January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

விசித்திர உயிரினம் கின்காஜூ

நம்முடைய உலகில் ஏராளமான வித்தியாசமான உயிரினங்கள் காணப்படுகிறது. அப்படிப்பட்ட உயிரினங்களில் வித்தியாசமான ஒரு உயிரினம் கின்காஜூ(Kinkajou). ஹனி பியர், நைட் ஏப் மற்றும் நைட் வாக்கர் என்ற பெயர்களிலும் அழைக்கிறார்கள். வெப்பமண்டலக் காடுகளில் வாழ்ந்து வரும் இது ப்ரோசியோனிடே குடும்பத்தை சேர்ந்தது. கின்காஜோவின் அறிவியல் பெயர் போடோஸ் ஃபிளவஸ்.

இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இது இரவு நேரத்தில் மட்டுமே வெளியே வருவதால் மனிதர்களால் அதிகம் பார்க்க முடியாது. அரிதாகவே பார்க்க முடியும். சில நாடுகளில் இது பல மக்களின் செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கப்படுகிறது. இதனுடைய தோல் பணப்பை மற்றும் குதிரை சேணங்கள் உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இறைச்சிக்காகவும் இது வேட்டையாடப்படுகிறது.

இதனுடைய சராசரி ஆயுட்காலம் இருபதிலிருந்து இருபத்தி மூன்று ஆண்டுகள் வரை. வீட்டில் வளர்க்கப்படும் கின்காஜூ 40 ஆண்டுகள் வரைக்கும் உயிர் வாழ்கிறது. தெற்கு மெக்ஸிகோவிலும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும் இதனுடைய ஏழு கிளையினங்களை நாம் பார்க்க முடியும். கின்காஜூ 16 முதல் 30 அங்குல நீளம் வரை வளரும். அதன் வால் 15 முதல் 22 அங்குல நீளம் வரை இருக்கும்.

முழுமையாக வளர்ந்த கின்காஜூ எடை 1.4 லிருந்து 4.6 கிலோ கிராம் வரைக்கும் இருக்கும். இது 20 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். கின்காஜூ பூக்களிலிருந்து தேனை உறிஞ்சி குடிக்கிறது. பூக்களில் இருந்து தேனை எடுக்க அதனுடைய 13 சென்டிமீட்டர் நீளம் கொண்ட ஒல்லியான நாக்கை பயன்படுத்துகிறது. அதைத் தவிர்த்து 90 சதவிகிதம் பழங்களை சாப்பிடுகிறது. இது ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும்.

இவைகளுடைய கர்ப்பகாலம் 112 லிருந்து 118 நாட்கள். ஒரு நேரத்தில் ஒன்றிலிருந்து இரண்டு குட்டிகள் வரைக்கும் போடும். பிறக்கும்பொழுது குட்டிகளுக்கு கண்கள் காணாது. காது கேட்காது. இரண்டு வாரங்களுக்கு பிறகு குட்டிகளின் கண்கள் திறக்கிறது. எல் சால்வடார், குவாத்தமாலா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் இந்த செல்லப் பிராணிகள் மைக்கோலியன் என்று அழைக்கப்படுகின்றன.

அதாவது சிங்கக் குரங்கு. பெருவில்இது லிரான் என்று அழைக்கப்படுகின்றன. கின்காஜூ உடலில் மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்தும் ரக்கூன் வட்டப்புழுக்கள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூஞ்சை தொற்று போன்ற ஒட்டுண்ணிகள் உள்ளது.

Related posts

Leave a Comment