June 10, 2023
சமையல்

இந்த பழத்தை சேர்த்து அடுத்த முறை பூரி செய்து பாருங்க… டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்…!

பூரி சுடுவது சுலபமான வேலைதான் என்றாலும் அதை எப்படி பதமான சுட்டு எடுப்பது என்பது அனை வருக்கும் வராது. அதேபோல் அதன் சுவையையும் பலராலும் கொண்டு வர முடியாது. அப்படி உங்க ளுக்கும் பூரி சுவை சுமாராகத்தான் வருகிறது எனில் இந்த பதிவில் கொடுத்துள்ளபடி செய்து பாருங்கள்….அருமையாக வேற லெவில்ல சூப்பரா பூரி வரும்…

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒன்றரை கப்

வாழைப்பழம் – ஒன்று

சர்க்கரை – இரண்டு டீஸ்பூன்

தயிர் – ஒரு டீஸ்பூன்

ஏலக்காய் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

ஆப்ப சோடா – கால் டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு ஜாரில் வாழைப்பழம், ஏலக்காய், சர்க்கரை மற்றும் தயிர் சேர்த்து நன்கு அரைத்து தனியாக எடுத்துவைத்து கொள்ளுங்கள்.

பின்பு பாத்திரத்தில் கோதுமை மாவு கொட்டி அதில் உப்பு மற்றும் சேடா மாவு கலந்து கொள்ளுங்கள்.

பின் அரைத்த வாழைப்பழ விழுதை சேர்த்து நன்கு மாவுக்கு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துகொள்ளுங்கள்.

பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின் திரட்டி எப்போதும் போல் எண்ணெய் காய்ந்ததும் திரட்டிய மாவை போட்டு சுட்டு எடுங்கள். பூரி நீங்கள் வியக்கும் அளவிற்கு நன்கு உப்பி வரும்…சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.

Related posts

Leave a Comment