ஆன்மீகம்

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் காமதேனு வழிபாடு

பலரும் பலவிதமான கஷ்டங்களால் அவதிப்படுவார்கள்.
முக்கியமாக பலருக்கும் பணக்கஷ்டம் தொடர்ந்து கொண்டே
இருக்கும். கடன் வாங்காமல் காலத்தை ஓட்ட முடியாது.
என்ன செய்தாலும் பெரிய அளவு முன்னேற்றம் இருக்காது
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு முக்கியமான வழிபாடு
முறையும் மந்திரமும் உள்ளது அதை பற்றி
விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

காமதேனு படத்தை உங்கள் வீட்டில் வைத்து வழிபாடு
செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்ப்போம்.
நம்முடைய வீடு பூஜையறையில் ஒரு சில பொருட்களை
வைத்து வழிபாடு செய்யும் பொழுது வீடு சுபிட்சமாக
இருக்கும். நல்லது எல்லாம் நடக்கும். நினைத்தது
நிறைவேறும் கேட்டது எல்லாம் கிடைக்கும். காமதேனு
பசு கன்றுடன் கூடிய ஒரு சிலை. இந்த சிலையை
உங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள். சிலை வாங்க
முடியாதவர்கள் காமதேனு படத்தை வாங்கி பிரேம் செய்து
உங்கள் பூஜையறையில் வையுங்கள். இந்த பசுவுடன் கூடிய
கன்றை பூஜையறையில் வைத்து தினமும் பாலபிஷேகம்
செய்ய வேண்டும். இந்த பசுமாட்டின் கொம்பு, நெற்றி ,
கால்கள், கன்று , பசுமாட்டின் மடி இவற்றிற்கு
சந்தன குங்குமம் வைத்து மல்லிகை பூவை காமதேனுவிற்கு
சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு இந்த காமதேனுவை
தொட்டு வணங்கி உங்களுடைய கோரிக்கையை வைக்க
வேண்டும். நியாயமாக நீங்கள் கேட்கக்கூடிய கோரிக்கைகள்
அனைத்தும் உடனடியாக நடக்கும்.
இந்த காமதேனுவை வீட்டில் வைத்து வழிபாடு
செய்வதால் உங்களுடைய செல்வநிலை உயரும்.
பணவரவு அதிகமாகும்.
பல நல்ல விஷயங்கள் நடக்கும்.
மேலும் இந்த மந்திரம் சொல்லி வழிபாடு
செய்ய அதிக நன்மைகள் நடக்கும்.
ஓம் சுபகாயை வித்மஹே
காமதாத்திரியை
சதீமஹி தந்னோ தேனு
ப்ரசோதயத்
இந்த மந்திரத்தை தினமும் 54 முறை காமதேனு சிலை மீது
உங்கள் கைகளை வைத்து சொல்லிவர வேண்டும். எல்லா
நன்மைகளும் செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கும்

Related posts

Leave a Comment