January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

உலகில் இன்னும் காணப்படும் மோசமான 9 பழக்கவழக்கங்கள்

1. இறந்தவர்கள் கல்லறைக்கு உணவளிக்கும் ரோமானியர்கள்

ரோமானியர்களுக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. ரோமானியர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பொழுது அந்த கல்லறையில் குழாய்களை வைப்பார்களாம். இது எதற்கென்றால் இறந்தவர்களுடைய உறவினர்கள் இறந்தவர்களுக்கு தேன், ஒயின் மற்றும் உணவுப்பொருள்களை கல்லறைக்குள் போடுவதற்காக இந்த குழாய்கள் வைக்கப்பட்டு இருக்குமாம். இறந்தவர்களுக்கு உணவளிப்பதை ரோமானியர்கள் பண்டைய காலத்தில் ஒரு விசித்திர பழக்கமாகவே கொண்டுள்ளனர்.

2. ஒட்டகச் சண்டை

சேவல் சண்டை, காளைச் சண்டை, எருது சண்டை இப்படி பலவித மிருகங்களை வைத்து சண்டையிட வைப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் துருக்கியில் வித்தியாசமாக ஒட்டக சண்டை நடைபெறுகிறது. இரண்டு ஆண் ஒட்டகங்களை ஒன்றுக்கொன்று சண்டையிட வைப்பார்களாம். இதை அங்குள்ள மக்கள் மிகவும் சந்தோஷமாக கண்டு களிப்பார்களாம். சண்டையிடும் ஒட்டகங்களில் ஓடாமல், பின்வாங்காமல் இருக்கும் ஒட்டகம் வெற்றிபெறும். ஒட்டகம் இனச்சேர்க்கை காலத்தில் இப்படிப்பட்ட சண்டை நடத்தப்படுமாம். எந்த ஒட்டகம் அதிக வீரியமாக சண்டையிடுகிறதோ அதை இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்துவார்களாம்.

3. இறந்தவர்களுடைய சாம்பலை சாப்பிடும் மக்கள்

இறந்தவர்களை எரித்து அந்தச் சாம்பலை சாப்பிடும் மக்கள் இருக்கிறார்கள். வெனிசுலா மற்றும் பிரேசிலில் உள்ள யோனாமாமோ என்ற பழங்குடியினர் இறந்தவர்களுடைய சாம்பலை சாப்பிடுகிறார்கள். இறந்தவர்களை எரித்து அந்தச்சாம்பலை குடும்ப உறுப்பினர்கள் பங்கிட்டு சாப்பிடுகிறார்களாம். என்ன ஒரு வித்தியாசமான ஒரு பழக்கம் பாருங்கள்.

4. மணமக்களுக்கு கெட்டுப்போன உணவு குளியல்

ஸ்காட்லாந்தில் திருமணத்திற்கு முன்பு வித்தியாசமான ஒரு சடங்கு மணமக்களுக்கு செய்யப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு மணமக்கள் மீது அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழுகிய முட்டைகள், கெட்டுப்போன பால், நாய் உணவுகள், வெல்லப்பாகு, கெட்டுப்போன மீன்கள் இப்படி மோசமான பொருட்களை அவர்கள் மீது தெளித்து அவர்களை குளிப்பாட்டுகிறார்கள். அதன்பிறகு அப்படியே மணமக்கள் நகரத்தை சுற்றி அழைத்துச்செல்லப்படுகிறார்கள். இப்படி செய்யப்பட காரணம் திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் சேர்ந்து வாழக்கூடிய வாழ்க்கையில் எந்தவிதமான கடினமான கஷ்டங்கள் வந்தாலும் அவர்கள் அதற்கு பக்குவப்பட வேண்டும் என்பதற்காக இந்த பாரம்பரிய நிகழ்வு நடத்தப்படுகிறது.

5. இறந்தவர்களுக்காக விரல்களை துண்டிக்கும் பெண்கள்

இந்தோனேஷியாவில் உள்ள டானி பழங்குடியினரிடம் ஒரு வித்தியாசமான பாரம்பரியம் உள்ளது. அதாவது அவர்கள் குடும்ப உறுப்பினர் காலமானால் அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் இறந்தவர்களால் ஏற்பட்ட மன வலியோடு சேர்த்து உடல் வலியையும் அனுபவிக்க வேண்டும். அப்படி என்ன வித்தியாசமாக செய்கிறார்கள் தெரியுமா? பெண்கள் தங்களுடைய விரல்களின் ஒரு பகுதியை துண்டித்து கொள்கிறார்கள். இது அவர்களின் மூதாதையர்கள் ஆவிகளை திருப்தி செய்வதற்காக செய்யப்படுகிறதாம். ஆனால் இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் இந்த வழக்கத்தை ஆண்கள் யாரும் பின்பற்ற மாட்டார்கள். பெண்களுக்கு மட்டுமே இந்த வலி நிறைந்த பாரம்பரிய கொடுமை உள்ளது. எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு மட்டுமே அதிக வலியையும் வேதனையையும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

6. சுக பிரசவத்திற்காக எரியும் நிலக்கரி மீது நடப்பது

சீனாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வித்தியாசமான ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. சீனாவில் கர்ப்பிணி மனைவியை கணவர் தோள் மீது சுமந்து கொண்டு வெறும் கால்களால் எரிந்துகொண்டிருக்கும் நிலக்கரி மீது நடந்து செல்லும் ஒரு நடைமுறை உள்ளது. இப்படி செய்தால் மனைவிக்கு எளிதான சுகப்பிரசவம் நடைபெறும் என நம்பப்படுகிறது.

7. திருமணத்திற்கு பிறகு மூன்று நாட்கள் குளியலறைக்கு தடை

பல நாடுகளிலும் திருமணச் சடங்குகள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் ஒருசில நாடுகளில் திருமணச்சடங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நடைமுறைதான் இது. வடக்கு போர்னேவில் உள்ள டிடாங்க் பழங்குடியினரிடம் வித்தியாசமான திருமணச் சடங்கு முறை உள்ளது. அதாவது இங்குள்ளவர்களுக்கு திருமணம் ஆனால் திருமணம் ஆனதிலிருந்து மூன்று நாட்கள் வரை தம்பதிகள் குளியலறையை பயன்படுத்தக்கூடாது.

மூன்று நாட்கள் குளிக்க கூடாது என நீங்கள் நினைத்தால் தவறு. இந்த மூன்று நாட்களும் சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், குளிப்பது இப்படி எதையும் அவர்கள் செய்யக்கூடாது. எப்படிப்பட்ட மோசமான பழக்க வழக்கம் பாருங்கள். இந்த நாட்களில் அவர்கள் மிகவும் சிறிய அளவிலேயே சாப்பிட்டு, குடித்து நாட்களை கழிக்கிறார்கள். சுமார் 72 மணி நேரம் எந்தவித இயற்கை உபாதைகளையும் கழிக்காமல் எப்படி அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியும் நினைத்துப் பாருங்கள். இப்படியும் மிக மோசமான திருமண சடங்குகள் நடைபெறுகிறது.

8. கழுத்தை நீளமாக்கும் பெண்கள்

தாய்லாந்தில் உள்ள கரேன் பழங்குடியினர் தங்களுடைய கழுத்தில் வளையங்கள் அணிந்து நீண்ட கழுத்துகளாக மாற்றுகிறார்கள். அவர்களுடைய பாரம்பரியத்தில் மிக முக்கியமான ஒன்றாக இது இருக்கிறதாம். இப்படி அவர்கள் நீண்ட கழுத்தை பெறுவதற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். இப்படி கழுத்தை நீளம் ஆக்குவதற்கு வளையங்களை கழுத்தில் தொடர்ந்து அணிந்து கொண்டு வருகிறார்கள். இது அவர்களுக்கு அழகு மற்றும் நேர்த்தியுடன் இருக்கிறதாம். பெண்கள் ஐந்து வயதாக இருக்கும் பொழுது கழுத்தை உயரம் ஆக்குவதற்கு இப்படி வளையத்தை அணிய தொடங்குகிறார்கள். தொடர்ந்து வளர வளர வளையங்களை அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள்.

9. குழந்தையின் நஞ்சுக்கொடியை சாப்பிடுவது

ஒரு சில நாடுகளில் குழந்தை பிறந்த பிறகு நஞ்சுக்கொடியை தாய்க்கு சாப்பிடக் கொடுக்கிறார்கள். இந்த நஞ்சுக்கொடியில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக இந்த பாரம்பரியம் சீனா, ஜமைக்கா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

Related posts

Leave a Comment