January 31, 2023
உடல்நலம்

சிறுநீர் நுரையாக வருதா? அப்போ இது தான் காரணம்!

ஒரு மனிதனின் முக்கியமான உடல் உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். இந்த சிறுநீரகம் யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது. இப்படி வெளிவரக்கூடிய இந்த சிறுநீர் சிலருக்கு சில சமயங்களில் நுரையுடன் வெளிப்படுகிறது. ஏன் இவ்வாறு வெளிப்படுகிறது, யாருக்கெல்லாம் இது அதிகமாக இருக்கும் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

நம் உடலில் இருந்து வடிகட்டப்படும் கழிவுகள் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. இந்த வடிகட்டுதல் முறை சரியாக இல்லையென்றால் சிறுநீர் நுரைக்கும் தன்மையுடன் வரும். இப்படி சிறுநீரில் அதிகபடியான நுரை வருவது சிறுநீரக நோயைக் குறிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

​தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு

தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சிறுநீரக நோய் இருந்தால் அது தைராய்டு சுரப்பியை பாதிப்பதாக என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் தைராய்டு ஹார்மோன்கள் தான் நம் உடலில் புரத தொகுப்பு மற்றும் உயிரணு வளர்ச்சியை பாதிக்கின்றது. எனவே இது நேரடியாகவே சிறுநீரக செயல்பாட்டை பாதிப்படைய செய்து விடும்.

​நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு ஏற்ற இறக்கத்தால் புரோட்டினூரியா பிரச்சினை உண்டாக வாய்ப்புள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகச் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக புரோட்டீன் இருந்தால்

சிறுநீரில் அதிக புரதம் இருப்பதை புரோட்டினூரியா என்று அழைக்கின்றனர். இப்படி அதிகப்படியான புரோட்டின் இருந்தால் சிறுநீரகம் இரத்தத்தை சுத்தம் செய்வது கடினம். ஒருவேளை உங்களுக்கு முன்பே சிறுநீரக பிரச்சினை இருந்தால் பலவீனமாக இருக்கும் சிறுநீரகம் உடலில் உள்ள புரத கழிவுகளை வெளியேற்ற ஆரம்பிக்கும். ஆகவே புரோட்டீன் கலந்த உணவுகளை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், கீல்வாதம் உடையவர்கள் மற்றும் இதய நோய் உடையவர்கள் கவனமாக இருப்பது சிறந்தது.

நீர்சத்து குறைபாடு

உடலில் உள்ள நீர்ச்சத்தை பாதுகாக்க மூளையானது சமிக்ஞை சிக்னலை அனுப்புகிறது. மேலும் சிறுநீரகங்களுக்கு இரத்தத்தில் இருந்து குறைந்த அளவு நீரை வெளியேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே நீங்கள் மிகவும் குறைவாக சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் அதிகமாக நீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது சிறந்தது.

Related posts

Leave a Comment