ஐபில் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி, தனது 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை பத்து ரன் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் நான்கு விக்கெட்டுகளை பிடித்து வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ள அந்த அணி சென்னையில் நடக்கவுள்ள இன்றைய போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அதிக ரன்களை சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறது.
கொல்கத்தாவிடம் 10 ரன் வித்தியாசத்திலும், பெங்களூருவிடம் 6 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவிய சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணி சரிவில் இருந்து திரும்பவும் மீள போராடி வருகிறது.
அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் சரிவில் இருந்து மீள்வதற்கு பவர்-பிளேயில் ஆதிக்கம் செலுத்துவதும், பேட்டிங்கில் வலுவான பார்ட்னர்ஷிப் அமைப்பதும் அவசியம் என்று சக வீரர்களை அறிவுறுத்தியுள்ளார் . அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக ஓய்வில் உள்ளதால் அவர் களமிறங்குவது சந்தேகிக்கப்படுகிறது.