September 28, 2022
அறிந்திராத உண்மைகள்

நெருப்பு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

தீ என்பது ஒளி மற்றும் வெப்பத்தை வெளியிடும் ஒரு இரசாயன எதிர்வினை.

நம்முடைய பூமி மட்டுமே நெருப்பை எரிக்கும் வல்லமை கொண்ட ஒரே கிரகம். இதற்கு காரணம் நாம் உயிர்வாழ சுவாசிக்கும் ஆக்ஸிஜன். ஆக்ஸிஜன் இருந்தால் மட்டுமே நெருப்பு எரியும். இதுவரைக்கும் கண்டறியப்பட்ட மற்ற எல்லா கிரகங்களிலும் நெருப்பு ஏற்படுவதற்கு போதுமான ஆக்ஸிஜன் இல்லை.

நெருப்பு முக்கோண கூறு கொண்டது. வெப்பம், ஆக்ஸிஜன் மற்றும் எரிபொருள் இந்த கூறுகளில் ஒன்று இல்லாமல் போனாலும் தீ அணைந்துவிடும்.

ஒரு மெழுகுவர்த்தி சுடர் பொதுவாக 1000 டிகிரி செல்சியஸ் (1800 பாரன்ஹீட்) வெப்பநிலையில் எரிகிறது.

தீப்பிழம்புகளை விட புகையை உள்ளிழுப்பதால்தான் அதிகம் பேர் இறக்கிறார்கள். நெருப்பு ஒரு அறையில் எரிவதற்கு முன்பே விஷப் புகை மற்றும் வாயுக்களால் நிரம்பி விடும். இதனால் சுவாசிக்க ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்து போவார்கள்.

காட்டுத்தீ ஏற்படும் பொழுது மரங்கள் வெடிக்கும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். இதற்கு காரணம் காட்டுத்தீ ஏற்படும் பொழுது மரத்தில் உள்ள தண்ணீர் விரைவாக நீராவியாக மாறுவதால் மரங்கள் வெடிக்க ஆரம்பிக்கிறது.

காட்டுத்தீ போன்ற அதிபயங்கர தீ ஏற்படும் பொழுது அந்த நெருப்பில் இருந்து வரும் அதிக வெப்பம் மட்டுமே ஒருவரை கொல்ல போதுமானது. இது 315 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாக இருக்கும். நீங்கள் அதை சுவாசித்தால் உங்கள் நுரையீரலை எரித்துவிடும். நெருப்பின் வெப்பம் நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை உருக்கும் அளவுக்கு வெப்பமாக இருக்கும்.

நீங்கள் எரியும் ஒரு வீட்டின் உள்ளே இருந்தால் உங்களால் எதையும் பார்க்க முடியாது. இருண்ட புகையின் காரணமாக நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் கறுப்பாக இருக்கும். இதனால் கட்டிடத்தின் உள்ளே சிக்கி கொள்ளும் நபர்களால் வெளியே வரமுடியாமல் இறந்துபோகிறார்கள்.

காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதும் அது மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பரவி அதன் பாதையில் தென்படுகிற அனைத்தையும் எரித்துவிடும்.

காட்டுத்தீ அதிகம் ஏற்பட மனிதர்களே காரணம். 80 சதவீதத்திற்கும் அதிகமான காட்டுத் தீ மனிதர்களால் ஏற்படுத்தப்படுகிறது.

தீயை அணைக்கும் கருவிகள் நீர், நுரைகள், கார்பன் டை ஆக்சைடு, உலர் இரசாயனங்களை வெளியேற்றுவதன் மூலம் தீயை கட்டுப்படுத்துகின்றன.

டிக்டாம்னஸ் ஆல்பஸ் (dictamnus albus)என்று அழைக்கப்படும் ஒரு புதர் உள்ளது. இந்த புதரை எரிக்கும் பொழுது புதர் எரியாது. அதற்கு பதிலாக எரியக்கூடிய எண்ணெய்ப் பொருளை இந்த செடி சுரக்கிறது.

வீடுகளில் ஏற்படும் தீ மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளுக்கு காரணம் சமையல் செய்யும் பொழுது ஏற்படும் தீ.

1666 ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் லண்டனின் 80% எரிந்து நாசமானது. ஆனால் இந்த தீ விபத்தில் 6 பேர் மட்டுமே காயமடைந்தனர். இது 5 நாட்களுக்கு தொடர்ந்து எரிந்து 13,000 வீடுகளையும் 87 தேவாலயங்களையும் எரித்தது.

லண்டனில் ஏற்பட்ட இந்த பெரும் தீ 65000 பேரைக் கொன்ற புபோனிக் பிளேக் தொற்றுநோயையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. காரணம் எலிகள் மற்றும் புபோனிக் பிளேக் ஏற்படுத்திய கிருமிகளும் இறந்துபோனதால்.

ஈராக்கில் நித்திய நெருப்பு(Eternal Fire) என்று அழைக்கப்படும் ஒரு இயற்கை எரிவாயு துளை 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிகிறது.

எல்லா பயணிகள் விமானத்திலும் ஆஷ்ட்ரேக்கள் கட்டாயமாக இருக்கும். ஏனெனில் 1973 இல் ஒரு விமானத்தில் கழிவறை கழிவுத் தொட்டியில் வீசப்பட்ட எரிந்துகொண்டிருந்த சிகரெட் மூலமாக தீப்பிடித்ததில் 123 பேர் இறந்தனர்.

ஆகஸ்ட் 19, 1980 அன்று 301 பேருடன் சென்ற சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. விமானம் பத்திரமாக தரையிறங்கியது. ஆனால் தரைப்படையினர் விமானக் கதவைத் திறந்தபோது பயணிகள் அனைவரும் விமானத்தின் உள்ளே பரவியிருந்த விஷ வாயுக்கள் காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டனர்.

Related posts

Leave a Comment