மன அழுத்தம் “அமைதியான கொலையாளி” என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது இதய நோய், உயர் இரத்த அழுத்தம், மார்பு வலி மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்புக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் முடி உதிர்வை ஏற்படுத்தும்.
2009ஆம் ஆண்டில் அதிக மன அழுத்தம் நிறைந்த பணிகளாக அறுவை சிகிச்சை நிபுணர், வணிக விமான பைலட், புகைப்பட பத்திரிக்கையாளர், விளம்பர கணக்கு நிர்வாகி மற்றும் ரியல் எஸ்டேட் முகவர் இருந்தது.
குறைந்த மன அழுத்தம் நிறைந்த வேலைகளாக டயட்டீஷியன், வானியல் நிபுணர், சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் மற்றும் மென்பொருள் பொறியாளர் ஆகிய வேலைகள் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மன அழுத்தம் உடலின் நரம்பியல் வேதியியல் அமைப்பை மாற்றுகிறது. இது கரு முட்டையின் முதிர்ச்சி மற்றும் வெளியீட்டை பாதிக்கலாம். மன அழுத்தம் ஃபலோபியன் குழாய்கள் மற்றும் கருப்பையில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஆண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் விந்தணு எண்ணிக்கை மற்றும் விறைப்புத்தன்மையில் ஏற்படும் இயக்கத்தை பாதிக்கலாம்.
உண்மையில் மலட்டுத்தன்மை பிரச்சனைகளில் 30% மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். சீனாவின் பாடிங்கில் மிங் வம்சத்தின் (1368-1644) காலத்தில் சீன அழுத்த பந்துகள் (Baoding balls) உருவாக்கப்பட்டன. முதலில் இரும்பினால் செய்யப்பட்ட இந்த பந்துகள் கைகளில் ஏற்படும் அழுத்தம் மூலமாக மன அழுத்தத்தை குறைக்கும் என்று கருதப்படுகிறது.
மனஅழுத்தம் அதிகம் இருப்பவர்களுக்கு முகப்பரு பிரச்சனையும் அதிகம் இருக்கும். மன அழுத்தம் வீக்கம் தொடர்பான எண்ணெய் பொருளை சருமத்தில் அதிகம் சுரப்பது தான் இதற்கு காரணம் என சொல்கிறார்கள். மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் அடிவயிற்றில் கொழுப்பைக் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட கொழுப்பு செல்களை பெரிதாக்குகிறது.
இதய நோய், புற்றுநோய், நுரையீரல் நோய்கள், விபத்துகள், கல்லீரல் ஈரல் அழற்சி மற்றும் தற்கொலை ஆகிய ஆறு முக்கிய காரணங்களுக்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. நாள்பட்ட மன அழுத்தம் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வளர்ச்சி ஹார்மோனின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சியைக் குறைக்கும்.
2009ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாகவும் முதல் காரணமாகவும் பணம் இருப்பதாக தெரியவந்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பணமே அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என தெரியவந்துள்ளது.
ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் பணம் மூலமாக ஏற்படக்கூடிய மன அழுத்தம் குறைவு எனவும் தெரியவந்துள்ளது. நாட்பட்ட மன அழுத்தம் குறுகிய கால அவசரகால சூழ்நிலைகளுக்கான சக்தி வாய்ந்த ஹார்மோன்களால் மூளையை நிரப்புகிறது. தொடர்ந்து ஏற்படும் மன அழுத்தம் மூளை செல்களை சேதப்படுத்தும். மூளை செல்களை சுருங்கச்செய்து மிக வேகமாக கொல்லும்.