அறிந்திராத உண்மைகள்

3 ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்கும் நத்தைகள் பற்றிய உங்களில் பலரும் அறிந்திராத உண்மைகள்

நத்தைகள் பற்றிய ஒரு சில சுவாரஸ்ய தகவல்களை பற்றி பார்ப்போம். உலகம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நத்தை இனங்கள் உள்ளது. நத்தைகள் 0.68 மில்லிமீட்டர் முதல் 70 செண்டி மீட்டர் அளவு வரைக்கும் இருக்கும்.

காட்டுக்குள் வாழக்கூடிய நத்தைகள் மூன்றிலிருந்து ஏழு ஆண்டுகள் வரைக்கும் உயிர் வாழ்கிறது. பிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் நத்தைகள் 25 ஆண்டுகள் வரைக்கும் உயிர் வாழ்கிறது. ஆழமான கடல் முதல் பாலைவனங்கள் வரை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நத்தைகள் வாழ்கிறது. நத்தைகள் பொதுவாக 25 கிராம் முதல் 45 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.

நத்தைகள் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். 99 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மிகவும் பழமையான நத்தையின் புதை படிவம் கிடைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டு மியான்மரில் இந்த புதைபடிவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நத்தைகளுக்கு அதிகளவில் பற்கள் காணப்படும். இனத்தை பொறுத்து சில வகை இன நத்தைகளுக்கு 20 ஆயிரம் பற்கள் வரைக்கும் இருக்கும்.

நிலத்தில் வாழும் நத்தைகளை விட கடலில் வாழும் நத்தைகள் ஏராளமான மாறுபட்ட விதத்தில் உள்ளது.

நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்கும். நத்தைகள் உயிர் வாழ்வதற்கு கொஞ்சம் ஈரப்பதம் கூட போதும். தண்ணீரில்லாமல் வறண்டு போகும் போது நத்தைகள் தூங்க ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான ஒரு வித சளி போன்ற திரவம் அதனுடைய உடலிலிருந்து சுரக்க ஆரம்பிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஒரு நத்தை சில மணி நேரங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை தூக்கத்திலேயே இருக்கும்.

நத்தைகளை பலரும் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள். நத்தைகளை இப்படி உங்களுடைய வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது மிகவும் எளிது.

நத்தை குஞ்சு பொரிக்கும் பொழுது ஓடுகளுடன் பிறக்கிறது. பிறந்த நத்தை குஞ்சின் ஓடுகள் மிகவும் மென்மையாக அதன் உடல் முழுவதும் வெளிப்படையாக தெரியும் விதத்தில் லேசாக இருக்கும். தொடர்ந்து நத்தை உண்ணக்கூடிய உணவில் இருந்து கிடைக்கக்கூடிய கால்சியம் மூலமாக நத்தை ஓடு கடினமாக தொடங்குகிறது.

நத்தையின் ஓடுகள் அதன் உறுப்புகளை பாதுகாக்கிறது. நத்தையின் ஓட்டில் ஏதாவது சிறிய சேதம் ஏற்பட்டால், விரிசல் ஏற்பட்டால் அது சரியாகும். ஆனால் முழுமையாக நத்தையின் ஓடு உடைந்து போனால் மீண்டும் நத்தை ஓடு மீண்டும் உருவாகாது. இதனால் நத்தை இறந்து போகும்.

நத்தைகள் பொதுவாக கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை, ஓடு இல்லாத நத்தை இப்படி பல வகைகளில் உள்ளது. ஒரு வகை நத்தை இனங்கள் நுரையீரல்களின் மூலமாக சுவாசிக்கிறது. இன்னொரு வகை நத்தை இனங்கள் செவுள்களினால் சுவாசிக்கிறது.

நத்தைகள் ஒவ்வொரு பதினைந்து மணி நேரங்களுக்கு ஒருமுறை தூங்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து 13 முதல் 15 மணி நேரம் தொடர்ந்து தூங்குகிறது. மீண்டும் தொடர்ந்து 15 மணி நேரங்கள் இரை தேட ஆரம்பிக்கிறது.

உலகிலேயே மிக சிறிய நத்தை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் குவாங்சியில் உள்ள குன்றின் ஓரத்தில் இருந்த மண் மாதிரிகளில் இந்த நத்தை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கஸ்டோபிலா டோமினிகே(Angustopila dominikae) என்ற அந்த நத்தை ஒரு ஊசியின் வாய் அளவிற்கே இருந்தது. அதைக் கண்டுபிடித்தவுடன் விஞ்ஞானி பார்னா பால்-ஜெர்கெலி தனது மனைவி டொமினிகாவின் பெயரை நத்தைக்கு சூட்டினார்.

நத்தைகள் ஒரு நேரத்தில் நூறு முட்டைகளுக்கு மேல் இடும். இந்த முட்டைகளில் இருந்து 20 முதல் 50 முட்டைகள் மட்டுமே குஞ்சு பொரித்து முதிர்ச்சியடையும்.

நத்தை ஓடுகள் பல தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் தயாரிக்கும் பொழுது காகிதத்தின் திறனை மேம்படுத்த நத்தை ஓடுகள் பயன்படுத்தப்படுகிறது. அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. வாகன இணைப்புகளுக்கு வலுவூட்டும் பொருள்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.

நத்தைகள் மனிதர்களுக்கு பாதிப்பில்லை என சொல்லப்பட்டாலும் கூம்பு நத்தை மனிதர்களை கொல்லும் விஷத்தை கொண்டது. இந்த கூம்பு நத்தை கொட்டியதில் இதுவரைக்கும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு நத்தை ஒரு மைல் நகர்ந்து செல்வதற்கு 33.33 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

குஞ்சு பொரித்த பிறகு சுமார் மூன்றில் ஒரு நத்தை இறந்து போகிறது.

மிகக் கொடிய பஞ்ச காலங்களில் நத்தைகள் முக்கிய உணவாக மனிதர்களுக்கு இருந்து வந்துள்ளது. ஏனென்றால் வறட்சியை அதிகம் தாங்கும் சக்தி கொண்டது நத்தைகள். இதனால் மிகப்பெரிய பஞ்சம் ஏற்படும் பொழுது நத்தைகள் மட்டுமே உயிருடன் இருக்கும். இது மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது.

கடல் நத்தை மீசோ அமெரிக்கர்களுக்கு மறுபிறப்பு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்பட்டது. நத்தையின் ஓட்டில் உள்ள சுழல் வடிவம் வாழ்க்கையின் வட்டத்தை குறிக்கிறது என்று நம்பினர்.

நத்தைகளுக்கு முதுகெலும்பு கிடையாது. வட அமெரிக்காவில் சுமார் 500 பூர்வீக நில நத்தைகள் உள்ளன.

தோலில் உள்ள சுருக்கங்கள், புள்ளிகள் மற்றும் தழும்புகளுக்கு சிகிச்சையளிக்க தோட்டத்தில் உள்ள நத்தையின் சளி பயன்படுத்தப்படுகிறது.

நத்தைகளின் உடலில் பலவகையான ஒட்டுண்ணிகள் காணப்படுகிறது. சரியாகச் சமைக்கப்படாமல் இருக்கும் நத்தையை சாப்பிடும் பொழுது பலவிதமான நோய்த்தொற்றுகள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

நத்தையின் ஓட்டின் அளவைக் கொண்டு அதன் வயதை கண்டுபிடிக்கலாம்.

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான நத்தை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. பல இனங்கள் அழிந்து போய் உள்ளது.

ராட்சத ஆப்பிரிக்க நில நத்தை( Giant African Land Snail) உலகின் மிகப்பெரிய நத்தைகளில் ஒன்றாகும். இது 7 அங்குல அளவில் வளரக்கூடியது. பதினைந்து அங்குலத்திற்கு வளரக்கூடிய மிகப் பெரிய நத்தையும் இதில் உள்ளது. இந்த நத்தைகள் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதற்கு காரணம் மூளைக்காய்ச்சல் ஏற்படுத்தக்கூடிய ஒட்டுண்ணிகள் இந்த நத்தையில் உள்ளது.

உலகின் மிகச்சிறிய நத்தை 0.03 அங்குலத்திற்கும் குறைவானது. உலகின் மிகச்சிறிய நத்தை ஒரு மைக்ரோ மொல்லஸ்க்(micro mollusk) ஆகும். ஒரு சிறிய, ஒளிஊடுருவக்கூடிய ஓடுகள் கொண்ட நத்தை. மொத்த அளவு 0.03 அங்குலத்திற்கும் குறைவாக இருக்கும். இந்த நத்தை போர்னியோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நத்தை நம்பமுடியாத அளவிற்கு சிறியதாக இருப்பதால் அவற்றை கண்ணால் கண்டுபிடிக்க முடியாது நுண்ணோக்கின் கீழ் கவனிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த இனம் ஒரு சுண்ணாம்பு மலையில் காணப்பட்டது.

Related posts

Leave a Comment