November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

உங்களில் பலருக்கும் தெரியாத சுவாரஸ்யங்கள்

சூறாவளி காற்றின் மூலம் ஏற்படும் மோசமான அழிவுகளை நாம் பார்த்திருக்கிறோம். உலகின் அனைத்து அணு ஆயுதங்களையும் விட 10 நிமிடங்களில் ஒரு சூறாவளி அதிக ஆற்றலை வெளியிடுகிறது. அணு ஆயுதங்களை விட மிகவும் மோசமானது சூறாவளி.

சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் பால் பாயின்ட் பேனாக்களை பயன்படுத்துவதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து போகிறார்களாம்.

மரணம் எல்லோரையும் பீதியடைய செய்யும். ஆனால் ஏராளமான மக்கள் மரணத்தை விட சிலந்திகளுக்கு பயப்படுகிறார்களாம். உங்களுக்கு சிலந்தி பயம் உண்டா?

தனிப்பட்ட விளம்பரங்கள் அல்லது ஆன்லைன் செயலிகளில் டேட்டிங் செய்யும் நபர்களில் 35 சதவீதம் பேர் ஏற்கனவே திருமணமானவர்களாம். மேலும் ஆண்கள் பெண்களை விட மூன்று மடங்கு அதிகமாக இப்படி செய்கிறார்களாம். டேட்டிங் செய்பவர்கள் இதை கவனிக்க.

200 கோடி மக்களில் ஒருவர் மட்டுமே 116 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுவரை உயிர்வாழ்கிறார்.

பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக கண்ணை சிமிட்டுகிறார்களாம். ஒரு முட்டாள்தனமான செயலைச் செய்தபின் மனைவிகள் தங்கள் கணவரின் முன்னால் ஐந்து மடங்கு கண் சிமிட்டுகிறார்கள் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஆண்கள் இதை யாரும் உங்கள் மனைவியிடம் காண்பிக்காதீர்கள். அப்புறம் சிமிட்ட கண்கள் இருக்காது.

ஒரு முதலை தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

பண்டைய எகிப்தில் பூசாரிகள் தங்கள் புருவங்கள் மற்றும் கண் இமைகள் உட்பட உடலில் இருக்கும் ஒவ்வொரு முடியையும் பிடுங்கி எடுப்பார்களாம். உடலில் எங்கும் முடி இருக்காதாம்.

Related posts

Leave a Comment