May 30, 2020
தகவல்

சீனர்கள் சாப்பிடக்கூடிய அருவருப்பான உணவுகள் தெரியுமா உங்களுக்கு

உலகம் முழுவதும் பல வித்தியாசமான உணவு பழக்கவழக்கங்கள் இருக்கிறது. நமக்கு பிடிக்காத உணவு வகைகளை உலகில் உள்ள பல்வேறு நாட்டில் உள்ள மக்கள் சாப்பிடுகிறார்கள். அதில் சீனர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்.

இவர்கள் உயிருடன் எது கிடைத்தாலும் அதை பிடித்து சமைத்து சாப்பிடுவார்கள். நமக்கு பிடிக்காத பாம்பு, பல்லி, தேள், பூரான், பூச்சி இப்படி உயிரோடு இருக்கும் எல்லாம் அவர்களுக்கு ஸ்பெஷல் உணவாக இருக்கிறது. அப்படி இவர்கள் வித்தியாசமாக சாப்பிடக்கூடிய சில உணவு வகைகளை பற்றி பார்க்கலாம்.

1. நாய்கள்

சீனாவில் கோடை காலத்தை கொண்டாடுவதற்கு நாய்களை சாப்பிடுவார்களாம். தென்மேற்கு சீன நகரத்தில் மக்கள் கோடைகாலத்தில் நடக்கக்கூடிய சோல்ஸ்டைஸ் (solstice) என்னும் திருவிழாவில் நாய்களை சாப்பிடுகிறார்கள்.

சுமார் 10 ஆயிரம் நாய்கள் வரைக்கும் கொல்லப்பட்டு சாப்பிடப்படுகிறது. இந்த நாய் இறைச்சி அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது என சொல்கிறார்கள். இந்த பண்டிகையை தி டாக் டேஸ் ஆப் சம்மர் (the dog days of summer ) என சொல்கிறார்கள். நாயைக் கூட விட்டு வைக்காமல் சாப்பிடுகிறார்கள் பாருங்கள்.

2. சிறுநீரில் ஊறவைத்த முட்டை

பாம்பு பூச்சி நாய்கள் சாப்பிடுவதே நமக்கு அருவருப்பாக இருக்கிறது என நாம் நினைத்தால், இதை விட ஒரு கொடுமை இருக்கிறதாம். இவர்கள் வேகவைத்த முட்டைகளை பத்து வயதிற்குள் உள்ள சிறுவர்களின் சிறுநீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து அதை எடுத்து சாப்பிடுவார்களாம்.

இதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம். இது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறதாம். மேலும் பல நன்மைகள் உடலில் உடலுக்கு கிடைக்கிறது என உள்ளூர்வாசிகள் நம்புகிறார்களாம். அதுமட்டுமல்ல இந்த பாரம்பரியம் 2008 ஆம் ஆண்டில் உள்ளூர் கலாச்சார பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

3. பெரிய சூரை மீன் கண்

மிகப்பெரிய சூரை மீன் கண்களை மட்டும் தனியாக எடுத்து அதை சமைத்து சாப்பிடக் கொடுக்கிறார்கள். கண்ணை சுற்றி இருக்கக்கூடிய மீன் கொழுப்புடன் சேர்த்து கொடுப்பார்களாம். சூரை மீனின் கண்ணை இமையுடன் சேர்த்து நன்றாக வேக வைத்து பதப்படுத்தி பரிமாறுவார்களாம்.

4. பறவையின் கூடு சூப் (Bird’s Nest Soup)

கேவியர் ஆப் தி ஈஸ்ட் என்ற பெயர்கொண்ட ஸ்விஃப்ட்லெட் என்னும் பறவைகளின் கூட்டில் இருந்து இந்த சூப் தயாரிக்கப்படுகிறது. இந்த பறவை அதனுடைய உமிழ் நீரில் இருந்து கூடுகளை உருவாக்கும்.

இந்த பறவைகளின் உமிழ்நீர் காற்று பட்டவுடன் கடினம் ஆகிவிடுமாம். இவர்கள் இந்த கூட்டை எடுத்து சூப்பை தயாரிக்கிறார்கள். இந்த சூப் தயாரிக்க இந்த பறவையின் உமிழ் நீரை எடுத்து சிக்கன் குழம்பில் சேர்ப்பார்களாம்.

இந்த பறவைக்கூடு சூப் மிகவும் காஸ்ட்லியான மிகவும் அரிதாகத்தான் கிடைக்குமாம். இந்த கூடு ஒரு கிலோவுக்கு 1.75 லட்சத்திலிருந்து 7 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு பவுல் சூப்பை நீங்கள் வாங்கி குடிப்பதற்கு 2,000 ரூபாயில் இருந்து 7,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். இதிலும் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதாம்.

5. பலூட்

வாத்தின் பாதி வளர்ந்த முட்டைக்குள் இருக்கக்கூடிய கருவை எடுத்து சமைத்து சாப்பிடக் கொடுக்கிறார்கள். வாத்து முட்டையை 14 லிருந்து 21 நாட்கள் வரை அடைகாக்க வைத்து அதன் பிறகு பாதி வளர்ந்த கருவை முட்டையில் இருந்து எடுத்து சமைத்து சாப்பிட கொடுக்கிறார்கள்.

இந்த பலூட் பிலிப்பைன்ஸ், லாவோஸ், கம்போடியா, வியட்நாம் போன்ற பிற நாடுகளில் ஒரு பொதுவான உணவாகவே இருக்கிறதாம்.

6. வறுத்த தேள்

தேளை அப்படியே ஒரு குச்சியில் வைத்து வறுத்து எடுத்து கொடுப்பார்கள். நன்றாக வறுத்து உப்பு மிளகு போட்டு கொடுப்பார்கள். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே சாப்பிட வேண்டியதுதான். மொறுமொறுவென இதுவும் நல்ல சுவையாக இருக்குமாம். சாப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும்.

7. தொளசண்ட் இயர் ஓல்ட் எக்க்ஸ் (Thousand-year-old eggs )

ஆயிரம் வருடங்கள் ஆன முட்டைகள். பெயரை பார்த்தவுடன் குழம்பி போகாதீர்கள். இது அப்படி 1000 வருட பழமையான முட்டைகளல்ல. கோழி இல்லையென்றால் வாத்து முட்டைகளை சுண்ணாம்பு, சாம்பல், மண் கலவை கொண்டு நன்றாக பொதிந்து அதை 100 நாட்கள் வரைக்கும் உப்பு நீரில் ஊற வைப்பார்கள்.

அதுபோல அரிசியின் உமியை கொண்டும் இந்த முட்டையை பொதிந்து இதேபோல் செய்வார்களாம். 100 நாள்கள் தாண்டிய பிறகு முட்டையின் மஞ்சள் கரு பச்சை நிறமாக மாறும். வெள்ளைக்கரு அடர் பழுப்பு நிறமாக மாறும். இது நல்ல மணமாக சுவையோடு இருக்கும். சாப்பிடுவதற்கு நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

8. பாம்பு சூப்

சீனாக்காரர்கள் பாம்பு சாப்பிடுவது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் பாம்பை விதவிதமாக சமைத்து சாப்பிடுவார்கள். இதில் மிகவும் பிரபலம் பாம்பு சூப். இந்தப் பாம்பு சூப் ஹாங்காங்கில் ரொம்ப பிரபலமாம்.

ஐந்து வகையான பாம்பு இறைச்சிகளை கொண்டு பாம்பு சூப்பை செய்கிறார்களாம். பாம்பு இறைச்சி, பன்றி இறைச்சி எலும்புகள், கோழி இறைச்சி மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து வேக வைத்த இந்த சூப் ஹாங்காங்கில் குளிர்கால மாதங்களில் மிகவும் பிரபலமானதம். கோழி இறைச்சியைவிட மிகவும் சுவையாக இருக்குமாம்

9. முயல் தலை (Spicy Rabbit Head)

முயல் தலையை மட்டும் நன்றாக காரம் போட்டு பொரித்து வைத்திருப்பார்களாம். இரவு மதுபான பாரில் இது மிகவும் பிரபலமாம். முயல் தலையை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? முயல் தலையை உரித்து முதலில் சூடான தண்ணீரில் போட்டு எடுப்பார்களாம்.

அதன் பிறகு உப்பு, குக்கிங் ஒயின், இஞ்சி சேர்த்து நன்றாக அதை மிக்ஸ் பண்ணி ஒரு 12 மணி நேரம் ஊற வைப்பார்கள். அதன் பிறகு இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், மிளகாய் எப்படி உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதில் திரும்பவும் முக்கி பத்து நிமிடங்கள் நன்றாக தீயில் சுட்டு கொடுப்பார்களாம். மிகவும் டேஸ்டாக இருக்குமாம்.

இது மட்டும் இல்லை இன்னும் ஏராளமான வித்தியாசமான நமக்கு பிடிக்காத பல உணவு வகைகள், உணவு பழக்கவழக்கங்கள் சீன உள்ளூர் மக்களிடம் இருக்கிறதாம். இதில் இன்னும் பல வெளியில் வராமல் இருக்கிறதாம்.

Related posts

Leave a Comment