August 18, 2022
தகவல் லைப் ஸ்டைல்

குழந்தை பெற்ற பெண்கள் மீண்டும் எப்போது தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம்…?

நம் அனைவரின் இல்லற வாழ்வை இனிமையாக்குவது தாம்பத்திய உறவுதான். ஒரு பெண் தாம்பத்தியத்தில் முழுமையடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்த பின்னர், மீண்டும் தன் கணவருடன் எப்போது இணையலாம், எப்போது இணைந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பதை பற்றி இந்தப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை பெற்ற பிறகு ஒரு பெண் தாம்பத்தியத்தில் இணைய குறிப்பாக எந்த நேரமும் இல்லை என்றாலும் இது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

ஏனெனில் குழந்தை பெற்றபின் உடலுறவை மீண்டும் தொடங்கும் முன் ரத்தப்போக்கு நின்றுவிட்டதா என்பதை உங்கள் மருத்துவர் உறுதிப்படுத்தி கொள்ள சொல்ல கூடும். பிரசவத்திற்கு நான்கு வாரங்களுக்கு பிறகான உடலுறவு கொள்வது கூட சில சமயம் யோனி நோய் தொற்றை ஏற்படுத்தி விட கூடும்.

பொதுவாக புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு தூக்கம் என்பதே இருக்காது. எப்போதும் குழந்தையை பார்த்து கொள்வதே முக்கிய வேலையாக இருக்கும். எனவே குழந்தை பிறந்த சில வாரங்களுக்கு துணையுடன் சேர வேண்டும் என்ற பாலியல் விருப்பம் தோன்றாது.

அந்த மனநிலைக்கு திரும்ப சில நாட்கள் அல்லது வாரங்கள் பிடிக்கும். உடல்,மனம் இரண்டிற்கும் எப்போது பிரசவ அனுபவம் மற்றும் குழந்தையை பார்த்து கொள்ளும் பொறுப்பிலிருந்து சற்று நிம்மதி கிடைத்து ஒழுங்காக தூங்க முடிகிறதோ அப்போதுதான் துணையுடன் சேரும் உணர்வே எழும்.

பிரசவத்திற்குப் பிறகு உடலுறவில் ஏற்படும் மிகவும் பொதுவான சிக்கல்கள் யோனி வறட்சி, மெல்லிய யோனி திசு, யோனி திசுக்கள் நெகிழ்ச்சியற்று இருப்பது, ரத்தப்போக்கு, தசைகளில் தளர்வு, புண், சோர்வு உள்ளிட்ட பல இருக்கும்.

எனவே எப்படி பார்த்தாலும் குழந்தை பேறுக்கு பின் சராசரியாக நான்கு முதல் ஆறுவாரங்கள் கழித்து உறவுக்கு தயாராவதே சரியாக இருக்கும். குழந்தை புதிதாய் பிறந்த பிறகு உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் அதிக வலியை தவிர்க்க பெண்கள் என்ன செய்யலாம்.

சூடான குளியல்:

குழந்தை புதிதாக பெற்றெடுத்துள்ள பெண்கள் துணையுடன் உடலுறவு கொள்ளும் முன், வெது வெதுப்பான அல்லது மிதமான சூட்டில் உள்ள நீரில் குளிக்கலாம். இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை விடுவித்து உடலுறவுக்கு தயார்படுத்த உதவும். குழந்தை பேறுக்கு பின் உடலுறவு கொள்ளும் போது எரியும் உணர்வு அல்லது வலி ஏற்பட்டால் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம்.

புதிய நிலை:

குறிப்பாக பிரசவத்திற்குப் பிறகு வழக்கமாக உடலுறவு கொள்ளும் நிலையால் அந்தரங்க பகுதியில் வலி, காயம் போன்ற அசௌகரியம் ஏற்பட்டால் புதிய பொஷிஷன்களை முயற்சித்து பார்க்கலாம். ஆனால் தம்பதி இருவருக்குமே சிறந்தது எது என்பதை அறிய பல நிலைகளை முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

அவசரம் வேண்டாம்:

கர்ப்ப காலத்தில் பெரும்பாலானோர் ரிஸ்க் வேண்டாம் என்று உடலுறவை தவிர்த்திருப்பார்கள். நீண்ட காலத்திற்கு பின் சேருவதால், மென்மையான வழியை கையாளலாம். கடினமான உடலுறவில் ஈடுபடுவதை சில நாட்கள் தவிர்ப்பது நல்லது.

உடற்பயிற்சி:

பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முதன்மை விஷயம் உடற்பயிற்சி, ஸ்ட்ரெச்சிங் மற்றும் யோகா பயிற்சி. தினசரி ஸ்ட்ரெச் செய்வது தசைகளை தளர்த்தி மேலும் நெகிழவைக்கும். பிரசவத்திற்கு பின் இடுப்பு தசைகளை வலுப்படுத்துவது பெண்கள் தவறாமல் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று. உடலுறவின் போது பிரசவத்திற்குப் பிறகான வலியிலிருந்து விடுபட இது மிகவும் உதவும்.

Related posts

Leave a Comment