September 28, 2022
அறிந்திராத உண்மைகள்

குதிரை சாணத்தில் வளர்க்கப்பட்ட ஒரு அன்னாசிப்பழம் விலை பத்துலட்சம் ரூபாயாம்

அன்னாசிப் பழம் நல்ல சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் நம்முடைய உடலுக்கு கொடுக்கிறது.

அன்னாசிப் பழத்தில் புரோமிலைன் என்ற என்சைம் உள்ளது. இது புரதங்களை உடைக்கும் தன்மை கொண்டது. இறைச்சியை நீங்கள் சமைக்கும் பொழுது அதனுடன் அன்னாசிப்பழத்தை சேர்க்கும் பொழுது இறைச்சியின் கடினமான புரதங்களை இது மிக வேகமாக உடைக்கும். இதனால் இறைச்சி மிகவும் மென்மையாக சுவையாக இருக்கும். உலகில் உள்ள அன்னாசி பழங்களில் மூன்றில் ஒரு பகுதி ஹவாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.

அன்னாசிப் பழங்களை அறுவடை செய்து எடுக்க 20 மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஒரு அன்னாசி செடியாக வளர்ந்து முதிர்ச்சி அடைவதற்கு மூன்று ஆண்டுகள் வரைக்கும் எடுத்துக் கொள்ளுமாம். ஒரு செடியில் ஒரே ஒரு அன்னாசி மட்டுமே விளையும். காடுகளில் அன்னாசி செடிகள் 50 ஆண்டுகள் தொடர்ந்து வளர்ந்து பழங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கும். அன்னாசி செடிகள் சுமார் 3.3 முதல் 4.9 அடி உயரம் வரை வளரும்.

பழுக்காத அன்னாசி பழத்தை நீங்கள் தலைகீழாக வைத்தால் மிக வேகமாக பழுக்க ஆரம்பிக்கும்.

ஆங்கிலத்தில் பைனாப்பிள் என்ற சொல் முதன்முதலில் 1398 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டதாம். அதுவரைக்கும் அன்னாசிப்பழத்தை எப்படி அழைத்திருப்பார்கள் என்பது தெரியவில்லை.

இதுவரைக்கும் பதிவு செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய அன்னாசிப்பழம் 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்டின் மெக்கல்லம் என்பவரால் வளர்க்கப்பட்டது. இந்த அன்னாசிப்பழம் 32 சென்டி மீட்டர் நீளமும், 66 சென்டி மீட்டர் சுற்றளவும், 8.28 கிலோகிராம் எடையும் கொண்டிருந்தது.

கடல்மட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் வளர்க்கக்கூடிய அன்னாசிப் பழங்களில் அமிலத்தன்மையும் இனிப்பு தன்மையும் சமநிலையோடு இருக்குமாம். இதனால்தான் மலைகளில் வளரக்கூடிய அன்னாசிப் பழங்கள் அதிக சுவையோடு இருக்கிறது போல.

அன்னாசிப்பழத்தின் அறிவியல் பெயர் அனனாஸ் கோமோசஸ். அன்னாசிப்பழம் ப்ரோமிலியாட் குடும்பத்தைச் சேர்ந்தது.

அன்னாசி பல்வேறு வகையான நிலப்பரப்புகளில் வளரக்கூடியது. ஆனால் அது சற்று அமிலத் தன்மையுள்ள மண்ணில் செழிப்பாக வளரும். பைனாப்பிள் என பெயர் இருப்பதால் இது பைனோ இல்லை ஆப்பிளோ இல்லை. இது ஒரு பெர்ரி பழம்.

அன்னாசிப்பழம் சாப்பிட்டால் அது மூக்கடைப்பை சரி செய்ய உதவுகிறது. இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும் தன்மை கொண்டது அன்னாசிப்பழம். இது இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கிறது.

அன்னாசி பழத்தில் கொழுப்பு புரதம் இல்லை. அதற்கு பதிலாக கார்போஹைட்ரேட் 13 சதவிகிதமும் தண்ணீர் 86 சதவிகிதமும் உள்ளது. அன்னாசிப்பழம் பல்வேறு வைட்டமின்கள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளது இதில் பீட்டா கரோட்டின் ப்ரோமைலைன், கால்சியம், தாமிரம், கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து, ஃபோலேட், மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், தியாமின், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளது.

உலகம் முழுவதும் பயிரிடப்படக்கூடிய அன்னாசி பழங்களில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று கெய்ன் அன்னாசி(cayenne pineapple) மற்றொன்று சிவப்பு ஸ்பானிஷ் அன்னாசி(red Spanish pineapple). அன்னாசி பழத்தின் நிறம் மற்றும் அளவைக் கொண்டு அதன் வித்தியாசத்தை சொல்ல முடியும்.

இதுவரைக்கும் பதிவு செய்யப்பட்ட மிக மிக விலையுயர்ந்த அன்னாசி பழத்தின் விலை 12800 டாலர்கள். இப்போதைய இந்திய மதிப்பில் ரூபாய் 10 லட்சத்து 20 ஆயிரம். இது பிரிட்டனில் குதிரை சாணத்தைப் போட்டு வளர்க்கப்பட்டுள்ளது.

அன்னாசிப் பழங்கள் முழுமையாக பழுத்தவுடன் அழுக ஆரம்பித்துவிடும். குளிரூட்டப்படாமல் சாதாரண நிலையில் இருக்கும் அன்னாசிப்பழம் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் மட்டுமே அழுகாமல் இருக்கும். குளிரூட்டப்பட்ட அன்னாசிப்பழம் ஒரு வாரம் வரைக்கும் அழுகாமல் இருக்கும்.

அன்னாசிப்பழங்கள் பொதுவாக சிவப்பு, ஊதா அல்லது லாவெண்டர் நிறத்தில் இருக்கும். கிறிஸ்டோபர் கொலம்பஸ் தென் அமெரிக்காவிலிருந்து அன்னாசிப்பழத்தை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தார். ஹம்மிங் பறவைகள் மற்றும் வெளவால்கள் போன்ற சில பறவைகள் அன்னாசிப்பழங்களில் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன.

பினா கோலாடா(Pina colada) என்பது அன்னாசிப்பழத்தில் தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான பானம். தெற்காசியா அன்னாசிப் பழங்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. அன்னாசி பழத்தின் அனைத்து பகுதிகளும் வினிகர் மற்றும் ஆல்கஹால் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

அன்னாசிப்பழத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் பிரேசில், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் இந்தியா. 3.5 அவுன்ஸ் அன்னாசி பழத்தில் 50 கலோரிகள் இருக்கும்.

Related posts

Leave a Comment