November 27, 2022
உடல்நலம்

குளிர்காலதில் குழந்தைகளுக்கு நோய் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. நம் குழந்தைகள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு வகையான நோய்கள் எளிதில் தாக்கும் வகையில் குழந்தைகள் இருக்கின்றனர்.

குறிப்பாக, தற்போதைய பருவ காலத்தில் குழந்தைகளுக்கு நோய் ஏற்படுவது இயல்பானதுதான். அதே நேரம், குழந்தைகளிடம் ஆரோக்கியமான, சுகாதாரமான பழக்க வழக்கங்களை நாம் கற்பிப்பதன் மூலமாக அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி அவர்களிடமிருந்து நோய்களை விரட்டி அடிக்கலாம்.

குழந்தைகளுக்கு பெரும்பாலான நோய்க்கிருமிகள் கைகளில் இருந்து வாய் வழியாக பரவுகிறது. குறிப்பாக அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொம்மைகள் மற்றும் இதர விளையாட்டு பொருட்கள் போன்றவற்றில் கிருமிகள் தொற்றிக் கொண்டிருக்கும்.

அவற்றை வைத்து விளையாடிவிட்டு, அப்படியே அதே கைகளோடு வாயில் விரல் வைப்பது அல்லது தின்பண்டங்களை சாப்பிடுவது போன்றவை மூலமாக நோய் கிருமிகள் பரவுகிறது. ஆகவே, எப்போதும் குழந்தைகள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

சளி, இருமல் போன்ற தொற்றுகள் பாதிக்கப்பட்டவர்களின் மூக்கில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாகவே பிறருக்கு பரவுகிறது. அந்த நீர்த்துளிகள் உங்கள் குழந்தைகளின் மூக்கு, கண்கள், வாய் போன்ற பகுதிகள் மூலமாக பரவக்கூடும்.

எனவே முகத்தை கழுவுவதற்கு முன்பாக கையை கொண்டு முகத்தை தடவுவதால் கிருமிகள் கைகளிலும் ஒட்டிக் கொள்ளக்கூடும். ஆகவே, தேவையின்றி முகத்தில் கை வைக்க கூடாது.

அதே போல் எல்லோருக்கும் தூக்கம் என்பது முக்கியமானது என்றாலும் கூட, குழந்தைகளுக்கு அது மிக, மிக அவசியமாகும். போதுமான தூக்கம் இல்லை என்றால் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக் கூடும்.

ஆகவே, குழந்தைகள் நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கம் தூங்குவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். இரவு தூங்க வேண்டிய நேரத்தில் டிவி பார்ப்பதை நாம் தடுக்க வேண்டும்.

இப்போது எல்லாம் பெரும்பாலும் குழந்தைகள் டிவி, மொபைல் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கி விடுகின்றன. பெரும்பாலான குழந்தைகள் விளையாடுவதோ அல்லது உடற்பயிற்சி செய்வதோ கிடையாது. இதனால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்குகிறது. ஆகவே, குழந்தைகளை அன்றாடம் மாலை வேளையில் விளையாடுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

அதேபோல் வளரும் இளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அதிக அளவில் தேவைப்படும். ஆகவே, வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சாப்பிட கொடுக்கவும். குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.

அரசின் சுகாதாரத்துறை பரிந்துரை செய்யும் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு தவறாமல் செலுத்த வேண்டும். பெரும்பாலான தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து இது தற்காத்துக் கொள்வதற்கான பெரும் அரணாக அமைகிறது.

அம்மை, காசநோய், மஞ்சள்காமாலை, இளம்பிள்ளை வாதம் போன்ற பெரும் நோய்களை தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் மூலமாகத்தான் நாம் வெற்றி கொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

குறிப்பாக, உலகையே ஆட்டி வைத்த கொரோனாவில் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்ள உதவியது தடுப்பூசிகள் தான் என்பதை நம் மனதில் வைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கான தடுப்பூசியை தவறாமல் அந்த நாட்களில் நாம் செலுத்த வேண்டும்.

Related posts

Leave a Comment