November 27, 2022
உடல்நலம்

காப்பர் டி பயன்படுத்தும் பெண்கள் இவைகளை தெரிந்து கொள்ளுங்கள்

காப்பர் டி


காப்பர் டி தற்காலிகமாக குழந்தை வேண்டாம்
என நினைக்கும் பெண்கள் பயன்படுத்தும்
ஒரு கருத்தடை சாதனம். ஒரு குழந்தை
பெற்ற பிறகு அடுத்த குழந்தை பெறுவதற்கு
இடைவெளி வேண்டும் என நினைக்கும்
பெண்களுக்கு காப்பர் டி ஒரு தற்காலிக தீர்வு.

காப்பர் டி
காப்பர் டி
காப்பர் டி
காப்பர் டி

கருத்தடையில் இரு வகைகள் உள்ளன.
தற்காலிகமாக கருத்தடை செய்வது மற்றும்
நிரந்தர கருத்தடை செய்வது. நிரந்தர
கருத்தடை செய்தால் பயமில்லை.
ஆனால் தற்காலிக கருத்தாடை பயன்படுத்தினால்
கண்டிப்பாக ஆறு மாதத்திற்கு
ஒரு முறை மருத்துவரை
அணுக வேண்டியது அவசியம்.

காப்பர் டி பொருத்தியவுடன் இரத்த போக்கு
அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால்
உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கால தாமதம் செய்ய கூடாது.

காப்பர் டி போட்டவுடன் கருத்தரிப்பு ஏற்பட்டால்
அந்த கற்பதை தொடரக்கூடாது.
ஏனென்றால் கரு கருக்குழாயிலேயே
தங்கிவிட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல்
நோய் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.

காப்பர் டி யில் காப்பர் இருக்கும் வரைதான் நல்லது.
அதில் காப்பர் இல்லாத பொழுது முட்டை
கர்ப்பப்பையை துளைத்து கொண்டு
உள்ளே போக அதிக வாய்ப்புகள் உள்ளது.

மாதவிலக்கு வந்த 10 நாள்களுக்குள்
காப்பர் டி போட வேண்டும்.

குழந்தை இல்லாதவர்கள் போடவே கூடாது
ஏனெனில் கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்பட்டு
குழந்தை பிறக்காமல் போக
கூடிய வாய்ப்புகள் உள்ளது.

காப்பர் டி பொருந்தியவர்கள்
ஆறு மாதத்திற்கு ஒருமுறை
கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

Related posts

Leave a Comment