November 27, 2022
அழகு குறிப்புகள்

ஒரு வாரத்தில் முகம் வெண்மையாக ​இந்த பேஸ் பேக் பயன்படுத்துங்க!!

கோடைகாலத்தில் முகத்தில் பலருக்கும் வறட்சி மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் பலரும் பேஸ் பேக் பயன்படுத்துவர்.

முகத்தில் பேஸ் பேக் தொடர்பாக பயன்படுத்துகிறவர்களுக்கு இந்த பேக் பயன்படுத்தாமல் இருந்தால் மிகவும் இருடேஷன் ஆக இருக்கும்.

தற்போது உள்ள ஊரடங்கு காரணமாக பலரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலையில் பார்லர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பலரும் இதனால் தங்கள் வீடுகளிலேயே பேஸ் பேக்குகளை தயாரித்து பயன்படுத்துகின்றனர்.

இந்த தொகுப்பிலும் வீட்டிலேயே எளிமையான முறையில் காய்கறிகளை பயன்படுத்தி முகத்தை வெண்மையாக்க பயன்படும் பேஸ் பேக் எப்படி தயாரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய காய்கறியில் ஒன்று வெள்ளரிக்காய்.

இது சருமத்தின் எரிச்சல், அரிப்பு, தடிப்பு போன்றவற்றை நீக்ககூடியது. மேலும் கண்களின் கரும்புள்ளிகளை மறையச்செய்யகூடியது. இந்த வெள்ளரிக்காயுடன் தக்காளி கலந்து எப்படி பேஸ் பேக் செய்வது.

தேவையான பொருள்கள் :

தக்காளி – 1

வெள்ளரிக்காய் – பாதி

செய்முறை:

முதலாவது வெள்ளரிக்காயை தோல் சீவி நன்கு அரைத்து கொள்ளுங்கள். அதன்பின் தக்காளியை நன்கு மசிக்கவும்.

மசித்த தக்காளியை அரைத்து வைத்த வெள்ளரிக்காயுடன் சேர்த்து நன்றாக கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவ வேண்டும். அதன்பின் வட்டவடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்யுங்கள்.

இந்த கலவையை முகத்தில் முப்பது நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் மறைந்து முகம் பொலிவு பெறும்.

இந்த பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் முகம் பிரகாசம் அடையும் .

Related posts

Leave a Comment