போலீசை வாளால் மிரட்டி பரபரப்பை ஏற்படுத்திய பெண் சாமியார்!!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவில் 5 பேர்களுக்கு மேல் கூட்டம் கூட கூடாது என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் 50 பேர்களை கூட்டம் கூட்டி பெண் சாமியார் ஒருவர் பூஜை செய்து கொண்டிருந்தார்.

இந்த பூஜை நடைபெறுவதை அறிந்த போலீசார் அங்கு சென்று அதிரடியாக பக்தர்களை தடியடி நடத்தி விரட்டினர்.

இதனால் ஆவேசம் அடைந்த பெண் சாமியார் வாளை எடுத்து போலீஸாரை மிரட்டினார்.

இதனையடுத்து அந்த பெண் சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *