சமையல்

உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க வேண்டுமா…? அப்படீனா இந்த சூப்பை தினம் இப்படி சாப்பிடுங்க…!

முட்டைகோஸை சூப் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதில் அதிக அளவு நார்ச் சத்து உள்ளதால் செரிமான மண்டலத்தை சீராக இயக்கி மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும். உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய் ஆகியவற்றை குணப்படுத்தும். காலையில் தினமும் வெறும் வயிற்றில் இந்த சூப்பை பருகினால் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையும்.

உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க முட்டைகோஸ் சூப்பை நீங்கள் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருள்கள்:

முட்டைகோஸ் – கால் கிலோ

மிளகு – அரை டீஸ்பூன்

சீரகம்- அரை டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி தழை – சிறிதளவு

மிளகு தூள் – அரை டீஸ்பூன்

செய்முறை:

முதலில் முட்டைகோஸை நன்கு கழுவி சிறிதாக நறுக்கி பின்னர் கடாயில் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.

தாளித்ததும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பின்பு நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து கொதித்ததும் அதனை வடிகட்டி மிளகுத்தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து குடிக்கவும்.

Related posts

Leave a Comment