May 30, 2020
செய்திகள்

டிராஃபிக்- ல் ஆகி விடுமா வாட்ஸ்ஆப்…..இனிமே 15நொடிகள் மட்டுமே ஸ்டேட்டஸ்!!

வாட்ஸ்ஆப்-பை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன. வாட்ஸ்ஆப் நிறுவனம் ஸ்டேட்டஸ் போடும் வசதியை கடந்த 2017ஆம் ஆண்டு கொண்டுவந்தது.

வாட்ஸ்அப் செயலியில் பலரும் ஸ்டேட்டஸ் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் உள்ள ஸ்டேட்டஸ் வசதி மூலம் இனி 15 நொடிகளுக்கும் குறைவாக உள்ள வீடியோக்களை மட்டுமே அனுப்ப முடியும் என்ற வகையில் அப்டேட் செய்யப்படவுள்ளது.

இந்த ஸ்டேட்டஸில் தங்கள் மனம்போல் வீடியோக்களை வைப்பர். இந்த வீடியோ அதிகபட்சம் ஒரு நாள் முழுவதும் அந்த ஸ்டேட்டஸில் வைத்திருக்க முடியும். இந்த வீடியோக்களை அனுப்புவதில்தான் தற்போது ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது, ஸ்டேட்டஸில் அனுப்பப்படும் ஒவ்வொரு வீடியோவும் இனி 15 நொடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 16-நொடி அல்லது அதற்கும் மேற்பட்ட வீடியோக்களை அனுப்ப முடியாது.

கொரோனாவைத் தவிர்க்க தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ்ஆப் பயனாளிகள் ஸ்டேட்டஸ் மூலம் ஏராளமான வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதனால், தங்கள் சர்வர் பிஸி ஆகி விடக்கூடாது என்பதற்காக வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த வீடியோ நேரக் குறைப்பில் ஈடுபட்டுள்ளது.

Related posts

Leave a Comment