தினமும் நாம் ஏராளமான கனவுகளை கண்டு வருகிறோம். முந்தைய நாளின் இரவில் நாம் காணும் கனவுகளை அப்படியே நினைவில் வைத்திருந்து அடுத்த நாள் அந்த கனவை பற்றி அதிகம் சிந்தித்து கொண்டிருப்போம். அப்படி நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தங்களும் உண்டு. அதில் பலரும் கடவுளை கனவு காண்பர். அதன் அர்த்தம் என்ன என தெரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். அப்படி நீங்கள் உங்கள் கனவில் விநாயகரை கண்டால் என்ன அர்த்தம் என்பதை பற்றி பார்ப்போம்.
விநாயக பெருமான் விக்நகர்த்தா என்றும் அழைக்கப்படுகிறார். அப்படியென்றால் தடைகளை அனைத்தையும் நீக்குபவர் என அர்த்தம். தன்னுடைய பக்தர்களுக்கு எப்பொழுதும் நன்மைகளை செய்பவர். விநாயகரை பற்றி நாம் காணும் கனவுகள் நிச்சயம் நமக்கு நல்ல அறிகுறியை தரும். விநாயகரை வணங்குவது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். உங்கள் துக்கங்கள் குறையும். தடைகள் நீங்கும்.
புதிதாக தொடங்கும் செயல்களுக்கு முன்னதாக விநாயகரை வணங்குவது வழக்கம். விநாயகரை வணங்கி தொடங்கும் செயல்கள் இடையூறுகள் இல்லாமல் நல்லபடியாக நடந்து முடியும் என்பது நம்பிக்கை. அதனால் விநாயகரை பற்றி நீங்கள் கனவு காணும் பொழுது நீங்கள் செய்யும் செயல்களில் மிகப்பெரிய வெற்றியை பெறுவீர்கள் என அர்த்தம். விநாயகரை கனவில் காண்பதால் உங்கள் வாழ்க்கையில் சந்தோசம் மேலோங்கும். விநாயகரை நீங்கள் உங்கள் கனவில் காணும் பொழுது உங்களுக்கு தொழில் மற்றும் வேலையில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும்.
நீங்கள் விநாயக பெருமானிடம் ஏதாவது விஷயங்கள் நல்லபடியாக நடக்க வேண்டுதல் செய்திருந்தது அதை மறந்து செய்யாமல் விட்டிருந்தால் அதை நினைவு கூறும் விதமாகவும் விநாயக பெருமான் உங்கள் கனவில் வரலாம். அதனால் நீங்கள் வேண்டுதல் செய்து அதை நிறைவேற்றாமல் விட்டிருந்தால் உடனடியாக அதை நிறைவேற்றி விடுங்கள். இல்லையென்றால் அடிக்கடி நினைவுபடுத்தும் விதமாக விநாயக பெருமான் உங்கள் கனவில் வரலாம்.
அதிக அளவில் பிரச்சனைகளால் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் கனவில் விநாயகர் உங்களை பார்ப்பது போல நீங்கள் கண்டால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கள் அறியாமலே உடனடியாக குறையும். உங்களுக்கு திடீர் பணவரவுகள் இருக்கும்.
விநாயகர் உங்கள் கனவில் வந்து உங்களை கட்டி பிடிப்பது போல கண்டால் மோசமான பிரச்சனைகள் மற்றும் தடைகள் விரைவில் மறைந்து விடும்.
உங்கள் கனவில் விநாயகர் சிலையை கண்டால் செய்யும் செயல்களில் முன்னேற்றமும், குடும்பத்தில் செழிப்பு மற்றும் செல்வத்தை அதிகரிக்கும்.
விநாயகரின் புகை படத்தை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்கள் பணிகள் அனைத்தும் அமைதியாக தடையின்றி எந்தவித இடையூறும் இல்லாமல் நடக்கும்.
நீங்கள் உங்கள் கனவில் விநாயகரின் உடைந்த சிலையை கண்டால் உங்கள் வியாபாரத்தில் பண இழப்புகளையும், நெருக்கடியையும் சந்திக்க நேரும் என அர்த்தம். இந்த கனவு உங்களுக்கு வந்தால் நீங்கள் செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் கனவில் விநாயகர் மற்றும் லட்சுமி ஆகிய இருவரையும் ஒரு சேர கண்டால் நீங்கள் செய்யும் செயல்கள் தடையில்லாமல் முடிந்து செல்வ செழிப்பும் அதிகரிக்கும். நீங்கள் நினைக்காத இடத்தில் இருந்து திடீர் லாபம் வந்து சேரும்.
நீங்கள் உங்கள் கனவில் கோவிலுக்கு சென்று விநாயகரை வணங்குவது போல கண்டால் நீங்கள் நீண்ட காலமாக நினைத்து கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். தொழில் மற்றும் பண விசயங்களில் மிகுந்த சேர்க்கை உண்டாகும்.
படிக்கும் குழந்தைகள் கனவில் விநாயகரை கண்டால் அவர்கள் படிப்பில் மேலும் சிறந்து விளங்குவார்கள். அவர்களின் அறிவும் புத்தி கூர்மையும் அதிக அளவில் அதிகரிக்கும்.
விநாயகருடன் சிவபெருமானையும் நீங்கள் உங்கள் கனவில் கண்டால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பணம், பெயர் மற்றும் புகழ் என அனைத்தையும் ஒருசேர பெறுவீர்கள் என அர்த்தம்.
விநாயகருடன் பார்வதியை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் அன்பு,பாசம்,செல்வம்,வெற்றி எல்லாம் உங்களை வந்துசேரும்.
விநாயகருடன் சிவலிங்கத்தை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் எல்லா விதத்திலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என அர்த்தம்.
விநாயகரின் பச்சை நிற சிலையை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு பெயர், புகழ், வெற்றி ஒருசேர வந்துசேரும்.
விநாயகரின் வெள்ளை நிற சிலையை நீங்கள் உங்கள் கனவில் காண்பது சிறந்த கல்வி அறிவு மற்றும் ஆன்மீக அறிவை நீங்கள் பெற போகிறீர்கள் என அர்த்தம். மாணவர்கள் வெள்ளை நிற சிலையை காண்பது அவர்களின் தேர்வுகளின் வெற்றியை உறுதி செய்கிறது.
விநாயகரின் நீல சிலையை கனவில் காண்பது மந்திர, தந்திரங்களில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் நீங்கள் அதில் வெற்றி பெறுவதையும் குறிக்கிறது. சித்து மற்றும் மந்திர தந்திரங்களில் நீங்கள் வல்லவர்களாக மாறுவீர்கள். மேலும் நீல நிற விநாயகர் சிலையை காண்பது உங்களுக்கு ஏற்படும் தீய சக்தியின் பார்வையிலிருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள்.
விநாயகரின் மஞ்சள் நிற சிலையை கனவு காண்பது கடன் பிரச்னை காரணமாக கலங்கி காணப்படுபவர்களுக்கு விரைவில் கடன் தொல்லைகள் நீங்கி சந்தோசமாக இருப்பார்கள்.
விநாயகரின் சிவப்பு சிலையை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்திலோ விரைவில் குழந்தை பிறக்க போகிறது என்பதை குறிக்கிறது.
எலியுடன் விநாயகரை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் செழிப்பு, சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்க போகிறது என அர்த்தம்.
விநாயகர் லட்டு சாப்பிடுவது போல நீங்கள் கனவு கண்டால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உடல் நல பிரச்சனை இருப்பவர்களுக்கு விரைவில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ஆரோக்கியமாக மாறுவார்கள்.