September 28, 2022
அழகு குறிப்புகள்

உங்கள் முகம் பளிச்சுன்னு அழகாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க

பொதுவாக நம்மில் அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே உள்ளது. அப்படி அழகாக இருக்க உங்கள் முகத்தில் கரும் திட்டுகள், கரும்புள்ளிகள் ஒன்றுமே இல்லாமல் இருக்க வேண்டும்.

அதற்கு இவைகள் எல்லாமே மறைந்து உங்கள் முகம் ரொம்பவே பளிச்சுன்னு ரொம்ப அழகாக மாற இது ஒரு அற்புதமான எளிமையான ரெமடி. நீங்களும் இதை செய்து பாருங்க.

நீங்கள் கடைகளில் விற்கப்படும் தேவையற்ற கிரீம்களை பயன்படுத்தி அலர்ஜியை உண்டாக்காமல் இயற்கையாக வீட்டிலேயே இதை தயார் செய்து நீங்கள் உங்கள் முகத்தை பளிச்சென்று அழகாக வைத்திருக்கலாம்.

தேவையானவை

கஸ்தூரி மஞ்சள்
கற்றாழை ஜெல்
தயிர்
இதில் மஞ்சள் மிகமிக முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சளில் அதிகப்படியான ஆன்டி பையோட்டிக் மற்றும் ஆன்டி செப்டிக் இருக்கிறது.

இது பொதுவாகவே முகத்தில் படிந்திருக்கக் கூடிய கரும்புள்ளிகள் மற்றும் இயற்கையாகவே கருப்பாக இருப்பவர்களை வெண்மையாக்க கூடிய தன்மை இந்த கஸ்தூரி மஞ்சளில் உள்ளது.

செய்முறை

முதலில் கஸ்தூரி மஞ்சள் 1/2 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே மஞ்சளை பயன்படுத்தினால் முகத்தில் தோல் சுருக்கங்கள் வந்துவிடும் என்று பலரும் மஞ்சளை பயன்படுத்துவதை தவிர்த்து விடுகின்றனர்.

இந்த மஞ்சளை நாம் தனியாக பயன்படுத்தக் கூடாது. தனியாக பயன்படுத்தினால் முகத்தில் வறண்ட தன்மை ஏற்படுத்தும். இதனால் நாளடைவில் தோல் சுருக்கங்கள் வர ஆரம்பிக்கும்.

அதனால் மஞ்சள் கூட வேறு இரண்டு பொருட்கள் சேர்த்து பயன்படுத்தினால் தோல் சுருக்கங்கள் வராது. முகம் நல்ல பளபளப்பாக மாறும்.

மட்டுமல்லாது முகத்தில் காணப்படக்கூடிய அந்த கரும் புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகள் நாளடைவில் மறைய ஆரம்பிக்கும்.

அடுத்ததாக மஞ்சள் கூட கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும். இந்த கற்றாழை ஜெல்லை 1/2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள்.

அதற்கு அடுத்ததாக தயிர் சேர்க்க வேண்டும். இந்த தயிரானது எல்லா சருமத்திற்கும் ஏற்ற ஒரு பொருளாகும். பாலை விட தயிரில் லாக்டிக் என்கின்ற ஒரு ஆசிட் உள்ளது. இது ப்ளீச்சிங் தன்மை கொண்டது.

இது இயற்கையாகவே முகத்தை பளபளப்பாக ஜொலிக்க வைக்க உதவுகிறது. இப்போது இவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது இது ஒரு க்ரீம் பதத்திற்கு வந்து விடும்.

குறிப்பு

இதை முக்கியமாக இரவில் பயன்படுத்தி கொள்ளுங்கள். முகத்தில் தேய்ப்பதற்கு முன்னால் முகத்தை சோப்பு கொண்டு நன்கு கழுவி துடைத்து கொள்ள வேண்டும்.

முகத்தை கழுவாமல் பயன்படுத்தினால் நீங்கள் ஏற்கனவே முகத்தில் ஏதாவது ஒரு க்ரீம் போட்டிருப்பீர்கள். இப்போது இரண்டும் சேர்ந்து அலர்ஜியை ஏற்படுத்தும்.

எனவே முகத்தை நன்கு கழுவி விட்டு இந்த க்ரீம் தேய்த்து 25 நிமிடங்கள் அப்படியே ஊற விடுங்க. 25 நிமிடங்கள் தாண்டிய பிறகு முகத்தை கழுவி விட வேண்டும்.

இதை வாரத்திற்கு 2 முறை வீதம் பயன்படுத்தி வந்தால் உங்களது முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகள் மாறி, உங்களது முகம் ரொம்பவே பளிச்சுன்னு ஜொலித்து அழகாக இருக்கும்.

இதை நீங்கள் ஒரு முறை பயன்படுத்தும் போதே முகம் அழகாக மாறும். நீங்களும் இதை ட்ரை பண்ணி அழகான ஜொலிஜொலிக்கும் முகத்தை பெறுங்கள்.

Related posts

Leave a Comment