November 27, 2022
சமையல்

இந்த தீபாவளியை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டாட கீரை வடையை இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்…!

தீபாவளி நாட்கள் துவங்கிவிட்டாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சிக்கும், பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. கூடவே இந்த நாட்களில் ஒரு வாரம் முழுவதும் விதமான பலகாரங்கள் வீட்டில் செய்யப்படும். ஆனால், ஒரு வருத்தமான விஷயமென்றால் இப்பொழுது எல்லாம் வீட்டில் யாரும் பலகாரம் செய்யாமல், கடைகளில் ஆர்டர் செய்து தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர். இவை, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆரோக்கியமான முறையில் ருசியான ஆரோக்கியமான தீபாவளி பலகாரம் செய்யலாம். விதவிதமான கீரை வடைகள் நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால், தீபாவளி நாட்களில், பொட்டுக்கடலை கொண்டு இது போல கீரை வடை ரெசிபி ஒன்றை சட்டுன்னு பத்து நிமிஷத்தில் எப்படி செய்து அசத்தலாம் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை – ஒரு கப்

பெரிய வெங்காயம் – நறுக்கியது ஒன்று

பச்சை மிளகாய் – மூன்று

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

பூண்டு – ஐந்து பல்

இஞ்சி – ஐந்து துண்டு

சோம்பு – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி

செய்முறை:

முதலில் ஒரு கப் அளவிற்கு பொட்டு கடலை எடுத்து ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இஞ்சி, பூண்டு மற்றும் பெரிய வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் நீங்கள் ஊற வைத்து எடுத்த பொட்டுக் கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் இஞ்சி துண்டுகள் சேருங்கள்.

பின்னர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்களை நறுக்கி சேருங்கள். வாசத்திற்கு சோம்பு ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், அரைத்து எடுக்க இந்த பொட்டுக்கடலை மாவுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும்நறுக்கிய கருவேப்பிலை சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். அதனுடன், ஒரு கைப்பிடி அளவிற்கு வருமாறு கொத்தமல்லி தழையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கெட்டியாக மாவை நன்கு கலந்து விட்ட பின்பு சிறு சிறு வடைகளாக தட்டையாக தட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் தட்டி வைத்த வடைகளை போட்டு இரண்டு பக்கமும் சிவக்க எடுத்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அட்டகாசமான சுவையாக இருக்கும்.

Related posts

Leave a Comment