September 28, 2022
அழகு குறிப்புகள்

இந்த சமையல் பொருட்களை கொண்டு எளிமையாக அக்குள் கருமையை மாற்றிவிடலாம்…!

நாம் அனைவரும் வெளிப்புற அழகிற்கு மட்டும் கவனம் செலுத்தும் அளவிற்கு உட்புற அழகில் கவனம் செல்லுவதில்லை. மனித உடலின் மேற்புற சருமங்களை விட சருத்தில் மூட்டுக்கள் இணையும் இடங்கள் கருமையாக இருக்கும்.

குறிப்பாக அக்குள் போன்ற இடங்களில் மிகவும் கருப்பாக இருக்கும். இது அக்குளின் அழகையே பாழாக்கி விடும். அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

அக்குள் பகுதி கருப்பாக இருக்கக்கூடாதெனில், அவ்விடத்தில் சரியான பராமரிப்பை அவ்வப்போது கொடுக்க வேண்டியது அவசியம். அக்குள் கருமையை எளிமையாக நீக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்:

நாம் தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணையை அக்குளில் தடவி காலையில் எழுந்து நன்கு கழுவ வேண்டும். அல்லது ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் சர்க்கரை சேர்த்து அக்குளில் நன்கு ஸ்க்ரப் செய்து பின் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதால் விரைவில் அக்குள் கருமையை மாற்றிவிடலாம்.

ஆலிவ் ஆயில்:

ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி சுமார் நாற்பது நிமிடங்கள் ஊற வைத்துப், பின் வெதுவெதுப்பான நீரால் கழுவி வந்தால் அக்குளில் உள்ள கருமை நீங்கும். தினமும் இதைச் செய்து வந்தால் அக்குள் கருமை விரைவில் நீங்கும்.

காய்ச்சாத பால்:

பாலிலுள்ள விட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலில் உள்ள கருமையை நீக்கி வெண்மையாக்குவதற்கு உதவுகின்றது. தினமும் ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை காய்ச்சாத பாலை அக்குளில் தடவி மசாஜ் செய்து, சுமார் இருப்பது நிமிடம் ஊற வைத்து, வெது வெதுப்பான நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால்
விரைவில் அக்குள் கருமையை மாற்றிவிடலாம்.

கடலை மாவு:

கடலை மாவுடன் தயிர் அல்லது காய்ச்சாத பால் சேர்த்து கலந்து கருமையாக இருக்கும் இடத்தில் போட்டு ஸ்க்ரப் செய்து, அரைமணி நேரத்தின் பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாம் செய்வதால் விரைவில் அக்குள் கருமையை மாற்றிவிடலாம்.

பேக்கிங் சோடா:

இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயற்பட கூடியது. பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் அப்படியே விட்டு பின் கழுவி, உலர வைக்க வேண்டும். இதை வாரத்தில் மூன்று முறை செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து நாம் செய்வதால் விரைவில் அக்குள் கருமை மாறிவிடும்.

எலுமிச்சை மற்றும் மஞ்சள் தூள்:

எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகும். எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாக பேஸ்ட்டாக்கி அதை அக்குளில் தடவி சுமார் முப்பது நிமிடங்கள் அப்படியே வைத்து பின் கழுவி வந்தால் அக்குளில் காணப்படும் கருமைநிறம் நீங்கும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இதைச் செய்யலாம்.

தயிர்:

தினமும் தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை அக்குளில் தடவி சுமார் பத்து நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும்போது விரைவில் மாற்றம் வரும்.

உருளைக் கிழங்கு:

தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு உருளைக்கிழங்குடன் சக்கரையை தோய்த்து அக்குளில் ஸ்க்ரப் போல் மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் நாளடைவில் கருமை மறையும்.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயில் பிளீச்சிங் தன்மை உள்ளது. தினமும் வெள்ளரிக்காயை அல்லது வெள்ளரிக்காய், மஞ்சள், சர்க்கரை சேர்த்து அக்குளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால் அக்குளில் உள்ள கருமை நீங்கும்.

கற்றாழை ஜெல்:

கற்றாழை ஜெல்லில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அக்குளின் கருமையைப் போக்கி வெண்மையாக்க உதவுகின்றது. நாள்தோறும் கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து வந்தால் அக்குளின் கருமை நிறம் மாறி பொலிவடையும்.

Related posts

Leave a Comment