆனால் அப்படி வைக்காமல் அதனுடன் தயிர் கலந்து வைப்பதே
மிகசிறந்த முறையாகும். தயிர் புதிதாக
இருந்தால் மட்டுமே வைக்க வேண்டும்.
சில நேரங்களை நம்முடைய வீட்டில் உணவு சமைக்க
முடியாது அப்படி பட்ட நேரங்களில் கடைகளில் வாங்கி
முதலில் காகத்திற்கு வைத்து விட்டு அதன் பின்னர் சாப்பிட வேண்டும்.
காகமானது நாம் தினசரி வைக்கும் சாப்பாட்டை
சாப்பிடும் பொழுது நம்முடைய கஷ்டங்கள் தினமும்
கொஞ்சம் கொன்ஜமாக குறையும். அதுவும் ஒன்றிற்கு
மேற்பட்ட காகங்கள் நாம் வைக்கும் உணவை சாப்பிட்டால்
நம்முடைய கஷ்டங்கள் மிக விரைவாக விலகும் என்பது ஐதீகம்.
இப்படி புதிதாக சமைத்த உணவையும், எச்சில் படாத உணவையும்
காகத்திற்கு வைத்த பிறகு நாம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய
கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகி செல்வசெழிப்பான
வாழ்க்கை அமையும். சனி பகவானுடைய அருள் பூரணமாக
நமக்கு கிடைக்கும் அதுபோல நம்முடைய பித்ருக்களின்
ஆசியும் நமக்கு கிடைக்கும்