அறிந்திராத உண்மைகள்

ஒரு வருடத்தில் 26897 லிட்டர் பால் கொடுத்துள்ள பசு! பசுவின் பால் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

பால் பலருக்கும் பிடித்த ஒன்று. நாம் குடிக்கும் பாலில் அதிக அளவை நமக்கு கொடுப்பது பசு. தினமும் பாலை ஏதாவது ஒரு ரூபத்தில் பயன்படுத்தும் நீங்கள் பசுவின்பால் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பசு ஒரு நாளைக்கு சராசரியாக 28 லிட்டர் பாலை கொடுக்கிறதாம்.

நம்முடைய நாட்டில் உள்ள பசுக்கள் இந்த அளவிற்கு பாலைக் கொடுப்பது கடினமே. இந்தியாவில் உள்ள பசுக்கள் 10லிருந்து 15 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கொடுக்கிறது.

ஜெர்சி பசுக்கள் இருபதிலிருந்து இருபத்தைந்து லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கொடுக்கிறது.

அமெரிக்காவில் பண்ணைகளில் வளர்க்கப்படக்கூடிய பசுக்கள் ஒரு நாளைக்கு எழுபது லிட்டர் வரைக்கும் பால் கொடுக்கிறதாம்.

தற்பொழுது இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் உள்ள பண்ணைகளில் ஜெர்சி மற்றும் ஹை பரீட் இன பசுக்களிலிருந்து 60 லிட்டர் பால் வரைக்கும் கிடைக்கிறதாம்.

ஒரு பசு தன்னுடைய வாழ்நாளில் 350,000 கப் பாலை உற்பத்தி செய்கிறதாம்.

ஒரு ஆண்டில் பசு 8,500 லிட்டர் பாலை கொடுக்கிறதாம்.

அமெரிக்காவில் உள்ள பால் பண்ணைகள் ஆண்டுதோறும் சுமார் 21 பில்லியன் கேலன் பாலை உற்பத்தி செய்கிறதாம்.

பசுக்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 45 கிலோ உணவை உண்கிறதாம். 190 லிட்டர் தண்ணீர் குடிக்குமாம்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் தேசிய பால் மாதமாக கொண்டாடப்படுகிறது.

ராப்தோம் சூ பேடி என்ற ஹோல்ஸ்டீன் பசு ஒரு வருடத்தில் 26897 லிட்டர் பால் கொடுத்துள்ளது.

பாலில் இருந்து செய்யப்படக்கூடிய பால் பொருள்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

2011 ஆம் ஆண்டில் பால் பண்ணைகள் 260 மில்லியன் கறவை பசுக்களில் இருந்து சுமார் 730 மில்லியன் டன்கள் பாலை உற்பத்தி செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதியிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.

உலகளவில் 6 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்கிறார்கள்.

பண்டைய கலாச்சாரங்களில் பால் கடவுளின் உணவாக கருதப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment