கிரிப்டோகரன்சிகள் எனப்படும் டிஜிட்டல் கரன்சிகள் மீதான ஆர்வம் சமீபத்திய ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது. எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கிரிப்டோகரன்சியை அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இன்றளவிலும் கிரிப்டோகரன்சி குறித்தான மசோதா உருவாக்கப்படும். இந்தியா சொந்தமாக டிஜிட்டல் கரன்சியினை வெளியிடும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் எந்த நாடு அதிக டிஜிட்டல் கரன்சிகள் எனப்படும் கிரிப்டோகரன்சியை அதிகம் வைத்துள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உக்ரைன்தான் டாப் இதில் உக்ரைன் மக்களின் வசம் 12.7% இருப்பதாகவும், இதன் மூலம் அதிக டிஜிட்டல் கரன்சிகளை வைத்திருக்கும் மக்கள் பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. இதே இரண்டாவது இடத்தில் வெனிசுலா மக்கள் 10.3%மும், சிங்கப்பூரில் 9.4%மும், கென்யா வசம் 8.5%மும், அமெரிக்காவில் 8.3%ம் மக்களும் வைத்துள்ளனர்.
இந்தியா வசம் கொரோனாவின் வருகைக்கு பிறகு இந்த கிரிப்டோகரன்சிகளின் மதிப்பானது பெரியளவில் ஏற்றம் கண்டது. யு என்(UN)அறிக்கையின் படி இந்திய மக்களின் வசம் 7% மேலாக கிரிப்டோகரன்சிகள் உள்ளது.
2021ம் ஆண்டில் கிரிப்டோகரன்சி வைத்திருக்கும் மக்கள் தொகையின் பங்கினை பொறுத்தவைரை, வளரும் நாடுகள் மொத்தம் இருபது நாடுகளில் பதினைந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன என்றும் ஐ.நா வர்த்தக அமைப்பு கூறியுள்ளது.
வளரும் நாடுகளில் அதிகரிக்கும் மோகம் இந்த டிஜிட்டல் கரன்சிகள் பணம் அனுப்புவதற்கும், பெறுவதற்கும் வசதியாக இருந்தலும், இதில் பிரச்சனைகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது. ஆக இவை நிலையற்ற டிஜிட்டல் சொத்துக்களாகவே பார்க்கப்படுகிறது. எனினும் வளர்ந்து வரும் நாடுகளில் கிரிப்டோகரன்சிகளை ஆதரிப்பதற்காக காரணிகளை ஆராய்ந்து வருகின்றன.
குறிப்பாக கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை, பணவீக்கத்துக்கு எதிரானது என பல காரணிகளை முன் வைக்கின்றன. கடுமையாகலாம் எனினும் சமீபத்திய சரிவினால் சந்தையில் அபாயம் இருப்பதாக முதலீட்டாளர்கள் சற்றே பின் வாங்க தொடங்கியுள்ளனர்.
மேலும் இந்தியாவில் மத்திய அரசுகள் இன்னும் கிரிப்டோகரன்சிகள் குறித்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம்,. இது கிரிப்டோகரன்சிகள் இருப்பினை மேலும் குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.