January 31, 2023
செல்வம்

உங்களுடைய உள்ளங்கையில் இப்படி ‘V’ வடிவம் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி

நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் சொல்லும் வகையில் நம்முடைய கைரேகை அமைந்திருக்கும். உங்களுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் அமையப்போகிறது என்பதை உங்களுடைய கைரேகையை வைத்து தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய உள்ளங்கைகளில் இருக்கக்கூடிய ரேகைகளையும் கோடுகளையும் வைத்து உங்களுக்கு எப்பொழுது அதிர்ஷ்டம் கிடைக்கும், நீங்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வீர்கள் என்பது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.

உங்களுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய தடைகளைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். இதை நீங்கள் தெரிந்து கொள்வதால் எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எப்படி சிறப்பாக சந்திக்கலாம் என்ற ஒரு மன தைரியம் உங்களுக்கு கிடைக்கும்.

உங்களுடைய உள்ளங்கையில் இப்படி v வடிவமானது இருந்தால், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் நீங்கள் அதிக அளவிலான வெற்றிகளையும், பணத்தையும் சம்பாதிப்பீர்கள். நீங்கள் கடந்த காலத்தில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள் ஆனால் இனி வரக்கூடிய காலங்களில் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாட்கள்.

இப்படிப்பட்ட கோடு இருப்பவர்கள் வாழ்க்கையின் முதல் பாதியில் அதிக அளவு கஷ்டப்படுவார்கள். ஆனால் அதன் பிறகு அவர்களுக்கான ஒரு வாய்ப்பு கிடைத்து அதில் மிகப்பெரிய அளவில் ஜொலித்து எல்லோரும் வியக்கும் வண்ணம் மிகவும் அதிர்ஷ்டசாலியாக, பணம், செல்வத்தை அதிக அளவில் சம்பாதித்து சந்தோஷமாகவும் இருப்பார்கள். மேலும் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய நண்பர்கள் உங்களை தாங்கிப்பிடிப்பவர்களாக இருப்பார்கள்.

எப்பொழுதும் உங்களுக்கு பல நன்மைகள் செய்பவர்களாக இருப்பார்கள். மிகவும் நம்பகமானவர்களாக இருப்பார்கள். உங்களுடைய வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் உங்களுடைய கூட இருப்பார்கள். உங்களுடைய கைரேகையில் காணப்படக்கூடிய இந்த V வடிவமானது நீங்கள் சமூகத்தில் மிகப்பெரிய புகழையும், பெயரையும் பெறுவீர்கள் என்பதைக்குறிக்கிறது. ஆனால் இப்படி நீங்கள் நினைப்பதெல்லாம் உடனடியாக நடப்பதில்லை.

உங்களுடைய வாழ்க்கையின் பின் பகுதியில் மட்டுமே நடக்கும். உங்களுடைய 35 வயதிற்குப் பிறகு நீங்கள் நினைத்தபடி அதிர்ஷ்டசாலிகளாக, பிறர் மதிப்பவர்களாக, வெற்றியாளராக வாழத்தொடங்குவீர்கள். அதுவரைக்கும் மிகப்பெரிய அளவிலான கஷ்டத்தை தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களுடைய முந்தைய வாழ்க்கையில் எந்த அளவிற்கு போராட்டங்களையும் கஷ்டங்களையும் சந்தித்தீர்களோ அதைவிட பல மடங்கு எல்லா விஷயத்திலும் மிக வேகமாக முன்னேறி செல்வீர்கள்.

இந்த v வடிவமானது உங்களுடைய கையில் இருந்து உங்களுக்கு இன்னும் 35 வயது ஆகவில்லை என்றால் நீங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய முயற்சியை தளர விடாதீர்கள். வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல உங்களுடைய முயற்சியும் சேர்ந்து தான் உங்களை மிகப்பெரிய அளவில் முன்னேற்றும். அதனால் என்ன கஷ்டம் வந்தாலும் உங்களுடைய முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள். தொடர்ந்து போராடிக்கொண்டிருங்கள்.

Related posts

Leave a Comment